search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INDIA Bloc"

    • ஜெயிலுக்குள் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக சதி.
    • அவரது உடலில் 26 முறை சர்க்கரை அளவு குறைந்துள்ளது.

    டெல்லி மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கெஜ்ரிவால் உடல்நிலை மோசமடைந்துள்ளதை வலியுறுத்தி ஜூலை 30-ந்தேதி இந்தியா கூட்டணி ஜந்தர் மந்தரில் பேரணி நடத்துகிறது.

    ஜெயிலில் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது. ஜெயிலில் ஜூலை 3-ந்தேதியில் இருந்து ஜூலை 7-ந்தேதி வரை 26 முறை அவரது சர்க்கரை அளவு 26 முறை குறைந்ததாக மெடிக்கல் ரிப்போர்ட் சொல்கிறது என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

    பாஜக தலைமையிலான மத்திய அரசு மற்றும் டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா கெஜ்ரிவால் வாழ்க்கையுடன் விளையாடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

    அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கும் என்பது பாஜகவுக்கு தெரியும். இதனால் அவர்கள் சிபிஐ மூலம் கைது செய்தனர். கெஜ்ரிவால் கடந்த 30 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதும் அவர்களுக்கு தெரியும்.

    காவலில் இருக்கும்போது அவருடைய உடல் எடை 8.5 கிலோ குறைந்தது. அவரது சர்க்கரை அளவு கண்காணிக்கப்பட்டு துணைநிலை ஆளுநர் மற்றும் மத்திய அரசுடன் பகிரப்பட்டது. கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு அபாயகரமான அளவுக்குக் குறைந்துள்ளது அவர்களுக்குத் தெரியும் எனவும் ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

    • மேற்கு வங்காளத்தில் பாஜக கைவசம் இருந்த 3 தொகுதிகளை திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
    • பாஜக ஆளும் உத்தரகாண்டில் இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி வாகை சூடுகிறது.

    மேற்கு வங்காளம் (4), இமாச்சல பிரதேசம் (3), தமிழ்நாடு (1), பஞ்சாப் (1), உத்தரகாண்ட் (2), பீகார் (1), மத்திய பிரதேசம் (1) ஆகிய மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு கடந்த 10-ந்தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 13 தொகுதிகளில் சுமார் 11 தொகுதிகளை இந்தியா கூட்டணி கட்சிகள் கைப்பற்றுகிறது.

    ஏழு மாநிலங்களில் மத்திய பிரதேசம், உத்தரகாண்டில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பீகாரில் பாஜக ஆதரவுடன் நிதிஷ் குமார் ஆட்சி செய்து வருகிறார். இந்த மூன்று மாநிலங்களில் நான்கு இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 3 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற இருக்கிறது.

    மேற்கு வங்காளத்தில் நான்கு தொகுதிகளிலும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் நிலையில் உள்ளது. பாஜக-விடம் இருந்த மூன்று தொகுதிகளை தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. இவர் இந்தியா கூட்டணியில் இடம் பெறவில்லை என்றாலும் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்.

    தமிழகத்தில் திமுக தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமக-வை வீழ்த்தியுள்ளது.

    மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அமர்வார் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தீரன் ஷா முன்னிலை பெற்று வந்தார். இறுதியில் பாஜக வெற்றி பெற்றது.

    உத்தரகாண்டில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கே உள்ள இரண்டு தொகுதிகளான பத்ரிநாத் மற்றும் மங்க்லாயுர் தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. ஒரு தொகுதியில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவின் மனைவி கம்லேஷ் தாகூர் வெற்றி பெற்றுள்ளார். மற்றொரு தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை பெற்று வரும் நிலையில், பாஜக ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறது.

    பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளார். இங்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன.

    பீகாரில் நிதிஷ் குமார் கட்சி வேட்பாளர் கலாதர் பிரசாத் மண்டல் முன்னிலை வகிக்கிறார்.

    சமீபத்தில் முடிவடைந்த மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி பாஜகவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. இதனால் பாஜகவால் தனியாக 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளார்.

    • வன்முறை வெடித்ததில் இருந்து நான் மணிப்பூருக்கு 3 முறை சென்றிருக்கிறேன்.
    • துரதிர்ஷ்டவசமாக நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றார் ராகுல் காந்தி.

