search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vote Counting"

    • 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு.
    • வாக்குப்பதிவு எண்ணிக்கை டிசம்பர் 3-ந்தேதி நடைப்பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

    மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து, கடந்த நவம்பர் 7ம் தேதி முதல் 30ம் தேதி வரை தேர்தல் நடைபெற்றது.

    அதன்படி, மிசோரம் மாநிலத்தில் கடந்த 7-ந் தேதியும் மத்திய பிரதேசத்தில் 17-ந் தேதியும், ராஜஸ்தானில் 25-ந் தேதியும், தெலுங்கானாவில் 30-ந் தேதியும் தேர்தல் நடைபெற்றது. சத்தீஸ்கரில் 2 கட்டங்களாக 7 மற்றும் 14-ந்தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

    5 மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை டிசம்பர் 3-ந்தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், மிசோரம் மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மட்டும் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    டிசம்பர் 3ம் தேதி நடைபெற இருந்த மிசோரம் மாநில வாக்கு எண்ணிக்கை 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அறிவித்துள்ளது.

    • காலை 9 மணி நிலவரப்படி 8.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.
    • 11 மணி நிலவரப்படி 20.64 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பிஆர்எஸ், காங்கிரஸ், பா.ஜனதா இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. என்றபோதிலும், காங்கிரஸ்- பிஆர்எஸ் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

    பிஆர்எஸ் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க தேர்தல் பணியில் முழுக்கவனம் செலுத்தியது. அதேவேளையில் கர்நாடகாவில் ஆட்சியை பிடித்ததுபோன்று, தெலுங்கானாவிலும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது.

    தெலுங்கானாவில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து வாக்காளர்கள், பிரபலங்கள், நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். காலை 9 மணி நிலவரப்படி 8.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. அதன்பின் அதிக அளவில் வாக்குகள் பதிவாகினது. 11 மணி நிலவரப்படி 20.64 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    தொடர்ந்து, 3 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 51.89 சதவீத வாக்குகள் பதிவாகின.

    இந்நிலையில், தெலங்கானாவில் சட்டசபை தேர்வதுலக்கான வாக்குப்பதிவு முடிவடைந்தது. 5 மணி வரை வாக்குச்சாவடியில் இருந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் அளித்து வாக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டது.

    அதன்படி, 5 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 63.94 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் திரிபுராவில் பாஜக கூட்டணி முன்னிலையில் இருந்தது.
    • மேகாலயாவில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் இழுபறி நீடிக்கிறது.

    வடகிழக்கு பகுதியில் 8 மாநிலங்கள் உள்ளன. இதில் திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. திரிபுராவில் கடந்த மாதம் 16ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மேகாலயா மற்றும் நாகாலாந்தில் கடந்த மாதம் 27ம் தேதி தேர்தல் நடந்தது.

    60 தொகுதிகளை கொண்ட திரிபுராவில் ஆளும் பாஜக 55 இடங்களில் போட்டியிட்டது. மீதமுள்ள 5 தொகுதிகளில் கூட்டணி கட்சியான திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி கட்சி (ஐ.பி.எப்.டி.) போட்டியிட்டது.

    பாஜகவை எதிர்த்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கட்சிகள் முதல் முறையாக கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின. மாநில கட்சியான திப்ரா மோத்தா 42 தொகுதிகளில் போட்டியிட்டது. இதனால் இங்கு மும்முனை போட்டி நிலவியது.

    இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் திரிபுராவில் பாஜக கூட்டணி முன்னிலையில் இருந்தது. பா.ஜனதா கூட்டணி 28 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு- காங்கிரஸ் கூட்டணி 20 இடங்களிலும், திப்ரா மோத்தா கட்சி 13 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன. மற்றவை ஒரு இடத்தில் முன்னிலையில் இருந்தது.

    60 தொகுதிகளை கொண்ட நாகாலாந்தில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்.டி.பி.பி.)-பா.ஜனதா ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன. என்.டி.பி.பி. கட்சி 40 தொகுதிகளிலும் பா.ஜனதா 19 தொகுதிகளிலும் களம் இறங்கின. நாகா மக்கள் முன்னணி (என்.பி.எப்.) 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 23 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

    தேசிய மக்கள் கட்சி 12 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 12 இடங்களிலும் களம் இறங்கின.

    இங்கு பா.ஜனதா கூட்டணி முன்னிலையில் உள்ளது. அந்த கூட்டணி 41 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. நாகா மக்கள் முன்னணி 5 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது.

