search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "poll"

    • பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    • ரூ.1,083 கோடி மதிப்பிலான நகை மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது, தமிழகத்தில் தேர்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கம் அளித்தார்.

    அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் நாளை நடைபெறவுள்ள வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டில் 6.3 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 3,32,000 தேர்தல் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.

    950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 874 ஆண் வேட்பாளர்கள், 76 பெண் வேட்பாளர்கள் உள்ளனர். 39 பொது பார்வையாளர்கள், 58 செலவின பார்வையாளர்கள் பணியில் உள்ளனர்.

    18- 19 வயதுடைய வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர் உள்ளனர். 190 கம்பெனி துணை ராணுவ படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    15 கம்பெனி துணை ராணுவத்தினர் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.

    பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    சி-விஜில் செயலி மூலம் இதுவரை 4,861 புகார்கள் பெறப்பட்டுள்ளன. ரூ.173.58 கோடி பணம், ரூ.6.67 கோடி மதிப்புள்ள மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    ரூ.1,083 கோடி மதிப்பிலான நகை மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    வாக்காளர் அட்டை இல்லை என்றாலும் கூடுதலாக 12 ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம். சுமார் ஒரு லட்சம் மாநில போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    44,801 வாக்குப்பதிவு மையங்களில் வெட் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் நடப்பவை அனைத்தும் கண்காணிக்கப்படும்.

    மாற்று திறனாளிகள் வாக்களிக்க வாக்குச்சாவடிகளில் சாய்வுதளம், சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளன. இ.வி.எம்., விவிபேட் செயல்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் தெளிவாக விளக்கி உள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • குஜராத்தில் ஆம் ஆத்மியும் தங்கள் களத்தை தயார்படுத்தி வருகிறது.
    • இமாசல பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.

    புதுடெல்லி :

    குஜராத் மற்றும் இமாசல பிரதேச மாநிலங்களில் தற்போதைய சட்டசபைகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவடைகிறது. எனவே இந்த மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறுகிறது.

    இதற்காக இரு மாநிலங்களிலும் ஆளும் பா.ஜனதா மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் போன்ற கட்சிகள் தீவிர பிரசாரங்களை முன்னெடுத்து உள்ளன. குஜராத்தில் ஆம் ஆத்மியும் தங்கள் களத்தை தயார்படுத்தி வருகிறது.

    அரசியல் நோக்கர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள இந்த தேர்தலை முன்னிட்டு இரு மாநிலங்களிலும் ஏ.பி.பி. நியூஸ் மற்றும் சி வோட்டர் இணைந்து கருத்துக்கணிப்புகளை நடத்தி உள்ளன. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

    இதில் முக்கியமாக குஜராத்தில் மீண்டும் பா.ஜனதாவே ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், இமாசல பிரதேசத்திலும் ஆட்சியை தக்க வைக்கும் என்றும் தெரிய வந்து இருக்கிறது.

    பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தை பொறுத்தவரை, மொத்தமுள்ள 182 இடங்களில் ஆளும் பா.ஜனதா 135 முதல் 143 இடங்கள் வரை கைப்பற்றும் என தெரிய வந்துள்ளது. தற்போது 99 உறுப்பினர்களையே வைத்திருக்கும் அந்த கட்சி வருகிற தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

    காங்கிரஸ் கட்சிக்கு 36 முதல் 44 இடங்கள் வரையும், ஆம் ஆத்மிக்கு 2 இடங்கள் வரையும் கிடைக்கும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    68 இடங்களை கொண்ட இமாசல பிரதேசத்தில் 37 முதல் 45 இடங்கள் வரை பா.ஜனதா பெறும் எனவும், காங்கிரசுக்கு 21 முதல் 29 இடங்கள் வரை கிடைக்கும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

    இரு மாநிலங்களிலும் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் மின்சாரம், குடிநீர், சாலை வசதி போன்ற அடிப்படை கட்டமைப்புகளில் குறைபாடு முக்கிய பிரச்சினைகளாக உள்ளன.

    இதை கடந்தும் பெருவாரியான வாக்காளர்கள் இரு மாநிலங்களிலும் ஆளுங்கட்சியை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்து உள்ளன.

    பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றி விட்டதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே மீது 122 எம்.பி.க்கள் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்துள்ளனர். #srilankaparliament #rajapaksa
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமர் பதவி வகித்த ரனில் விக்ரம சிங்கேவை கடந்த மாதம் 26-ந்தேதி அதிபர் சிறிசேனா நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் ராஜபக்சே நியமிக்கப்பட்டார். எனினும் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு ராஜபக்சேவுக்கு கிடைக்கவில்லை.

    எனவே பாராளுமன்றத்தை கலைத்து விட்டு ஜனவரி 5-ந்தேதி பொதுத்தேர்தல் நடத்த அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். அதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. அதைத் தொடர்ந்து அதிபரின் உத்தரவுக்கு கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

    அதன்பின்னர் இலங்கை பாராளுமன்றத்தில் 2 முறை ராஜபக்சேவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாதீர்மானம் கொண்டு வந்தன. அவை இரண்டிலும் ராஜபக்சேவுக்கு தோல்வியே கிடைத்தது.

    இதற்கிடையே நேற்று இலங்கை பாராளுமன்றத்தில் சபாநாயகர் 12 பேர் கொண்ட தேர்வு குழு பட்டியலை வெளியிட்டார். அதில் சர்ச்சை வெடித்தது. அதைத் தொடர்ந்து தேர்வுக்குழு நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விதமாக ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.

    அதில் சபாநாயகரின் முடிவுக்கு ஆதரவாக 121 ஓட்டுகள் கிடைத்தது. ராஜபக்சேவுக்கு ஆதரவாக ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை.

    அதன்மூலம் பாராளுமன்றத்தில் 3-வது முறையாக நடத்தப்பட்ட ஓட்டெடுப்பிலும் ராஜபக்சேவுக்கு கடும் தோல்வி ஏற்பட்டது.

    இந்த நிலையில் 122 எம்.பி.க்கள் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே மீது கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தனர்.

    அதில், “பிரதமர் ராஜ பக்சேவும், அவரது மந்திரிகளும் சர்ச்சைக்குரிய முறையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றியடைந்த நிலையில் ராஜபக்சே பிரதமர் அலுவலகத்தை அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அவரது நியமனம் செல்லாது என அறிவிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. #srilankaparliament #rajapaksa
    இலங்கை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் நியமித்த தேர்வுக்குழு மீது நடத்தப்பட்ட ஓட்டெடுப்பில் ராஜபக்சே அணி மீண்டும் தோல்வி கண்டது. #srilankaparliament #rajapaksa
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமர் பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேயை கடந்த மாதம் 26-ந்தேதி அதிபர் சிறிசேனா அதிரடியாக நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேயை புதிய பிரதமராக நியமித்தார். எனினும் பெரும்பான்மைக்கு தேவையான 113 உறுப்பினர்களை ராஜபக்சேயால் திரட்ட முடியவில்லை.

    இதையடுத்து நாடாளு மன்றத்தை கலைத்துவிட்டு ஜனவரி 5-ந்தேதி பொதுத் தேர்தல் நடந்த அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். இதை எதிர்த்து ரனில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனா ஆகியவை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. அதிபரின் உத்தரவுக்கு கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

    இதன்பின்னர் இலங்கை நாடாளுமன்றத்தில் 2 முறை ராஜபக்சேவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. அந்த இரண்டிலும் ராஜபக்சேவுக்கு தோல்வியே கிடைத்தது. இதனால் அவருடைய ஆதரவு எம்.பி.க்கள் பெரும் ரகளையில் ஈடுபட்டனர். ராஜபக்சே, விக்ரமசிங்கே இருவருமே தாங்கள் பிரதமர் பதவியில் தொடர்வதாக கூறி வருவதால் இலங்கை அரசியலில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

    இந்த நிலையில் அனைத்து கட்சித் தலைவர்களையும் சிறிசேனா அழைத்துப் பேசி நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதனால் கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றம் அமைதியாக நடந்தது.

