அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி. மேயர் பதவிக்கு போட்டியிடும் 'தேனி' பெண்!

டிரம்ப் உடைய குடியரசு கட்சி வேட்பாளரை எதிர்கொள்வார்.வாஷிங்டன் டி.சி.-யில் ஜனநாயகக் கட்சிக்கு வலிமையான வாக்கு வங்கி உள்ளது.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி. மேயர் பதவிக்கு போட்டியிடும் 'தேனி' பெண்!
Published on: 

அமெரிக்காவின் தலைநகராக வாஷிங்டன் டி.சி. நகரம் உள்ளது. இங்கு விரைவில் மேயர் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த் தேர்தலில் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ரினி சம்பத் (31) போட்டியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ரினி சம்பத் தேனி மாவட்டத்தில் பிறந்தவர். தனது 7 வயதில் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்.

ஜனநாயகக் கட்சியை சேர்ந்த இவர், மேயர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன், ஜனநாயகக் கட்சியின் உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.

அதில் வெற்றி பெற்றால், ஜனநாயக கட்சி சார்பில் மேயர் தேர்தல் வேட்பாளராக அவர் முன்னிறுத்தப்பட்டு டிரம்ப் உடைய குடியரசு கட்சி வேட்பாளரை எதிர்கொள்வார்.

வாஷிங்டன் டி.சி.-யில் ஜனநாயகக் கட்சிக்கு வலிமையான வாக்கு வங்கி இருப்பதால், உட்கட்சி தேர்தலில் ரினி சம்பத் வெற்றி பெற்றால், மேயர் தேர்தலில் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதி என்றே கூறப்படுகிறது.

ரினி சம்பத் ஏற்கனவே தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக 15,000 டாலர்களுக்கும் மேலாக நிதி திரட்டியுள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com