என் மலர்tooltip icon

    இந்தியா

    விசாகப்பட்டினம் அரசு அலுவலக வளாகத்தில் தீ விபத்து- கார்கள் எரிந்து நாசம்
    X

    விசாகப்பட்டினம் அரசு அலுவலக வளாகத்தில் தீ விபத்து- கார்கள் எரிந்து நாசம்

    • தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
    • தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையாக வளாகத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்து கார்களுக்கு வேகமாக பரவி எரிந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் விலை உயர்ந்த பல கார்கள் எரிந்து நாசமானது. தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    தீ விபத்தில் கார்களின் சேதம் குறித்து மதிப்பிடப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×