என் மலர்
நீங்கள் தேடியது "mizoram"
- மிசோரம் தலைநகர் முதல் முறையாக இந்திய ரயில்வே நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளது.
- பைராபி-சாய்ராங் புதிய ரெயில் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
வடகிழக்கு மாநிலமான மிசோரமிற்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொண்டார். மிசோரம் தலைநகரான ஐஸ்வாலில் ரூ.9,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
மிசோரம் தலைநகரை முதல் முறையாக இந்திய ரயில்வே நெட்வொர்க்குடன் இணைக்கும் ரூ.8,070 கோடிக்கு மேல் மதிப்புள்ள பைராபி-சாய்ராங் புதிய ரெயில் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இதனையடுத்து, மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக இன்று பிரதமர் மோடி மணிப்பூர் செல்கிறார். மணிப்பூரில் ரூ.8,500 கோடிக்கு மேல் மதிப்புள்ள அவர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மணிப்பூர் கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்குப் பின் முதல்முறையாக பிரதமர் மோடி செல்வதால் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
- 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, மிசோரம் மாநிலத்தின் எழுத்தறிவு விகிதம் 91.33 சதவீதமாக இருந்தது.
- அப்போது மிசோரம் நாட்டிலேயே அதிக எழுத்தறிவு விகிதம் கொண்ட மூன்றாவது மாநிலமாக இருந்தது.
இந்தியாவில் முழு கல்வி அறிவு பெற்ற முதல் மாநிலம் என்ற சாதனையை மிசோரம் படைத்துள்ளது. இதனை மிசோரம் மாநில முதலமைச்சர் லால்டுஹோமா அறிவித்துள்ளார்
மிசோரம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி முன்னிலையில், அம்மாநில முதல்வர் இதனை தெரிவித்தார்.
கடந்த 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, மிசோரம் மாநிலத்தின் எழுத்தறிவு விகிதம் 91.33 சதவீதமாக இருந்தது. அப்போது மிசோரம் மாநிலம் நாட்டிலேயே அதிக எழுத்தறிவு விகிதம் கொண்ட மூன்றாவது மாநிலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஊரகத்துறை வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
- தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் நடைபெறும்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார்.
இந்தியாவில் ஊரக வளர்ச்சித்துறையில் முதன்மை மாநிலமாக திகழும் மிசோரம் சென்று அங்குள்ள ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் லால் ருவத் கீமா மற்றும் மிசோரம் மாநில ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்தார்.
புதுவை மாநிலத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மேம்படுத்துவதற்காகவும், மேலும் வரும் ஆண்டில் 100 நாள் வேலை நாட்களை முழமையாக வழங்கு வதற்காக மிசோரம் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் ஊரக வளர்ச்சித்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
திட்டங்களின் செயல்பாடு மிசோரம் மாநிலத்தில் செயல்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் நடைபெறும் இடத்திற்கே நேரில் சென்று எவ்வாறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்பதை துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும், அம்மாநிலத்தில் செயல்படுத்தப்படும் மற்ற ஊரக வளர்ச்சி துறை திட்டங்களையும் கேட்டறிந்ததோடு அவற்றை நமது புதுவை மாநிலத்தில் செயல்படுத்தி, ஊரக வளர்ச்சித் துறையில் முதன்மை மாநிலமாக மாற்றுவதற்காகவும் மேலும் பல ஊரக வளர்ச்சி திட்டங்களை புதுவையில் செயல்படுத்துவதற்காக அமைச்சரின் அனுமதியோடு அதிகாரிகளை புதுவைக்கு அழைத்துள்ளார்.
- ஒரே மகனான இவர் வயல் வேலைகளில் ஈடுபட்டு தாயை காப்பாற்றி வந்தார்
- இவர் மிசோ மொழியில் ஆற்றல் படைத்தவர்
வடகிழக்கு இந்தியாவில் உள்ள மாநிலம் மிசோரம்.
இங்குள்ள சம்பாய் மாவட்டத்தில் உள்ள ஹ்ருவாய்கான் கிராமத்தை சேர்ந்த முதியவர் லால்ரிங்தாரா (78).
