என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Chief Electoral Officer"
- நரேஷ் குப்தா 2005 முதல் 2010 வரை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றினார்.
- நேர்மையுடன் சேவையாற்றிய அவர், சிறந்த நிர்வாகியாக என்றும் நினைவுகூரப்படுவார்.
சென்னை:
தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா காலமானார். அவரது மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், மூத்த ஐஏஎஸ் அதிகாரி நரேஷ் குப்தாவின் மறைவு வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த சிரத்தையுடனும் நேர்மையுடனும் சேவையாற்றிய அவர், சிறந்த நிர்வாகியாக என்றும் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுதாபங்கள். ஓம் சாந்தி' என தெரிவித்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
நரேஷ் குப்தா 2005 முதல் 2010 வரை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றினார். தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
- பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்ததாக மதுரை மின்வாரிய உயர் அதிகாரி குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
- கொண்டல்ராஜ், மதுரை தலைமை மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக (பாதுகாப்பு) உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
மதுரை
மதுரை டி.வி.எஸ். நகரைச் சேர்ந்தவர் வர்ஷா (வயது 24). இவர் மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு கொடுத்து உள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்ப தாவது:-
நான் பி.எஸ்.சி. பேஷன் டிசைனிங் படித்து உள்ளேன். எனது தந்தை கே.புதூரில் ஆயத்த ஆடை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் எனக்கு ஜனார்த்தனன் என்பவருடன் திருமணமா னது. அப்போது என் வீட்டார் சார்பில் 23 லட்சம் ரூபாய் செலவில் நிலம் ஒன்றை வாங்கி கொடுத்தோம். திருமணத்தின்போது 300 பவுன் நகை வரதட்ச ணையாக கொடுக்கப்பட்டது. இது தவிர 15 கோடி ரூபாய் செலவில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் கணவர் ஜனார்த்தனன் தினந்தோறும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து கூடுதல் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்து வந்தார். இதற்கு அவரது தந்தை கொண்டல்ராஜ் மற்றும் தாய் சுமதி ஆகியோர் உடந்தையாக உள்ளனர்.
எனது தந்தை பெயரில் உள்ள கார்மெண்ட்ஸ் நிறுவனத்தை, என் பெயருக்கு மாற்ற வேண்டுமென்று ஜனார்த்தனன் தொந்தரவு செய்து வந்தார். எனவே நான் தற்கொலை முயற்சி செய்தேன். அப்போது என்னை உறவினர்கள் காப்பாற்றினார்கள். எனக்கு வரதட்சணை கொடுமை செய்துவரும் ஜனார்த்தனன், கொண்டல்ராஜ் மற்றும் சுமதி ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
எனவே இதில் தொடர்பு உடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் அக்பர்கான் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொண்டல்ராஜ், மதுரை தலைமை மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக (பாதுகாப்பு) உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

சென்னை:
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்துள்ள பேட்டி விவரம்:-
கேள்வி:- அரசு ஊழியர் மற்றும் அரசு சாரா ஊழியர்களின் தபால் ஓட்டு பதிவில் தாமதம் ஏதும் ஏற்பட்டதா? பலருக்கு இன்னும் ஓட்டு சீட்டே வரவில்லை என்று அரசு ஊழியர் சங்கம் கூறி இருக்கிறதே?
பதில்:- இது சம்பந்தமான அனைத்து விவரங்களையும் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளோம். அனைத்து தபால் ஓட்டு சீட்டுகளும் முறைப்படி வழங்கப்பட்டன. மாவட்ட தேர்தல் அதிகாரிகளும், தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் இதை கவனித்து கொண்டார்கள்.
தற்போது இதன் ஓட்டு பெட்டிகள் தேர்தல் கமிஷன் வழிகாட்டுதல்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் இருக்கிறது. மேலும் இந்த விவகாரம் கோர்ட்டு விசாரணையில் இருக்கிறது.
கே:- தேர்தல் முடிந்த பிறகும் தேர்தல் தொடர்பான ஆவணங்களை தேர்தல் அதிகாரிகளே கைவசம் வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறதே?
ப:- இது சம்பந்தமாகவும் கோர்ட்டில் விளக்கம் அளித்து விட்டோம். விசாரணை நிலுவையில் உள்ளது.