    மற்ற கட்சிகள் 13 இடங்களில் முன்னிலையில் உள்ளன. அகுலுடோ தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றதால் அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை. இதன்மூலம் நாகாலாந்தில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கிறது.

    60 தொகுதிகளை கொண்ட மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி யுடன் கூட்டணியில் இருந்த பா.ஜனதா, இந்த தேர்தலில் தனித்து களம் இறங்கியது.

    இதில் பா.ஜனதா 60 தொகுதிகளிலும், காங்கிரஸ் 60 தொகுதிகளிலும் போட்டியிட்டது. தேசிய மக்கள் கட்சி 57 தொகுதிகளிலும், திரிணாமுல் காங்கிரஸ் 58 தொகுதிகளிலும் போட்டியிட்டன. சோஹியாங் தொகுதியில் வேட்பாளர் மரணம் அடைந்ததால் அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

    இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் தேசிய மக்கள் கட்சி 22 இடங்களில் முன்னிலையில் இருந்தது. பா.ஜனதா 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் 4 தொகுதிகளிலும், முன்னிலையில் இருந்தன.

    மற்ற கட்சிகள் 26 இடங்களில் முன்னிலை வகித்தன. இதன் மூலம் மேகாலயாவில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் இழுபறி நீடிக்கிறது.

    • திரிபுராவில் 90 சதவீதமும், மேகாலயாவில் 85 சதவீதமும், நாகாலாந்தில் 84 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
    • திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களிலும், இடைத்தேர்தல் நடந்த 5 மாநிலங்களின் 6 சட்டசபை தொகுதிகளிலும் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

    வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 16-ம் தேதி தேர்தல் நடந்தது. அங்கு 90 சதவீத வாக்குகள் பதிவாகின. அதே போன்று தலா 60 இடங்களைக் கொண்ட மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே கட்டமாக 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருந்தது.

    ஆனால் மேகாலயாவில், சோஹியாங் தொகுதியில் ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் டான்குபார் ராய் லிங்டோ மறைவால் தேர்தல் ஒத்தி போடப்பட்டதால் எஞ்சிய 59 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    நாகாலாந்தில், அகுலுட்டோ தொகுதியில், தற்போதைய எம்.எல்.ஏ. காஜெட்டோ கினிமி, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    திரிபுராவில் 90 சதவீதமும், மேகாலயாவில் 85 சதவீதமும், நாகாலாந்தில் 84 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. இதேபோன்று மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தல்களுடன் ஒரு எம்.பி. மற்றும் 6 சட்டசபை தொகுதிகளுக்கும் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களிலும், இடைத்தேர்தல் நடந்த 5 மாநிலங்களின் 6 சட்டசபை தொகுதிகளிலும் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

    இதில், திரிபுரா மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி 40 இடங்களுக்கும் மேல் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக- திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி கூட்டணி 30 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது.

    நாகலாந்து மாநிலத்தில் பாஜக கூட்டணி 36-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

    மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக பின்தங்கியுள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்த என்.பி.பி கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

    • நாகாலாந்தில், அகுலுட்டோ தொகுதியில், தற்போதைய எம்.எல்.ஏ. காஜெட்டோ கினிமி, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 16-ம் தேதி தேர்தல் நடந்தது. அங்கு 90 சதவீத வாக்குகள் பதிவாகின.

    அதே போன்று தலா 60 இடங்களைக் கொண்ட மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே கட்டமாக 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருந்தது. ஆனால் மேகாலயாவில், சோஹியாங் தொகுதியில் ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் டான்குபார் ராய் லிங்டோ மறைவால் தேர்தல் ஒத்தி போடப்பட்டதால் எஞ்சிய 59 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    நாகாலாந்தில், அகுலுட்டோ தொகுதியில், தற்போதைய எம்.எல்.ஏ. காஜெட்டோ கினிமி, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    திரிபுராவில் 90 சதவீதமும், மேகாலயாவில் 85 சதவீதமும், நாகாலாந்தில் 84 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. இதேபோன்று மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தல்களுடன் ஒரு எம்.பி. மற்றும் 6 சட்டசபை தொகுதிகளுக்கும் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களிலும், இடைத்தேர்தல் நடந்த 5 மாநிலங்களின் 6 சட்டசபை தொகுதிகளிலும் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

    வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் 3 மாநில சட்டசபை தேர்தலிலும், இடைத்தேர்தலைச் சந்தித்த 5 மாநிலங்களின் 6 சட்டசபை தொகுதி தேர்தல்களிலும் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 3 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது இன்று மாலை தெரிய வரும்.

    • திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது.
    • இந்த 3 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது இன்று மாலை தெரிய வரும்.

    புதுடெல்லி:

    வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 16-ம் தேதி தேர்தல் நடந்தது. அங்கு 90 சதவீத வாக்குகள் பதிவாகின. அதே போன்று தலா 60 இடங்களைக் கொண்ட மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே கட்டமாக 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருந்தது. ஆனால் மேகாலயாவில், சோஹியாங் தொகுதியில் ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் டான்குபார் ராய் லிங்டோ மறைவால் தேர்தல் ஒத்தி போடப்பட்டதால் எஞ்சிய 59 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    நாகாலாந்தில், அகுலுட்டோ தொகுதியில், தற்போதைய எம்.எல்.ஏ. காஜெட்டோ கினிமி, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. திரிபுராவில் 90 சதவீதமும், மேகாலயாவில் 85 சதவீதமும், நாகாலாந்தில் 84 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

    இதேபோன்று மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தல்களுடன் ஒரு எம்.பி. மற்றும் 6 சட்டசபை தொகுதிகளுக்கும் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களிலும், இடைத்தேர்தல் நடந்த 5 மாநிலங்களின் 6 சட்டசபை தொகுதிகளிலும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் 3 மாநில சட்டசபை தேர்தலிலும், இடைத்தேர்தலைச் சந்தித்த 5 மாநிலங்களின் 6 சட்டசபை தொகுதி தேர்தல்களிலும் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த 3 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது இன்று மாலை தெரிய வரும்.

    • 250 வார்டுகளுக்கும் சேர்ந்து 50% வாக்குகள் பதிவாகி உள்ளன
    • மொத்தம் 42 மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது.

    டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்கு பதிவு கடந்த 4-ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மொத்தம் 1,349 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கும் சேர்ந்து 50% வாக்குகள் பதிவாகியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளன.

    கடந்த தேர்தலில் டெல்லி மாநகராட்சியை பா.ஜ.க. கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. பாஜக இரண்டாவது இடமும், காங்கிரசுக்கு குறைந்த அளவிலும் இடங்கள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், டெல்லி மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கைக்காக, மொத்தம் 42 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட 68 கண்காணிப்பாளர்கள் இந்த பணியை கண்காணித்து வருகின்றனர்.

    வாக்கு எண்ணும் மையங்களில் தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏற்பட்டால் அதை சரி செய்ய 136 பொறியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் பார்ப்பதற்கு வசதியாக வாக்கு எண்ணும் மையங்களில் பெரிய அளவிலான எல்இடி திரைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த 9 வார்டுகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.
    • 9 வார்டுகளின் பதிவான வாக்கு எந்திரங்கள் கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த 9 வார்டுகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.

    இந்த வார்டுகளிலும் தி.மு.க. சார்பில் 7 வேட்பாளர், காங்கிரஸ், ம.தி.மு.க. சார்பில் தலா ஒரு வேட்பாளளும், பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஒரு வேட்பாளரும், சுயேட்சைகள் 13 பேர் என மொத்தம் 23 பேர் போட்டியிட்டனர்.

    9 வார்டுகளில் மொத்த ஓட்டுக்கள் 2,470 பேர் தகுதியான நிலையில் 1,598 ஓட்டுகள் பதிவாகியுள்ளது. இது 65 சதவிகிதம் ஆகும். 9 வார்டுகளின் பதிவான வாக்கு எந்திரங்கள் கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பலத்த பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் 9 வார்டுகளில் பதிவான வாக்குகள் நாளை ( 1-ந் தேதி ) காலை 8 மணிக்கு எண்ணப்படுகிறது. மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கபடும்.

    • ஜனாதிபதி தேர்தல் கடந்த 18-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.
    • துணை ஜனாதிபதி தேர்தல் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்தது. இதில், பா.ஜ.க. வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கும் இடையேதான் போட்டி.

    தலைநகர் டெல்லியில் பாராளுமன்ற வளாகம் மற்றும் மாநிலங்களில் சட்டசபை வளாகங்கள் என 31 இடங்களில் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி, வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.

