என் மலர்
நீங்கள் தேடியது "இளைஞர் தற்கொலை"
- சென்னை அமைந்தகரையில் உள்ள வணிக வளாகத்தின் 3-வது மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த இந்திரஜித் சிங் (33 வயது என்ற இளைஞர், ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
இவர் நேற்று மாலை, அமைந்தகரையில் உள்ள பிரபல மால் (வணிக வளாகம்) சென்றுள்ளார். அங்கு, 3-வது மாடியில் உள்ள கடைக்கு சென்று அவர் பொருட்களை வாங்கிவிட்டு, பில் போடுவதற்காக காத்திருந்துள்ளார்.
இந்த நிலையில், திடீரென இந்திரஜித் சிங், தனது காலணியை கழற்றி வைத்துவிட்டு, ஓடிச்சென்று மாலின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக்கொண்டார்.
இந்த சம்பவத்தை நேரில் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்திரஜித் சிங்கை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சம்பவம் குறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பூனைக்கடியால் பாதிக்கப்பட்ட பாலமுருகன் மதுரை அரசு மருத்துவமனை ரேபிஸ் சிகிச்சை வார்டில் நேற்று இரவு அனுமதித்து உள்ளனர்.
- அரசு மருத்துவமனை காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 25). கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தபோது இரண்டு பூனைகள் சண்டையிட்டு கொண்டிருந்ததை கண்டு அதை விரட்டியுள்ளார். அப்போது ஒரு பூனை பாலமுருகனை கடித்துள்ளது.
இதற்கு சிகிச்சை பெறாமல் பாலமுருகன் அலட்சியமாக விட்டுவிட்ட நிலையில், புண் பெரிதானது. பின்னர் இதற்காக அவர் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற பின்னர் அங்கிருந்து அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர்.
பின்னர் பூனைக்கடியால் பாதிக்கப்பட்ட பாலமுருகன் மதுரை அரசு மருத்துவமனை ரேபிஸ் சிகிச்சை வார்டில் நேற்று இரவு அனுமதித்து உள்ளனர். அங்கு இருக்க பிடிக்காமல் திடீரென்று தப்பி ஓட முயன்றவரை, மருத்துவமனை ஊழியர்கள் மீண்டும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து சிகிச்சைக்காக ரேபிஸ் சிகிச்சை பிரிவில் தனி அறையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், கடுமையான வலி மற்றும் மன உளைச்சல் காரணமாக பாலமுருகன், அதிகாலை அவருக்கு வழங்கப்பட்டிருந்த போர்வையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூனைக்கடித்து அலட்சியமாக விட்டதால் மூன்று மாதத்திற்கு பிறகு மிகப்பெரிய உடல் நலக்குறைவு ஏற்பட்டு இளைஞர் தனியாக சிகிச்சைக்காக அடைக்கப்பட்ட நிலையில் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பள்ளியகரம் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வசந்த் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்
- செயலி மூலம் வசந்த் கடன் பெற்றதை நண்பர்கள் மூலம் காவல்துறையினர் அறிந்துகொண்டனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அருகே வசந்த் (22) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவர் ஆன்லைன் செயலியில் வாங்கிய கடனை திரும்ப கட்ட முடியாததால் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பள்ளியகரம் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வசந்த் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
தற்கொலை செய்வதற்கு முன்பு செல்போன் சிம்கார்டை வசந்த் உடைத்து எறிந்துள்ளார். செயலி மூலம் வசந்த் கடன் பெற்றதை நண்பர்கள் மூலம் காவல்துறையினர் அறிந்துகொண்டனர்.
இளைஞர் வசந்தின் உடலை கைப்பற்றி படாளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






