search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "relief goods"

    • காசாவில் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.
    • போரினால் காசாவில் கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்த தொடங்கியது.

    கடந்த ஐந்து மாதங்களாக இஸ்ரேல் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. 2.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவில் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.

    முதலில் எல்லை அருகில் உள்ள வடக்குப் பகுதியை குறிவைத்து இஸ்ரேல் கண்மூடித்தனமாக தாக்கல் நடத்தியது. இதில் வடக்கு காசா முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. இங்கு வசித்து வந்த பெரும்பாலான மக்கள் தெற்கு பகுதிக்கு சென்றுள்ளனர். 

    இதேபோல் கடைசி நகராக, ரபா நகரை இஸ்ரேல் படை குறிவைத்துள்ளது. ரபா நகரில் உள்ள பாலஸ்தீனர்களை வெளியேற்றிவிட்டு தாக்குதல் நடத்த இஸ்ரேல் படை திட்டமிட்டுள்ளது.

    இதற்கிடையே போரினால் காசாவில் கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு சரியான அளவில் உணவு மற்றும் உதவிப் பொருட்கள் கிடைக்காததால் பசி பட்டினியால் வாடுகின்றனர். மக்களுக்கு ஐ.நா. அமைப்புகள் சார்பில் உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இங்கும் கடும் நெரிசல் காணப்படுகிறது.

    இந்நிலையில், வடக்கு காசா நகரில் நிவாரணப் பொருட்களை வாங்குவதற்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் படையினர் இன்று துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதில், 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

    • தன்னார்வலர்கள் உதவியுடன் நிவாரண பொருட்கள் திரட்டப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
    • பேரிடர் ஏற்படும் போதெல்லாம் கோவை மாவட்ட மக்கள் உதவி வருகிறார்கள்.

    கோவை:

    மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டி தீர்த்தது. 1 அரை லட்சம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

    இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரமுடியாமல் தவிக்கின்றனர்.

    அவர்களுக்கு தேவையான உணவு, பால், குடிநீர் உள்ளிட்டவை கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகம் சார்பிலும் நிவாரண பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி கோவை மாவட்ட நிர்வாகம் சார்பிலும் தன்னார்வலர்கள் உதவியுடன் நிவாரண பொருட்கள் திரட்டப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    1.045 டன் பால் பவுடர், 1.5 டன் அரிசி, 1 டன் காய்கறிகள், 25 ஆயிரம் நாப்கின்கள், 1090 படுக்கை விரிப்புகள், 3 ஆயிரம் மெழுகுவர்த்தி, 13 ஆயிரம் பிஸ்கெட் பாக்கெட்டுகள், 5 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பாட்டில்கள், 2,700 பிரெட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டது.

    இவை அனைத்தும் கோவை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து லாரி மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா உள்ளிட்டோர் பார்வையிட்டு அனுப்பி வைத்தனர்.

    இதேபோல் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவை ஆர்.எஸ்.புரத்தில் இருந்து நிவாரண பொருட்கள் லாரி மூலமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    இந்த பொருட்கள் அனைத்தும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படுகிறது.

    பேரிடர் ஏற்படும் போதெல்லாம் கோவை மாவட்ட மக்கள் உதவி வருகிறார்கள். தொண்டு நிறுவனங்கள், மாநகராட்சி மற்றும் அரசு ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு நிவாரண பொருட்களை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

    உணவு பொருட்கள் மற்றும் நிவாரண பொருட்களை கொண்ட தனி விமானம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சென்னை சென்றதும் அங்கு மண்டலவாரியாக பிரித்து சரியான முறையில் வினியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கடவூர் ஒன்றியத்தில் கஜா புயலினால் பலத்த சேதம் ஏற்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி தி.மு.க.சார்பில் நடைபெற்றது.
    தரகம்பட்டி:

    கடவூர் ஒன்றியத்தில் தரகம்பட்டி, மாவத்தூர், பாலவிடுதி, கடவூர், ஆதனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கஜா புயலினால் பலத்த சேதம் ஏற்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி தி.மு.க.சார்பில் நடைபெற்றது.