    அப்போது அதிபரின் யோசனைப்படி நாடாளுமன்றத்தை அமைதியாக நடத்த தேர்வுக் குழு ஒன்றை அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றம் நேற்று மீண்டும் கூடியது. அப்போது சபாநாயகர் 12 பேர் கொண்ட தேர்வுக்குழு பட்டியலை வெளியிட்டார். அதில் அதிபர் சிறிசேனா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் 5 உறுப்பினர்கள் இடம் பெற்று இருந்தனர்.

    அதேபோல் ஐக்கிய தேசிய கட்சியில் 5 உறுப்பினர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனதா விமுக்தி பெரமுனா ஆகியவற்றின் சார்பில் தலா ஒரு உறுப்பினர்களும் தேர்வுக் குழுவில் இடம் பெறுவார்கள் என்று சபாநாயகர் அறிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஜனதா விமுக்தி பெர முனாவும் ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதால் தேர்வுக்குழுவிலும் விக்ரமசிங்கேயின் கையே ஓங்கியது.

    இதை ஜீரணிக்க முடியாத ராஜபக்சே ஆதரவாளர்கள் சபாநாயகரின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசாங்கம் எங்களது தலைமையில் நடப்பதால் எங்களுக்கே தேர்வுக்குழுவில் அதிக இடம் ஒதுக்கவேண்டும் என்று கோஷமிட்டனர். பின்னர் சபாநாயகரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து தேர்வுக்குழு நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கும் விதமாக ஓட்டெடுப்பு நடத்தும்படி ஜனதா விமுக்தி பெரமுனா எம்.பி. விஜிதா கேட்டக் கொண்டார். இதையடுத்து ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சபாநாயகரின் முடிவுக்கு ஆதரவாக 121 ஓட்டுகள் கிடைத்தன. எதிராக, அதாவது ராஜபக்சேவுக்கு ஆதரவாக ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை.

    நாடாளுமன்றத்தில் 3-வது முறையாக நடத்தப்பட்ட ஓட்டெடுப்பிலும் ராஜபக்சேவுக்கு பலத்த அடி விழுந்துள்ளது, குறிப்பிடத்தக்கது. #srilankaparliament #rajapaksa #ranilwickramasinghe #sirisena
    தேர்தல் அன்று தனது வாக்கை அனைவரும் பார்க்கும்படி பகிரங்கமாக பதிவு செய்தது குறித்து இம்ரான்கான் மன்னிப்பு கேட்க தேர்தல் கமிஷன் வலியுறுத்தி உள்ளது. #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த (ஜூலை) மாதம் 25-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

    அதை தொடர்ந்து அக்கட்சியின் தலைவரான இம்ரான்கான் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். இவர் இஸ்லாமாபாத் எம்.பி. தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    தேர்தல் அன்று தனது வாக்கை அனைவரும் பார்க்கும்படி பகிரங்கமாக பதிவு செய்தார். அந்த போட்டோ மற்றும் வீடியோ அனைத்து பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாகிஸ்தான் தேர்தல் கமி‌ஷனில் புகார் செய்யப்பட்டது. அதற்கு 4 பேர் கொண்ட குழுவிடம் பதில் அளிக்கும்படி இம்ரான்கானுக்கு தலைமை தேர்தல் கமி‌ஷனர் நோட்டீசு அனுப்பினார்.



    அதற்கு இம்ரான்கான் சார்பில் அவரது சட்ட ஆலோசகர் பாபர் அவான் நேரில் ஆஜராகி எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில், இம்ரான்கான் வாக்கு பதிவு செய்த போட்டோவும், வீடியோவும் அவரது அனுமதியின்றி எடுக்கப்பட்டது.

    இம்ரான்கான் வாக்களித்த போது தொண்டர்களின் கூட்ட நெரிசலால் வாக்கை பதிவு செய்வதை மறைப்பதற்கு அமைக்கப்பட்டிருந்த திரை கீழே விழுந்துவிட்டது. எனவே பகிரங்கமாக வாக்களித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை என கூறப்பட்டிருந்தது.

    ஆனால் அவரது பதிலை தேர்தல் கமி‌ஷன் ஏற்றுக் கொள்ளவில்லை மாறாக பகிரங்கமாக வாக்களித்தற்காக இம்ரான்கான் மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் அவரது கையெழுத்துடன் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. #ImranKhan
    ×