என் மலர்tooltip icon

    உலகம்

    விமான நிலையத்தில் நாயை எட்டி உதைத்த எகிப்து பயணி கைது
    X

    விமான நிலையத்தில் நாயை எட்டி உதைத்த எகிப்து பயணி கைது

    • சுங்கத்துறைக்கு சொந்தமான நாய் ஹமேத் என்பவரின் உடைமையைப் பார்த்து குரைத்தது.
    • இதனால் ஆத்திரம் அடைந்த ஹமேத் அந்த நாயை எட்டி உதைத்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள டல்லாஸ் விமான நிலையத்தில் பயணிகளின் உடைமையை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது, சுங்கத்துறைக்குச் சொந்தமான நாய் எகிப்தில் இருந்து சென்ற ஹமேத் என்ற நபரின் உடைமையைப் பார்த்து குரைத்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ஹமேத் அந்த நாயை எட்டி உதைத்தார்.

    இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அவரது உடைமையை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரது பையில் சுமார் 45 கிலோ தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் இருந்தன. அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் ஹமேத்தை போலீசார் கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அங்கு அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, நாயின் சிகிச்சைக்கான செலவு சுமார் ரூ.70 ஆயிரத்தைச் செலுத்த உத்தரவிட்டது.

    Next Story
    ×