search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi Murder"

    • ஆயுதம் வைத்திருந்ததால் அந்த வாலியரை நெருங்குவதற்கு பயந்து பொதுமக்கள் ஒதுங்கி சென்றனர்.
    • குற்றவாளிகளுக்கு பயம் இல்லை, போலீசாரைப் பார்த்து பயப்படுவதில்லை என கெஜ்ரிவால் கூறி உள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லி ஷாபாத் டைரி பகுதியில் நேற்று இரவு சாக்ஷி என்ற 16 வயது மதிக்கத்தக்க இளம்பெண், தனது காதலனால் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    தோழியின் மகன் பிறந்தநாள் விழாவிற்குச் சென்ற அந்த பெண்ணை பின்தொடர்ந்து வந்த அவரது காதலன் ஷகில், சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளான். 20க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்தியதுடன் விடாமல், அருகில் கிடந்த கல்லையும் எடுத்து தலையில் போட்டுள்ளான். இதில் அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துபோனாள்.

    இந்த கொடூர கொலையை அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் பார்த்துள்ளனர். ஆனால் யாரும் அந்தப் பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் யாரும் இறங்கவில்லை. ஆயுதம் வைத்திருந்ததால் அந்த வாலியரை நெருங்குவதற்கு பயந்து ஒதுங்கி சென்றனர்.

    இதுபற்றி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு குற்றவாளியை உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாஹர் அருகே கைது செய்தனர்.

    பொதுமக்கள் கண்முன்னே நடந்த இந்த படுகொலை மிகவும் வேதனை அளிப்பதாகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.

    "குற்றவாளிகளுக்கு பயம் இல்லை, போலீசாரைப் பார்த்து பயப்படுவதில்லை. கவர்னர் அவர்களே, சட்டம் ஒழுங்கு உங்கள் பொறுப்பில்தான் உள்ளது, எதாவது செய்யுங்கள். டெல்லி மக்களின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம்" என்றும் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
    • டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் டெல்லி போலீசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள தெருவில் நடந்த படுகொலை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    டெல்லி ரோகினி பகுதியில் நேற்று மாலை 16 வயது மதிக்கத்தக்க இளம்பெண், அமைதியாக சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த அவரது காதலன், சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளான். கத்தியால் குத்தியதுடன் விடாமல், அருகில் கிடந்த சிமெண்ட் ஸ்லாப்பையும் எடுத்து தாக்கி உள்ளான் இதில் அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துபோனாள்.

    அந்த வழியாகச் சென்றவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர். அந்தப் பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் யாரும் இறங்கவில்லை. அந்த வாலியரை நெருங்குவதற்கு பயந்துள்ளனர்.

    இதுபற்றி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆதாரத்தை வைத்து குற்றவாளியை விரைவில் கைது செய்வோம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் டெல்லி போலீசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். "நடந்த குற்றம் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது, மக்கள் பலர் பார்த்துள்ளனர், ஆனாலும் குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாதுகாப்பாற்ற நகரமாக டெல்லி மாறிவிட்டது" என ஸ்வாதி மாலிவால் கூறி உள்ளார்.

    • போலீஸ் அதிகாரி அப்தாப் அமீனின் செல்போனை ஆய்வு செய்தார்.
    • ஷரத்தாவுடன் சாட் செய்த விவரங்களை அழித்து இருந்தார்.

    மும்பை :

    மும்பையை அடுத்த வசாயை சேர்ந்த இளம்பெண் ஷரத்தாவை அவரது காதலன் அப்தாப் அமீன் படுகொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அப்தாப் அமீன், ஷரத்தாவை கொலை செய்து 35 துண்டுகளாக உடலை வெட்டி வீசியவர் ஆவார்.

    இந்தநிலையில் மிககொடூரமான கொலை நிகழ்த்திய அவர் 'கூகுள் தேடல் வரலாறால்' (கூகுள் சர்ச் ஹிஸ்டரி) போலீசில் சிக்கிய சம்பவம் தெரியவந்து உள்ளது.

    ஷரத்தாவை காணவில்லை என அவரது தந்தை புகார் அளித்தது தொடர்பாக வசாய் மாணிக்பூர் போலீசார் டெல்லி மெக்ராலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கடத்தல் வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார், கடந்த 10-ந் தேதி சந்தேகத்தின் பேரில் காதலன் அப்தாப் அமீனை அவரது வீட்டில் பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.

    அப்போது அவர் கொலை செய்தற்கான எந்தவித சலனமும் இன்றி, அமைதியாக ஒன்றும் நடக்காதது போல போலீஸ் நிலையத்தில் இருந்து இருக்கிறார்.

