search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KS Bharat"

    • இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.
    • விசாகப்பட்டினத்தில் பிறந்த இவர், 11 வயதில், ஆந்திராவின் உள்நாட்டு (domestic) அணியுடன் பயிற்சி செய்யத் தொடங்கினார்.

    இந்தியா -இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எஸ்.பாரத் ஆந்திர கிரிக்கெட் சங்கத்தால் கவுரவிக்கப்பட்டார்.

    அவர் தனது சொந்த ஊர் மைதானத்தில் இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடியதால் கௌரவிக்கப்பட்டுள்ளார். சொந்த ஊர் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடும் மாநிலத்தின் இரண்டாவது கிரிக்கெட் வீரர் பரத் ஆவார்.

     

    விசாகப்பட்டினத்தில் பிறந்த இவர், 11 வயதில், ஆந்திராவின் உள்நாட்டு (domestic) அணியுடன் பயிற்சி செய்யத் தொடங்கினார். 2005-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஒருநாள் போட்டி நடந்தபோது, அந்த போட்டியில் கே.எஸ்.பாரத் பால் யாயாக (Ball boy) இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவருக்கு முன்னர் இரு ஆந்திர வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடி உள்ளனர். அவர்கள் விஹாரி, எம்எஸ்ஏகே பிரசாத் ஆகியோர் ஆவர்.

    • முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளது.
    • இந்திய அணியில் இடம்பெற்றிருந்த இஷான் கிஷன் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

    ஜோகன்ஸ்பர்க்:

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என்று சமனில் முடிந்தது. தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

    ஒருநாள் தொடர் நிறைவடைந்த உடன் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பமாக உள்ளது. அதன்படி முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக கே.எஸ்.பாரத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி விவரம் பின்வருமாறு;-

    ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், கே.எல்.ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா , பிரசித் கிருஷ்ணா, கேஎஸ் பாரத்.

    • கடந்த முறை சவுதாம்டனில் வானிலை மிகவும் முக்கிய பங்காற்றியது.
    • வானிலைக்கு ஏற்றார்போல் நான் 12 வீரர்களை தேர்வு செய்கிறேன். எனது 12 வீரர்கள் பட்டியல் மிகவும் தெளிவானது.

    டெல்லி:

    இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக யார்இடம்பெற வேண்டும் என்ற விருப்பத்தை இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    மேலும், அணியில் எந்த வீரர்கள் இடம்பெற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரவி சாஸ்திரி கூறியதாவது:-

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை பார்க்கும்போது கடந்த முறை இறுதிப்போட்டியில் இருந்து நிறைய கற்றுக்கொள்வது முக்கியது. கடந்த முறை சவுதாம்டனில் வானிலை மிகவும் முக்கிய பங்காற்றியது.

    ஆகையால், அதற்கு ஏற்றார்போல் நான் 12 வீரர்களை தேர்வு செய்கிறேன். எனது 12 வீரர்கள் பட்டியல் மிகவும் தெளிவானது. அதில், ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, கோலி, ரஹானே, அடுத்த வீரர்களில் கேஎஸ் பரத்தா அல்லது இஷான் கிஷனா என்பதில் எதிர் அணி 2 சுழப்பந்து வீச்சாளர்களுடன் சென்றால் நான் கேஎஸ் பரத்தை சேர்ப்பேன்.

    ஆனால், எதிர் அணி 4 வேகப்பந்து வீச்சாளர்கள் 1 சுழற்பந்து வீச்சாளருடன் விளையாடினால் நான் இஷான் கிஷனை தேர்வு செய்வேன். அடுத்து ஜடேஜா, ஷமி, சிராஜ், ஷர்துல் தாகூர், அஸ்வின், உமேஷ் ஆகியோர் என் தேர்வு செய்யும் வீரர்கள் என ரவி சாஸ்திரி கூறினார்.

    ×