கே:- ஓட்டு எந்திரங்களை தேனி தொகுதிக்கு மாற்றியது பற்றி என்ன கூறுகிறீர்கள்?

ப:- தேர்தல் சாதனங்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு மாற்றுவது வழக்கமான நடைமுறைதான். தேர்தல் கமிஷன் விதித்துள்ள விதிமுறைகள்படிதான் இவற்றை செய்தோம்.
அரசியல் கட்சிகளுக்கும் இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த கட்சிகளின் பிரதிநிதிகளும் கையெழுத்திட்டுள்ளனர்.
கோவை மற்றும் திருவள்ளூரில் பயன்படுத்தாத ஓட்டு எந்திரங்கள்தான் இவ்வாறு மாற்றப்பட்டன.
ஓட்டு எந்திரங்கள் மாற்றப்படும் போது முதல்கட்ட பரிசோதனை நடைபெறும். பின்னர் ஓட்டு எந்திரங்கள் ஸ்டிராங் அறைக்கு கொண்டு செல்லப்படும். எத்தனை ஓட்டு பெட்டிகள் என்ற விவரமும் வேட்பாளர்களுக்கு தெரிவிக்கப்படும்.
கே:- தேர்தல் போலீஸ் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா சில அதிகாரிகளை மாற்றம் செய்ய கூறிய போதும், அதை செய்யவில்லை என்று கூறப்படுகிறதே? இதற்கு யார்தான் பொறுப்பு?
ப:- எப்போது இது போன்ற பரிந்துரை வந்தாலும் அதுபற்றி தேர்தல் கமிஷனுக்கு தகவல் அனுப்பி விடுவோம். தேர்தல் கமிஷன் தான் இதில் முடிவு எடுக்கும்.
இவ்வாறு சத்யபிரத சாகு கூறினார்.
தமிழகத்தில் அதிக பணம் புழங்கும் தொகுதிகள் பற்றி தேர்தல் கமிஷனுக்கு தெரியும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு கூறினார்.
இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் சத்யபிரத சாகு நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழகத்துக்கு 150 கம்பெனி துணை ராணுவம் அடுத்த வாரம் வர உள்ளது. இதற்கான ஒப்புதலை தேர்தல் கமிஷன் அளித்துள்ளது. ஒவ்வொரு கம்பெனியிலும் 90 வீரர்கள் இருப்பார்கள்.
கடந்த பாராளுமன்ற தேர்தலைவிட (140 கம்பெனிகள்) இந்த முறை அதிக வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலுக்கு 200 கம்பெனி துணை ராணுவத்தை கேட்டிருந்தோம். தற்போது 160 கம்பெனி துணை ராணுவத்தினரை அனுப்ப தேர்தல் கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது. அதில் ஏற்கனவே 10 கம்பெனி துணை ராணுவத்தினர் வந்துவிட்டனர்.
எந்தெந்த தொகுதிகளுக்கு துணை ராணுவ வீரர்களை அனுப்புவது என்பது பற்றி மாவட்ட தேர்தல் அதிகாரிகள், போலீஸ் சூப்பிரண்டுகளிடம் ஆலோசித்துள்ளோம். துணை ராணுவ வீரர்கள் தமிழகத்துக்கு வந்ததும் எல்லா தொகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்படுவார்கள்.
தமிழகத்தில் செய்யப்பட்டு வரும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் கமிஷனர்கள் கடந்த மூன்று நாட்களாக ஆலோசனை நடத்தினார்கள். தமிழகத்தில் பண பலத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அனைத்து வேட்பாளர்களும் சரிசமமான முறையில் போட்டியிட வழிவகை செய்யவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அவர்கள் நடத்திய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு காணொலி காட்சி மூலமாக ஆலோசனை வழங்கப்பட்டது. அதிக அளவிலான பணத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில், வருமான வரித்துறை, வருவாய் புலனாய்வுத்துறை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஆகிய அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தப்பட்டது.