    அப்போது போலீஸ் நிலையத்தில் ஷரத்தாவின் தந்தையும் இருந்தார். அவர் அப்தாப் அமீன், தனது மகள் ஷரத்தாவை அடிக்கடி அடித்து, உதைத்து சித்ரவதை செய்ததாக போலீசில் கூறினார்.

    இதுபற்றி போலீசார் அப்தாப் அமீனிடம் கேட்டபோது, ஷரத்தாவுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறிய அவர், கடந்த மே மாதம் ஷரத்தா வீட்டை விட்டு வெளியேறி விட்டதால், அவா் எங்கு இருக்கிறார் என தனக்கு தெரியாது என்று தெரிவித்தார்.

    இருப்பினும் போலீஸ் அதிகாரி ஒருவர் அப்தாப் அமீன் செல்போனை வாங்கி சோதனை நடத்தினார். அப்போது அவர், ஷரத்தாவுடன் சாட் செய்த விவரங்களை அழித்து இருந்தார். மற்றொரு போலீஸ் அதிகாரி அப்தாப் அமீனின் செல்போனை ஆய்வு செய்தார்.

    இதில் அவர் செல்போனின் கூகுள் தேடல் விவரங்களை ஆய்வு செய்த போது வழக்கு விசாரணையில் திருப்புமுனை ஏற்பட்டு துப்பு துலங்கியது. உடலை அகற்ற பயன்படும் ரசாயனம், உடலை துண்டு, துண்டாக வெட்டுவது உள்ளிட்ட விவரங்களை அப்தாப் அமீன் கூகுளில் பார்த்து இருந்தார். இதுகுறித்து போலீசார் அப்தாப் அமீனிடம் கேட்டபோது அவரால் எதுவும் கூற முடியவில்லை. போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையின் போது தான் அவர், ஷரத்தாவை கொலை செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டி வீசியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து தான் போலீசார் அவரை கைது செய்தனர்.

    • லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்த ஷ்ரத்தா வாக்கர் காதலனால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
    • இந்த வழக்கில் போலீசார் அப்தாப்பை கடந்த 12-ம் தேதி கைது செய்து காவலில் எடுத்துள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லியில் லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்த ஷ்ரத்தா வாக்கர் (28), என்ற பெண், காதலன் அப்தாப்பால் 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் மே மாதம் நிகழ்ந்துள்ளது. காதலியின் உடலை 35 துண்டுகளாக வெட்டி கூறுபோட்டுள்ளார். இதன்பின்னர், அவற்றை டெல்லியின் பல பகுதிகளில் வீசி சென்றுள்ளார். இந்த வழக்கில் போலீசார் அப்தாப்பை கடந்த 12-ம் தேதி கைது செய்து காவலில் எடுத்துள்ளது.

    இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பே அவன் கொலை செய்வான் என்றும், பல துண்டுகளாக வெட்டுவான் என்றும் ஷ்ரத்தா வாக்கர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி மகாராஷ்டிராவின் நலசோப்ரா நகரில் துலிஞ்ச் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் வாக்கர் புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரில், அவன் இன்று என்னை மூச்சு திணறச்செய்து கொல்ல முயன்றான். என்னை பயமுறுத்துவதோடு, கொலை செய்து, பல துண்டுகளாக வீசி விடுவேன் என்று மிரட்டலும் விடுக்கிறான். 6 மாதங்களாக இது தொடருகிறது. என்னை தாக்கிக்கொண்டே இருக்கிறான். ஆனால், எனக்கு போலீசாரிடம் செல்ல தைரியம் இல்லை. ஏனெனில், என்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டக்கூடும் என தெரிவித்துள்ளார்.

    மேலும், அந்த புகாரில் அப்தாப்பின் பெற்றோருக்கும் கூட நாங்கள் ஒன்றாக வாழ்கிறோம் என தெரியும். என்னை தாக்குவதும், கொலை செய்ய முயற்சிப்பதும் கூட அவர்களுக்கு தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

    • பொருட்களை டெல்லிக்கு கொண்டு செல்ல 37 பெட்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
    • பணத்தை கொடுப்பது தொடர்பாக காதலர்கள் இடையே சண்டை நிகழ்ந்துள்ளது.

    டெல்லியில் லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்த ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண், காதலன் அப்தாப்பால் 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் சாட்சியங்களைத் தேடுவதற்காக மகாராஷ்டிரா, அரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு டெல்லி காவல்துறை குழுக்கள் விரைந்துள்ளன. 

