என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாஷிங்டன்"

    • MI நியூயார்க் அணியில் அதிகபட்சமாக டீகாக் 77 ரன்கள் அடித்தார்
    • வாஷிங்டன் அணியில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 70 ரன்கள் அடித்தார்

    MLC டி20 தொடரின் இறுதிப்போட்டியில் MI நியூயார்க் மற்றும் வாஷிங்டன் ப்ரீடம் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற வாஷிங்டன் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய MI நியூயார்க் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக டீகாக் 77 ரன்கள் அடித்தார்.

    இதையடுத்து 181 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வாஷிங்டன் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

    கடைசி ஒவரில் வாஷிங்டன் அணி வெற்றி பெற 12 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், MI நியூயார்க் பவுலர் ருஷி உகர்கர் அந்த ஓவரில் 1 விக்கெட் எடுத்து 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அசத்தினார். 

    • சுங்கத்துறைக்கு சொந்தமான நாய் ஹமேத் என்பவரின் உடைமையைப் பார்த்து குரைத்தது.
    • இதனால் ஆத்திரம் அடைந்த ஹமேத் அந்த நாயை எட்டி உதைத்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள டல்லாஸ் விமான நிலையத்தில் பயணிகளின் உடைமையை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது, சுங்கத்துறைக்குச் சொந்தமான நாய் எகிப்தில் இருந்து சென்ற ஹமேத் என்ற நபரின் உடைமையைப் பார்த்து குரைத்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ஹமேத் அந்த நாயை எட்டி உதைத்தார்.

    இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அவரது உடைமையை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரது பையில் சுமார் 45 கிலோ தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் இருந்தன. அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் ஹமேத்தை போலீசார் கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அங்கு அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, நாயின் சிகிச்சைக்கான செலவு சுமார் ரூ.70 ஆயிரத்தைச் செலுத்த உத்தரவிட்டது.

    • கமலா ஹாரிசுக்கு ஜனநாயக கட்சியினரிடையே ஆதரவு அதிகரித்தது.
    • கமலா ஹாரிசுக்கு நன்கொடை குவிந்து வருகிறது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்ட தற்போதைய அதிபர் ஜோ பைடன், தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் துணை அதிபர் கமலா ஹாரிசை அதிபர் வேட்பாளராக்க தனது ஆதரவை தெரிவித்தார்.

    கமலா ஹாரிசுக்கு ஜனநாயக கட்சியினரிடையே ஆதரவு அதிகரித்தது. அவர் அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்கான பிரதிநிதிகள் ஆதரவு எண்ணிக்கையை பெற்றார்.

    இதன்மூலம் அவர் அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது. இதையடுத்து கமலா ஹாரிசுக்கு நன்கொடை குவிந்து வருகிறது.

    இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து புதிய கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டன. குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பை விட துணை அதிபர் கமலா ஹாரிஸ் 2 சதவீதம் அதிகமான புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளதாக ராய்ட் டர்ஸ்-இப்சோஸ் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கருத்துக்கணிப்பின்படி கமலா ஹாரிஸ் 44 சதவீத ஆதரவை பெற்று உள்ளார். டிரம்புக்கு 42 சதவீத ஆதரவு உள்ளது.

    சில வாரங்களுக்கு முன்பு அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டால் டிரம்புக்கு எதிராக அவருக்கு ஆதரவு எவ்வளவு இருக்கும் என்று கருத்துக்கணிப்பு நடத்தப் பட்டதில் இருவரும் சம நிலையுடன் இருந்தனர்.

    தற்போது கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராகி உள்ள நிலையில் நடத்தப்பட்ட புதிய கருத்துக் கணிப்பில் டிரம்பை பின்னுக்கு தள்ளி உள்ளார்.

    அதேபோல் டிரம்பிற்கு எதிரான போட்டியில் ஜோபைடன் 2 புள்ளி குறைவாக இருந்தார். ஆனால் தற்போது கமலா ஹாரிஸ் உடன் ஒப்பிடும் போது டிரம்ப் 2 புள்ளிகள் குறைவாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் டிரம்புக்கு கடும் சவால் அளிக்கக்கூடிய போட்டியாளராக கமலா ஹாரிஸ் உள்ளார்.

    • ஜோபைடன் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.
    • உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு கடந்த 17-ந்தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு லேசான அறிகுறி தென்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து அவர் டெலாவேரில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். அவரது உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து ஜோபைடன் குணமடைந்தார். இதுகுறித்து அவரது டாக்டர் கெவின் ஓ கானர் கூறும்போது, அதிபர் ஜோபைடனுக்கு ஆன்டிஜென் சோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வந்தது.

    அவர் தனது நோய்த்தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். அவருக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லை என்றார்.

    இதையடுத்து ஜோபைடன் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். அப்போது அவர் கூறும்போது, நான் நன்றாக உணர்கிறேன் என்று தெரிவித்தார்.

    ×