search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மிசோரமில் அதிகாரிகளுடன் புதுவை அமைச்சர் ஆலோசனை
    X

    மிசோரமில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் அமைச்சர் சாய். ஜெ.சரவணன்குமார் ஆலோசனை நடத்திய காட்சி.

    மிசோரமில் அதிகாரிகளுடன் புதுவை அமைச்சர் ஆலோசனை

    • ஊரகத்துறை வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    • தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் நடைபெறும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார்.

    இந்தியாவில் ஊரக வளர்ச்சித்துறையில் முதன்மை மாநிலமாக திகழும் மிசோரம் சென்று அங்குள்ள ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் லால் ருவத் கீமா மற்றும் மிசோரம் மாநில ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்தார்.

    புதுவை மாநிலத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மேம்படுத்துவதற்காகவும், மேலும் வரும் ஆண்டில் 100 நாள் வேலை நாட்களை முழமையாக வழங்கு வதற்காக மிசோரம் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் ஊரக வளர்ச்சித்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    திட்டங்களின் செயல்பாடு மிசோரம் மாநிலத்தில் செயல்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் நடைபெறும் இடத்திற்கே நேரில் சென்று எவ்வாறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்பதை துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    மேலும், அம்மாநிலத்தில் செயல்படுத்தப்படும் மற்ற ஊரக வளர்ச்சி துறை திட்டங்களையும் கேட்டறிந்ததோடு அவற்றை நமது புதுவை மாநிலத்தில் செயல்படுத்தி, ஊரக வளர்ச்சித் துறையில் முதன்மை மாநிலமாக மாற்றுவதற்காகவும் மேலும் பல ஊரக வளர்ச்சி திட்டங்களை புதுவையில் செயல்படுத்துவதற்காக அமைச்சரின் அனுமதியோடு அதிகாரிகளை புதுவைக்கு அழைத்துள்ளார்.

    Next Story
    ×