என் மலர்
உலகம்

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த ஜோபைடன்
- ஜோபைடன் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.
- உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு கடந்த 17-ந்தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு லேசான அறிகுறி தென்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் டெலாவேரில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். அவரது உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து ஜோபைடன் குணமடைந்தார். இதுகுறித்து அவரது டாக்டர் கெவின் ஓ கானர் கூறும்போது, அதிபர் ஜோபைடனுக்கு ஆன்டிஜென் சோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வந்தது.
அவர் தனது நோய்த்தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். அவருக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லை என்றார்.
இதையடுத்து ஜோபைடன் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். அப்போது அவர் கூறும்போது, நான் நன்றாக உணர்கிறேன் என்று தெரிவித்தார்.
Next Story