தமிழகத்தில் தேர்தலின்போது பண பலத்தை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 4-ந் தேதி காலை 9 மணி வரையில் பல்வேறு இடங்களில் இருந்து ரூ.45.57 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
யார்-யாரிடம், எந்தெந்த இடங்களில் இருந்து எவ்வளவு பணம் பறிமுதல் செய்து உள்ளது என்கிற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
தேர்தல் கமிஷனின் கண்காணிப்பு குழு, பறக்கும் படை மூலமாக ரூ.94.10 கோடி பறிமுதல் செய்து உள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச்செல்லப்பட்ட பணத்துடன், 520.65 கிலோ தங்கமும், 421 கிலோ வெள்ளியும் பறிமுதல் ஆகியுள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.139.73 கோடியாகும்.
தேர்தலை முன்னிட்டு உரிமம் பெற்ற 19 ஆயிரத்து 655 துப்பாக்கிகள் உரியவர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக கடத்திக்கொண்டு செல்லப்பட்ட ரூ.25.78 லட்சம் மதிப்புள்ள 10 ஆயிரத்து 198 லிட்டர் மதுபானமும் பறிமுதல் செய்யப்பட்டது.
தேர்தல் பணியில் இருப்பவர்களுக்கு வாக்களிக்க வசதியாக, தபால் ஓட்டுகள் வழங்கப்பட உள்ளன. இந்த வாரத்தில் இரண்டாவது பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. அப்போது அவர்களுக்கு தபால் வாக்குகள் அளிக்கப்படும். அங்கேயே அந்த வாக்குகளை செலுத்துவதற்கான வசதியும் ஏற்படுத்தப்படும்.
தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்த பிறகும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும். வறட்சி, குடிநீர் வினியோகம் போன்ற முக்கிய பணிகள் பற்றி அரசு உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தலாம். இதுபோன்ற பணிகளுக்கு சிறப்பு அனுமதியை தேர்தல் கமிஷன் வழங்கும்.
தமிழகத்தில் பல தொகுதிகள் அதிக அளவில் பணம் புழங்கும் தொகுதிகளாக உள்ளன. இதுபற்றி தேர்தல் கமிஷனும் அறிந்துள்ளது. எனவேதான் இங்கு ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 2 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.#SatyabrataSahoo
மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. லால் தன்ஹாவ்லா முதல்-மந்திரியாக இருக்கிறார். அம்மாநில சட்டசபைக்கு வருகிற 28-ந்தேதி தேர்தல் நடக்க இருக்கிறது.
இந்த நிலையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.பி.சசாங்கை உடனடியாக நீக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-மந்திரி கடிதம் எழுதி உள்ளார். அதில், சசாங்க் மீது மக்கள் முழுமையாக நம்பிக்கை இழந்து விட்டதாகவும், சுமுகமாக தேர்தல் நடைபெற அவரை நீக்குவதுதான் ஒரே தீர்வு என்றும் அவர் கூறியுள்ளார்.
புதிய நியமனம் செய்ய முடியாவிட்டாலும், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியிடம் சசாங்க் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சபாநாயகருமான ஹிப்பி நேற்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததோடு, கட்சியில் இருந்தும் விலகினார்.
அதனை தொடர்ந்து அவர் உடனடியாக பா.ஜ.க.வில் இணைந்தார். தன்னை முதல்-மந்திரி மனவேதனை அடைய செய்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
ஹெப்பால் வாக்குச்சாவடியில் நாளை(திங்கட்கிழமை) மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
கர்நாடக சட்டசபைக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. இதில் சுமார் 70 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் பெங்களூரு ஹெப்பால் தொகுதிக்கு உட்பட்ட லொட்டேகொல்லஹள்ளியில் காந்தி வித்யாலயா ஆங்கில மற்றும் தமிழ் வழி பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது.
அந்த வாக்குச்சாவடியில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அவை செயல்படவில்லை. இதனால் அங்கு ஓட்டுப்பதிவே நடக்கவில்லை. ஓட்டுப்போட வந்த வாக்காளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதையடுத்து அந்த வாக்குச்சாவடியில் மட்டும் நாளை(திங்கட் கிழமை) மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட வாக்காளர்களிடம் பல்வேறு விளம்பரங்கள் மூலம் இந்த மறுவாக்குப்பதிவு குறித்த தகவலை தெரியப்படுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. திங்கட்கிழமை அன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் எனறும் கூறப்பட்டுள்ளது. #KarnatakaElection2018 #HebbalAssembly
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