    இந்தத் தேர்தலில் வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்ததைத் தொடர்ந்து ஓட்டு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டன. ஒவ்வொரு இடத்தில் இருந்தும் விமானத்தில் 'மிஸ்டர் பேலட் பாக்ஸ்' என்ற பெயரில் முன்பகுதி இருக்கையில், உதவி தேர்தல் அதிகாரியின் பாதுகாப்பு, கண்காணிப்புடன் ஓட்டு பெட்டிகள் டெல்லி எடுத்துச்செல்லப்பட்டுள்ளன. இமாசல பிரதேசத்தில் இருந்து மட்டும் சாலை மார்க்கமாக ஓட்டு பெட்டி டெல்லிக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

    இந்நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன்மூலம் நாட்டின் அடுத்த ஜனாதிபதி யார் என்பது தெரிந்துவிடும்.

    • ஆண்கள் 3720,பெண்கள் 3796, இதர பிரிவினர் 2 ஆக மொத்தம் 7518 வாக்காளர்கள் உள்ளனர்.
    • தேர்தலில் 2425 ஆண் வாக்காளர்களும், 2316 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 4741 வாக்காளர்கள் வாக்களித்தனர்.

    பல்லடம் :

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகளில் காலியாக உள்ள ஊரக,நகர,உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி பல்லடம் ஒன்றியத்தில் 1வது வார்டு உறுப்பினர் பதவி காலியாக உள்ளது.இதற்கான வேட்புமனு தாக்கல் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த ஜூன்.20ந்தேதி துவங்கியது.

    இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல்படி தி.மு.க. கூட்டணி சார்பில் ஈஸ்வரமகாலிங்கம் (காங்கிரஸ்), குமாரவேல்( அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்), சுயேட்சை வேட்பாளர்களாக சதீஸ்குமார்( சாலை உருளை),சின்னசாமி( தண்ணீர் குழாய்),ராஜ்(மறை திருக்கி),,ஜெயபிரகாஷ்( தீப்பெட்டி) உள்ளிட்ட 6 பேர் இடைத்தேர்தலில் போட்டியிட்டனர். இதில் ஆண்கள் 3720,பெண்கள் 3796, இதர பிரிவினர் 2,ஆக மொத்தம் 7518 வாக்காளர்கள் உள்ளனர்.இந்த நிலையில் கடந்த 9 ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தேவராயன்பாளையம்,அரசு துவக்கப்பள்ளி, கோம்பக்காட்டுபுதுார் ஆர்.சி. துவக்கப்பள்ளி, பெத்தாம்பூச்சிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளி, இச்சிப்பட்டி அரசு துவக்கப்பள்ளி ஆகிய 4 பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள 11 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.தேர்தலில் 2425 ஆண் வாக்காளர்களும், 2316 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 4741 வாக்காளர்கள் வாக்களித்தனர்.இந்த நிலையில் இன்று பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில், வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது.

    தேர்தல் நடத்தும் அலுவலர் அகமது, உதவி அலுவலர் அய்யாசாமி, பல்லடம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சன், உள்ளிட்ட அதிகாரிகள் வாக்கு எண்ணும் பணியை ஒருங்கிணைத்து நடத்தினர். பல்லடம் போலீஸ் டி.எஸ்.பி. வெற்றி செல்வன் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    தென்சென்னையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி 3 மணி நேரமாகியும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முன்னிலை நிலவரம் வெளியாகி வருகிறது. தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளுடன், 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.



    ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகும் முன்னிலை நிலவரம் வெளியிடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி 36 பாராளுமன்றத் தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

    தென் சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் எண்ணப்படுகின்றன. இந்த மையத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி மூன்று மணி நேரம் ஆகியும், வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. 
    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகின்றன. தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி மே 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர மற்ற 542 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது.

    இந்தியாவின் 130 கோடி மக்கள் தொகையில் சுமார் 91 கோடி பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக சுமார் 30 லட்சத்து 96 ஆயிரம் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களும், சுமார் 10 லட்சத்து 74 ஆயிரம் ஒப்புகை சீட்டு எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. 91 கோடி வாக்காளர்களில் 67.11 சதவீதம் பேர் வாக்களித்தனர்.

    இந்திய தேர்தல் வரலாற்றில் இந்த தடவைதான் அதிக அளவு வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது 65.95 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த தடவை 1.16 சதவீதம் வாக்குகள் கூடுதலாக பதிவாகி உள்ளன.