இந்தோ-மியான்மர் (அப்போதைய பர்மா) எல்லையில் குவாங்லெங் கிராமத்தில் 1945ல் பிறந்த லால்ரிங்தாரா, தனது சிறு வயதிலேயே தந்தை இறந்ததால், 2ம் வகுப்போடு பள்ளி படிப்பை நிறுத்தி விட்டார். மேலும், ஒரே மகனான இவர் வயல் வேலைகளில் ஈடுபட்டு தாயை காப்பாற்றி வந்தார்.
வறுமையினால் படிப்பை தொடர முடியாவிட்டாலும், படிப்பின் மீதான ஆர்வம் அவருக்கு குறையவில்லை. குறிப்பாக ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் மற்றும் படிக்கவும் விரும்பினார். மிசோ மொழியில் ஆற்றல் படைத்தவராய் இருந்தாலும், அவருக்கு ஆங்கில அறிவு போதுமானதாக இல்லை.
இதனால் தன் வயதை பொருட்படுத்தாமல் ஹ்ருவாய்கான் கிராமத்தில் உள்ள ராஷ்ட்ரிய மத்யமிக் ஷிக்ஷா அபியான் (RMSA) உயர்நிலை பள்ளியில் நடப்பு கல்வியாண்டில் 9ஆம் வகுப்பில் சேர்ந்துள்ளார்.
பிற சிறுவர்களை போல சீருடை அணிந்து, புத்தகங்களை சுமந்து, 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு தினமும் நடந்து சென்று கல்வி கற்கிறார்.
ஆங்கிலத்தில் விண்ணப்பங்களை எழுதவும், ஆங்கில தொலைக்காட்சி செய்தி அறிக்கைகளை புரிந்துகொள்வதையுமே தனது முக்கிய நோக்கமாக கொண்டிருக்கிறார்.
"லால்ரிங்தாரா, பிற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஒரு உதாரணமாக திகழ்கிறார். கற்றலில் ஆர்வமுள்ள அவர் பாராட்டுக்குரியவர்" என அவரை குறித்து அந்த நடுநிலைப் பள்ளியின் பொறுப்பாளர் கருத்து தெரிவித்தார்.
- எதிர்கட்சிகள் இந்தியா எனும் பெயரில் ஒரு கூட்டணையை உருவாக்கியுள்ளன
- 1986ல் முதல்முதலாக மிசோரம் வந்தேன் என்றார் ராகுல்
இந்தியாவில் அடுத்த வருடம் பாராளுமன்றத்தின் 543 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், இவ்வருட இறுதிக்குள் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல்களும் நடைபெற உள்ளது.
மத்தியில் உள்ள தற்போதைய ஆளும் பா.ஜ.க.வை அடுத்த வருட தேர்தலில் தோற்கடிக்க காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கி பல மாநிலங்களின் முக்கிய 25க்கும் மேற்பட்ட கட்சிகள், இந்தியா கூட்டணி (I.N.D.I.A.) என கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளன. இப்பின்னணியில் நடைபெறவுள்ள 5 மாநில தேர்தல்களை அடுத்த வருட பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அரசியல் கட்சிகள் கருதுவதால், கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவின் வடகிழக்கில் உள்ள மிசோரம் மாநிலத்தின் 40 இடங்களுக்கு வரும் நவம்பர் 7 அன்று சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மிசோரம் தலைநகர் ஐசால் (Aizawl) வந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் (INC) மூத்த தலைவர் ராகுல் காந்தி, அங்கு 2 நாள் சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
மிசோரம் வந்த அவர் ஒரு பொது கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
மிசோரம் வருவது எனக்கு எப்போதுமே பிடித்தமான ஒன்று. முதல்முதலாக 1986ல் நான் இங்கு வந்தேன். அப்போது மிசோரம் மெதுவாக வன்முறையிலிருந்து மீண்டு வந்து கொண்டிருந்தது. நான் என் தந்தையுடன் வந்த போது மிசோ ஒப்பந்தம் கையெழுத்தானது. 1987ல் மாநில அந்தஸ்து கிடைத்தது. தற்போதுள்ள தலைமுறையினர் இங்கு வன்முறையை பார்க்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், வன்முறையினால் ஏற்படும் பாதிப்பு மூத்த தலைமுறையினருக்கு தெரிந்திருக்கும்.
இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.
அதிக மலைப்பிரதேசங்களை கொண்டதால் "மலை மாநிலம்" (mountain state) என்றும் அழைக்கப்படும் மிசோரம் மாநிலத்தில், 2008லிருந்து 2018 வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்தது குறிப்பிடத்தக்கது.
- 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு.
- வாக்குப்பதிவு எண்ணிக்கை டிசம்பர் 3-ந்தேதி நடைப்பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து, கடந்த நவம்பர் 7ம் தேதி முதல் 30ம் தேதி வரை தேர்தல் நடைபெற்றது.
அதன்படி, மிசோரம் மாநிலத்தில் கடந்த 7-ந் தேதியும் மத்திய பிரதேசத்தில் 17-ந் தேதியும், ராஜஸ்தானில் 25-ந் தேதியும், தெலுங்கானாவில் 30-ந் தேதியும் தேர்தல் நடைபெற்றது. சத்தீஸ்கரில் 2 கட்டங்களாக 7 மற்றும் 14-ந்தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
5 மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை டிசம்பர் 3-ந்தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மிசோரம் மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மட்டும் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 3ம் தேதி நடைபெற இருந்த மிசோரம் மாநில வாக்கு எண்ணிக்கை 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அறிவித்துள்ளது.
- மிசோ தேசிய முன்னணி கட்சி 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
- சோரம் மக்கள் இயக்க கட்சி தலைவர் லால்டுஹோமா அம்மாநில முதல்வர் ஆனார்.
மிசோரம் சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 7-ம் தேதி ஒரேகட்டமாக நடந்தது. 40 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த திங்கட்கிழமை எண்ணப்பட்டது. இதில் சோரம் மக்கள் இயக்கம் கட்சி 27 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
இதையடுத்து, மிசோ தேசிய முன்னணி கட்சி 10 தொகுதிகளையும், பா.ஜ.க. 2 தொகுதிகளையும், காங்கிரஸ் ஒரு தொகுதியையும் கைப்பற்றியது. ஆட்சியமைக்க பெரும்பான்மை பெற்றதை அடுத்து சோரம் மக்கள் இயக்க கட்சி தலைவர் லால்டுஹோமா அம்மாநில முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.
இவருடன் 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். மிசோரம் மாநிலத்தின் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சோரம்தங்காவும் கலந்து கொண்டிருந்தார்.
- மிசோரமில் இனக்குழுக்களுக்கும் ராணுவத்திற்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகிறது.
- ராணுவ வீரர்கள் சரணடைந்து வருவதால், மிசோரமில் தஞ்சம் அடைகிறார்கள்.
மியான்மரில் அந்நாட்டு ராணுவத்திற்கும், ஆயுதமேந்திய இனக்குழுவினருக்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகிறது. ஒரு சில நகரங்களில் இனக்குழுக்கள் ஒன்றாக இணைந்து ராணுவத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி சண்டையிட்டு வருகின்றன.
இதனால் ராணுவம் இனக்குழுக்களை எதிர்த்து போரிட முடியவில்லை. அவர்களிடம் சரணடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான மியான்மர் ராணுவ வீரர்கள் உயிருக்கு பயந்து இந்தியாவிற்கு ஒடி வருகின்றனர். எல்லையில் உள்ள மிசோரம் மாநிலத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
அவர்களை அடிக்கடி வெளியேற்றும் முயற்சிகளை மிசோரம் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும் தற்போது அதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுமார் 600-க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்தியாவின் மிசோரம் மாநிலத்திற்குள் வந்துள்ளனர்.
இதனால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து மிசோரம் அரசு கவலை அடைந்துள்ளது. இதனால் அவர்களை உடனடியாக மாநிலத்தில் இருந்து மியான்மருக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது.
வடகிழக்கு கவுன்சில் கூட்டம் ஷில்லாங்கில் நடைபெற்றது. அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் மிசோரம் முதல்வர் லால்துஹொமா விவரமாக எடுத்துக் கூறியதாக தெரிகிறது.