    இந்நிலையில் டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த காதலர்கள், அதற்கு முன்பு மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து கடந்த ஜூன் மாதம் அப்தாப், டெல்லிக்கு உடமைகளை மாற்றி உள்ளார். இதற்காக 37 பெட்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    குட்லக் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் நிறுவனம் மூலம் மரச்சாமான்கள் மற்றும் பிற வீட்டு உபயோகப் பொருட்களை கொண்டு செல்வதற்காக ரூ.20,000 செலுத்தப்பட்டுள்ளது. முன்னதாக இந்த பணத்தை யார் கொடுப்பது என்பது தொடர்பாக இருவரும் சண்டை போட்டதாக அப்தாப் காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளார்.

    20 ஆயிரம் ரூபாய் யாருடைய வங்கி கணக்கில் இருந்து செலுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஷ்ரத்தாவும், அப்தாப்பும் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அப்தாப் குடும்ப உறுப்பினர்கள் வாக்குமூலத்தையும் போலீஸார் பதிவு செய்துள்ளனர்.

    மகாராஷ்டிராவை விட்டு வெளியேறிய பிறகு, காதலர்கள் இருவரும் இமாச்சலப் பிரதேசம் உட்பட பல இடங்களுக்குச் சென்றுள்ளனர். அந்த பயணங்களின் போது அவர்களுக்கு இடையே ஏதாவது தகராறு ஏற்பட்டதா, அதனால் இந்த கொலை நடைபெற்றதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • வீடியோவை போலீசார் சரிபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
    • கடுமையான விசாரணைக்குப் பிறகு அப்தாப் உண்மையை கூறத் தொடங்கி உள்ளான்

    புதுடெல்லி:

    டெல்லியில் காதலனுடன் லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்த ஷ்ரத்தா என்ற பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மே மாதம் 18ம் தேதி ஷ்ரத்தாவுக்கும், காதலன் அப்தாப் அமீன் பூனாவாலாவுக்கும் இடைகிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் ஷ்ரத்தா, காதலன் அப்தாவால் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையை மறைக்க, உடலை 35 துண்டுகளாக வெட்டி, குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச்சென்று காட்டில் வீசி உள்ளான் அப்தாப்.

    இந்த கொடூர சம்பவம் தொடர்பாக அப்தாப் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    இது ஒருபுறமிருக்க ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் ஒவ்வொன்றாக மீட்கப்படுகின்றன. அப்பகுதியில் பதிவான சிசிடிவி பதிவுகளை ஆய்வுசெய்துவருகின்றனர். ஷ்ரத்தாவின் தலையை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் அப்தாப் தனது வீட்டுக்கு வெளியே அதிகாலையில் நடந்து செல்லும் போது பதிவான சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. அதில், அவன் தனது முதுகில் பேக் மாட்டி உள்ளார். கையில் அட்டைப் பெட்டி வைத்திருந்தான். இதனால் அவன் ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை எடுத்துச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த வீடியோவை போலீசார் சரிபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    அக்டோபர் 18ம் தேதி பதிவு செய்யப்பட்ட இந்த சிசிடிவி காட்சி, இந்த கொடூரமான கொலை வழக்கில் வெளிவந்த முதல் சிசிடிவி வீடியோ பதிவாகும்.

    இருட்டில் மங்கலாக பதிவான அந்த வீடியோவில், ஒரு நபர் முதுகுப்பை மாட்டிக்கொண்டு கையில் அட்டைப்பெட்டியுடன் தெருவில் நடந்து செல்வது தெரிகிறது. அவரது முகம் தெளிவாக தெரியவில்லை. ஆனால் அது அப்தாப் என்று போலீசார் கூறுகின்றனர்.

    இன்று அதிகாலை, அப்தாப் அமீன் பூனாவாலாவின் குடியிருப்பில் இருந்து கனமான மற்றும் கூர்மையான வெட்டும் கருவிகளை போலீசார் மீட்டனர். அவை ஷ்ரத்தாவின் உடலை வெட்டப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கடுமையான விசாரணைக்குப் பிறகு அப்தாப் உண்மையை கூறத் தொடங்கி உள்ளான். அவன் கொடுத்த தகவலின்பேரில் சத்தர்பூர் குடியிருப்பில் இருந்து முக்கிய ஆதாரங்களை போலீசார் மீட்டுள்ளனர். அப்தாபின் குருகிராம் பணியிடத்தில் இருந்து நேற்று கருப்பு பாலிதீன் பையையும் போலீசார் மீட்டனர்.

    ×