    தேர்தலை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்துவதற்காக 542 தொகுதிகளிலும் சுமார் 2.70 லட்சம் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், சுமார் 20 லட்சம் மாநில போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன் பயனாக காஷ்மீர் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் கணிசமான வாக்குகள் பதிவானது.

    பாராளுமன்றத் தேர்தலுடன் ஆந்திரா, அருணாசலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 22 சட்டசபை தொகுதி இடைதேர்தலும், ஏப்ரல் 18, மே 19-ந் தேதிகளில் நடத்தப்பட்டது.

    7 கட்டமாக நடந்த ஓட்டுப் பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு எந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்று 5 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. கட்சி முகவர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. இதற்காக 542 தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படும் இடங்களில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குகளும், 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குகளும் 45 மையங்களில் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ஓட்டு எண்ணப்படும் லயோலா கல்லூரியில் போலீஸ் பாதுகாப்பு

    முதலில் தபால் வாக்குகள், மின்னணு பரிமாற்றத்தின் மூலம் பெறப்பட்ட தபால் வாக்குகளும் எண்ணப்படும். அது முடிந்ததும் 30 நிமிடங்கள் கழித்து மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் பதிவாகி இருக்கும் வாக்குகள் எண்ணிக்கைத் தொடங்கும். அதாவது 8.30 மணிக்குத்தான் மின்னணு எந்திரங்களின் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும்.

    ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் உள்ள 6 சட்டசபை தொகுதிகளின் வாக்குகள் தனித்தனியாக எண்ணப்படும். சட்டசபை தொகுதியில் வாக்காளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப 14 முதல் 22 மேஜைகள் வரை போடப்பட்டு ஓட்டு எண்ணப்படும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு பற்றிய தகவல் ஒலி பெருக்கியில் வெளியிடப்படும்.

    காலை 10 மணி அளவில் முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிவு தெரிய வரும். இதைத்தொடர்ந்து முன்னணி நிலவரம் தெரிய வரும். பிற்பகலில் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வாய்ப்புடன் இருக்கும் வேட்பாளர்கள், கட்சி பற்றி தெரிந்துவிடும்.

    மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகு ஒப்புகை சீட்டு எந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்படும். ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் தலா 5 ஓட்டுச்சாவடிகளில் பதிவான ஒப்புகைச் சீட்டு வாக்குகள் சரிபார்க்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    அந்த வகையில் 30 ஓட்டுச்சாவடிகளின் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்க்கப்பட வேண்டும். இப்படி ஒப்பிட்டு சரிபார்க்கும் பணிக்கு கூடுதல் நேரம் தேவைப்படும்.

    இந்தியா முழுவதும் 542 தொகுதிகளிலும் 20 ஆயிரத்து 625 விவிபாட் எந்திரங்களின் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்க்க வேண்டியதுள்ளது. எனவே இந்த தடவை தேர்தல் முடிவுகள் வெளியாவதில் சுமார் 5 மணி நேரம் வரை தாமதம் ஏற்படக்கூடும் என்று சொல்கிறார்கள்.

    என்றாலும் நாளை மாலை முதலே அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால் ஓட்டு எண்ணிக்கை வி‌ஷயத்தில் புதிய முறையை கடைபிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்பட 22 எதிர்கட்சிகள் நேற்று தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளன. அந்த மனுவில், “ஒவ்வொரு தொகுதி வாக்குகளும் எண்ணப்படுவதற்கு முன்பு ஒப்புகைச்சீட்டுகளை எண்ணி முதலில் சரிபார்க்க வேண்டும். ஒப்புகைச் சீட்டுகளும், மின்னணு எந்திரங்களில் உள்ள வாக்குகளும் சரியாக இருந்தால் மட்டுமே ஓட்டு எண்ணிக்கையை தொடர வேண்டும். முரண்பாடு இருந்தால், எந்த சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் பிரச்சினை உள்ளதோ அந்த சட்டசபை பகுதிக்குரிய வாக்குகள் முழுமையாக ஒப்பிட்டு பார்க்கப்பட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

    இப்படி வாக்குகளை எண்ணினால் தேர்தல் முடிவை வெளியிட 3 அல்லது 4 நாட்களாகி விடும் என்று தேர்தல் ஆணையம் கூறி வருகிறது. 50 சதவீதம் ஒப்புகை சீட்டுகளை எண்ணி பார்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய கோரிக்கையை கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

    ×