அப்போது, உடனடியாக மியான்மர் ராணுவ வீரர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமித் ஷாவிடம் லால்துஹோமா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து லால்துஹோமா கூறுகையில் "மியான்மரில் இருந்து மக்கள் தஞ்சம் கேட்டு எங்கள் மாநிலத்திற்கு வருகிறார்கள். அவர்களுக்கு நாங்கள் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்து வருகிறோம். முன்னதாக இங்கு வந்து அடைக்கலம் கேட்டு தங்கியிருந்த ராணுவ வீரர்களை நாங்கள் விமாங்கள் மூலம் அங்கு திருப்பி அனுப்பி வைத்தோம். சுமார் 450 வீரர்களை அனுப்பி வைத்துள்ளோம்" என்றார்.
- மிசோரமில் உள்ள அய்ஸ்வால் மாவட்டத்தில் பெய்த அதி கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.
- தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவினால் மாநிலத்தின் பிற நகரங்களிலிருந்து அம்மாவட்டம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது
வங்கக் கடலில் உருவாகி மேற்கு வங்கம் மற்றும் வங்க தேச எல்லையில் நேற்று முன் தினம் (மே 26) கரையைக் கடந்த ரீமால் புயலால் தெலங்கானா தொடங்கி வட கிழக்கு மாநிலங்கள் வரை பலத்த சேதங்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
வடகிழக்கு மாநிலமான மிசோரமில் உள்ள அய்ஸ்வால் மாவட்டத்தில் பெய்த அதி கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில் அங்குள்ள கல் குவாரி இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில்10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவினால் மாநிலத்தின் பிற நகரங்களிலிருந்து அம்மாவட்டம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
10 people have died as a stone quarry collapsed on the outskirts of #Aizawl following incessant #rains. Police personnel are engaged in rescue operations. The water levels of rivers are also rising up and many people living in the riverside areas have been evacuated#Mizoram pic.twitter.com/gQ0WG4iNp4
— Smriti Sharma (@SmritiSharma_) May 28, 2024
புயலின் தாக்கத்தால் சாலையோர மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தது. மின் கம்பங்கள் சாய்ந்து மின்சார வயர்கள் அறுந்து மழை நீரில் விழுந்து பொதுமக்களுக்கு அபாயகரமாக மாறியுள்ளது. இந்த புயல் காரணமாக மேற்கு வங்கத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என மிசோரம் முதல்வர் லால்துஹோமா வலியுறுத்தியுள்ளார்.
- பாஜகவின் என்டிஏ கூட்டணியில் உள்ள மிசோரம் தேசிய முன்னணி [MNF] கட்சி ராஜினாமா செய்ய வலியுறுத்தியது.
மணிப்பூரில் கடந்த 18 மாதங்களாக நடந்து வரும் வன்முறையை கட்டுப்படுத்த தவறிய பாஜக முதல்வர் பைரன் சிங் பதவி விலக வேண்டும் என்ற குரலை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன. மணிப்பூரின் வன்முறைக்கு முழு பொறுப்பேற்று பைரன் சிங் தலையாயினாலான பாஜக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டு அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என மிசோரம் முதல்வர் லால்துஹோமா வலியுறுத்தியுள்ளார்.

மிசோரம் முதல்வர் லால்துஹோமா
இதற்கு மத்தியில் பைரன் சிங் பதவி விலக வேண்டும் என்று மிசோரமில் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் உள்ள மிசோரம் தேசிய முன்னணி [MNF] கட்சியும் அழைப்பு விடுத்துள்ளது. MNF பொதுச் செயலாளர் VL Krosehnehzova, மாநில அரசாங்கத்தின் தோல்வியால் தற்போதைய நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. பைரன் சிங் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
அவர் இதை கூறி சில மணிநேரங்களுக்குப் பிறகே MNF கட்சியை தேச விரோத கட்சியாக மணிப்பூர் அரசு அறிவித்துள்ளது. மணிப்பூரின் உள் விவகாரங்களில் MNF தொடர்ந்து தலையிடுவதை ஏற்கமுடியாது.தேச விரோத மியான்மர் அகதிகளுக்கு ஆதரவான பிரச்சாரம் செய்வது மற்றும் மணிப்பூருக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது MNF.