    கடவூர் ஒன்றிய செயலாளர் பிச்சை தலைமையில், மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் ரமேஷ்பாபு, மாவட்ட பொருளாளர் கருப்பண்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 5 கிலோ அரிசி, போர்வை, குடம் உள்ளிட்ட பொருட்களை நிவாரணமாக வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமலிங்கம், துணைச் செயலாளர் வெங்கட் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வாகனங்களில் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன.
    தேவகோட்டை:

    கஜா புயலால் தமிழகத்தில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக மாவட்டத்தில் காரைக்குடி, சிங்கம்புணரி, எஸ்.புதூர் உள்பட பல்வேறு பகுதிகள் கடும் பாதிப்படைந்தன. இந்த பகுதிகளில் புயலால் சாய்ந்த மரங்கள், மின்கம்பங்கள் போன்றவற்றை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் குடிநீர் உள்ளிட் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் சிரமமடைந்து வருகின்றனர்.

    இதையடுத்து பல்வேறு அமைப்புகள் நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வருகின்றனர். இந்தநிலையில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன் ரூ.40 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை தேவகோட்டையில் இருந்து 3 லாரிகள், மினி வேன்களில் அனுப்ப ஏற்பாடுகள் செய்திருந்தார்.

    நிவாரணப்பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனங்கள் ஆலங்குடி, திருமயம் உள்பட மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன. இந்த வாகனங்களை அமைச்சர் பாஸ்கரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் அரிசி, பிஸ்கட், கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, சீனி, ரவை ஆகிய பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. இவற்றை தொகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் தளக்காவயல் பிர்லா கணேசன், தேவகோட்டை ஒன்றிய செயலாளர் தசரதன், அரசு வழக்கறிஞர் ராமநாதன், ஆவின் சேர்மன் அசோகன், கே,பி,ராஜேந்திரன், தேவகோட்டை முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் சுந்தரலிங்கம், முன்னாள் கவுன்சிலர்கள் போஸ், ரமேஷ், சுப்பிரமணியன், கண்டதேவி ஆறுமுகம், முத்துராமலிங்கம், துரைராஜ் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் சென்றனர்.
    ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் கேரள மக்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான உணவுப்பொருட்கள் அனுப்பப்பட்டது.

    ராமநாதபுரம்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அறிவுரையின்படி கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களின் துயரத்தில் பங்கேற்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, நகர் தலைவர் கோபி முன்னிலையில் ரூ.5 லட்சம் மதிப்பிலான அரிசி, மைதா, ரவை, கோதுமை போன்ற உணவு பொருட்களும், பல்வேறு வகையான மருத்துவ உபகரண பொருட்களையும் அனுப்பி வைத்தனர்.

    ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் செல்லத்துரை அப்துல்லா, பொருளாளர் அகமது கபீர், கிருஷ்ணராஜ், ஜோதி பாலன், பரமக்குடி நகர் காங்கிரஸ் கமிட்டி அப்துல் அஜீஸ், ஹாஜா நஜிமுதீன், அப்பாஸ் நிர்வாகிகள் சேதுபாண்டி, மணிகண்டன், கருணாகரன், மேகநாதன், ரவி, கார்த்திகைநாதன், கவுசி மகாலிங்கம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயனிடம் நிவாரண பொருட்கள் ஒப்படைக்கப்பட உள்ளதாக மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தெரிவித்தார்.

    கேரளாவுக்கு நிவாரணப் பொருட்களை ரெயில்கள் மூலம் இலவசமாக எடுத்துச் செல்ல ரெயில்வே இலாகா ஏற்பாடு செய்துள்ளதாக ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பதிவிட்டுள்ளார். #PiyushGoyal #KeralaFlood
    புதுடெல்லி:

    கேரளாவில் பெய்து வரும் கன மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் பரிதவித்த 4 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு பல்வேறு மாநில அரசுகள் நிதி உதவி அளிப்பதுடன், ஏராளமான நிவாரண பொருட்களையும் அனுப்பி வருகின்றன.



    இந்தநிலையில் ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பதிவில், “எனது அமைச்சகம் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு எல்லா வகையிலும் உதவி செய்யும். மத்திய அரசு அவர்களுக்கு உதவி செய்ய உறுதி கொண்டுள்ளது. பல்வேறு மாநில அரசு முகமைகள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசின் இதர முகமைகள் கேரளாவுக்கு நிவாரணப் பொருட்களை ரெயில்கள் மூலம் இலவசமாக எடுத்துச் செல்ல ரெயில்வே இலாகா ஏற்பாடு செய்துள்ளது” என்று குறிப்பிட்டு உள்ளார்.



    இந்த நிலையில், புனே மற்றும் குஜராத்தின் ரத்லாம் நகரங்களில் இருந்து டேங்கர்களில் குடிநீர் ஏற்றிய 2 ரெயில்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.  #PiyushGoyal #KeralaFlood
    ×