சட்டவிரோத குடியேற்றம், கடத்தல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்திற்காக அண்டை நாடான மியான்மர் அருகே இந்திய எல்லைகளை வேலி அமைக்கும் இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தடையாக இருக்கும் MNF தேச விரோதக் கட்சியாக அதன் உண்மையான நிறத்தை வெளிப்படுத்தி வருகிறது. என்று மணிப்பூர் அரசு நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- 3.12 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக பிறந்த இந்த ஆண் குழந்தை 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் முதன்முதலில் பிறந்தது.
- மூத்த சகோதரி, தாய் ராம்சிர்மாவி மற்றும் தந்தை ரெம்ருத்சங்கா மகிழ்ச்சியில் உள்ளனர்.
1998 முதல் 1996 வரை மில்லினியல்கள் என்றும், 1996 முதல் 2010 ஆம் வரை பிறந்தவர்கள் Gen Z என்றும் 2010 முதல் 2024 க்கு இடையில் பிறந்தவர்கள் Gen Alpha ஆல்பா என்றும் அழைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த புத்தாண்டுடன் இந்த லிஸ்டில் பீட்டா தலைமுறை சேர்நதுள்ளது. 2025 முதல் 2039 வரை பிறப்பவர்கள் ஜென் பீட்டா என்று அழைக்கப்படுவர்.
அந்த வகையில் இந்தியாவின் முதல் ஜென் பீட்டா தலைமுறை குழந்தை தென் கிழக்கு மாநிலமான மிசோரமில் பிறந்துள்ளது.
மிசோரமில், ஜனவரி 1, 2025 அன்று அதிகாலை 12:03 மணிக்கு ஐஸ்வாலின் டர்ட்லாங்கில் உள்ள சினோட் மருத்துவமனையில் நாட்டின் முதல் ஜென் பீட்டா குழந்தை பிறந்துள்ளது. 3.12 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக பிறந்த இந்த ஆண் குழந்தை 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் முதன்முதலில் பிறந்தது. இது ஒரு புதிய தலைமுறை சகாப்தத்தின் தொடக்கமாகும்.

பிரான்கி [Frankie] என்று பெயரிடப்பட்ட இந்த ஆண் குழந்தை பிறக்கும்போது 3.12 கிலோ எடையுள்ளதாகவும், எந்த சிக்கலும் இல்லாமல் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் சினோட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
முதல் ஜென் பீட்டா குழந்தை பிரான்கி பிறந்ததில் அவரது மூத்த சகோதரி, தாய் ராம்சிர்மாவி மற்றும் தந்தை ரெம்ருத்சங்கா மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த குடும்பம் ஐஸ்வாலில் உள்ள கிழக்கு கட்லா பகுதியில் வசிக்கிறது.
"ஜென் பீட்டா" என்ற சொல் மார்க் மெக்ரிண்டில் என்ற அறிஞரால் 2025 மற்றும் 2039 க்கு இடையில் பிறந்த குழந்தைகளை விவரிக்க உருவாக்கப்பட்டது.
மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சி ஆட்சி நடந்து வருகிறது.
இந்தநிலையில் அம்மாநிலத்தில் பூரண மது விலக்கு அமல்படுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. மிசோரமில் 1997-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டுவரை மதுவிலக்கு அமலில் இருந்தது. 2015-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி மதுக்கடைகளை திறப்பதற்கு அனுமதி அளித்தது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற மிசோ தேசிய முன்னணி பூரண மதுவிலக்கை மீண்டும் அமல்படுத்த முடிவு செய்தது. அதன்படி 4 ஆண்டுகளுக்கு பிறகு பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.
இதுதொடர்பாக அம்மாநில கலால் மற்றும் போதைபொருள் தடுப்பு ஆணையர் கூறியதாவது:-
மிசோரம் பூரண மது விலக்கு சட்டம் 2019-ம் ஆண்டு மார்ச் 20-ந்தேதி நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளித்ததையடுத்து ஏப்ரல் 1-ந்தேதி பூரண மதுவிலக்கை அமல்படுத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் பாராளுமன்ற தேர்தல் முடியும் அவரை மதுவிலக்கு தொடர்பாக அறிக்கை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனால் பூரண மதுவிலக்கு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளோம் என்றார்.