    புதுடெல்லி:

    மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சமீபத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இந்நிலையில், மணிப்பூர் மக்களின் நிலை குறித்து ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    வன்முறை வெடித்ததில் இருந்து நான் மணிப்பூருக்கு 3 முறை சென்றிருக்கிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

    இன்றும் மாநிலம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வீடுகள் எரிகின்றன. அப்பாவிகளின் உயிர்கள் ஆபத்தில் உள்ளன. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நிவாரண முகாம்களில் வாழத் தள்ளப்படுகின்றனர்.

    பிரதமர் மணிப்பூருக்கு நேரில் சென்று, மாநில மக்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்து, அமைதிக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

    இந்த அவலத்திற்கு முடிவு கட்ட மற்றும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க காங்கிரஸ் கட்சியும், இந்தியா கூட்டணி கட்சிகளும் மணிப்பூரில் அமைதியின் அவசியத்தை பாராளுமன்றத்தில் முழு பலத்துடன் எழுப்பும் என தெரிவித்தார்.

    • நாட்டின் கடந்த மற்றும் தற்போதைய விசயங்கள் தொடர்பாக ஏமாற்றும் வரலாறு காங்கிரஸக்கு உண்டு.
    • தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாரும் தப்பமாட்டார்கள் என்று நாடு நம்புகிறது.

    நீட் பேப்பர் லீக் தொடர்பாக பீகார் மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நீட் தேர்வில் பல மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றனர். 1500-க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது.

    இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. நீட் தேர்வில் ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளது என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின. மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்து விட்டு மீண்டும் நடத்த வேண்டும் என போராட்டத்தில் குதித்தனர். இதனால் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்ப்பட்டது. கருணை மதிப்பெண் பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது.

    தேசிய தேர்வு முகமையின் பொது இயக்குனர் அதிரடியாக மாற்றப்பட்டார். பேப்பர் லீக் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கப்பட்டன. இவைகளை வருகிற 7-ந்தேதி நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

    இதற்கிடையே நாடாளுமன்றத்தில் இது தொடர்பான ஒருநாள் முழுவதும் விவாதிக்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    இன்று மாநிலங்களவையில் பேசிய பிரதமர் மோடி "மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்களை அரசு விட்டு வைக்காது" எனக் கூறினார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி நீட் விவகாரத்தில் பொய்களை பரப்பி வருகிறது. ஏமாற்று கொள்கைகளை தவறாக வழிநடத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மத்திய உயர்க்கல்வி துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியதாவது:-

    நாட்டின் கடந்த மற்றும் தற்போதைய விசயங்கள் தொடர்பாக ஏமாற்றும் வரலாறு காங்கிரஸக்கு உண்டு. இவர்களின் இந்த எண்ணம் நீட் விவகாரத்திலும் வெளியில் வந்துள்ளது. பொய்கள் மற்றும் வதந்திகளின் உதவியுடன் பிரச்சினைகளில் இருந்து விலகி நிலையற்ற தன்மையை உருவாக்கும் இந்திய கூட்டணியின் நோக்கம் தேச விரோதமானது மற்றும் மாணவர் விரோதமானது.

    இன்று மாநிலங்களவையில் பேசிய பிரதமர் மோடி, இளைஞர் சக்தி மற்றும் அவர்களின் பிரகாசமான எதிர்காலம்தான் அரசாங்கத்தின் முதல் முன்னுரிமை என்றும், இந்த அரசாங்கம் நாட்டின் ஒவ்வொரு இளம் மாணவருடனும் உள்ளது என்றும், யாருக்கும் எந்த அநீதியும் நடக்க அனுமதிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

    இதற்கான சட்டத்தை கொண்டு வர அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாரும் தப்பமாட்டார்கள் என்று நாடு நம்புகிறது. இப்போது காங்கிரஸ் கட்சியும், இந்தியக் கூட்டணியும் நீட் விவகாரத்தில் தவறான ஏமாற்றுக் கொள்கையை நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

    • விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி முழக்கத்தில் ஈடுபட்டனர்.
    • மேலும் அரசியல் ஆதாயத்துக்காக சிபிஐ, ED போன்ற அமைப்புகளை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டி உள்ளனர்.

    3-வது முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24-ந்தேதி தொடங்கியது. இதில் 27-ந்தேதி நடந்த இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அதைத்தொடர்ந்து மறுநாளே ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்குவதாக இருந்தது.

    ஆனால் நீட் தேர்வு முறைகேடு குறித்து முதலில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. இது தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசும் அளித்து இருந்தன. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவற்றை நிராகரித்ததுடன், ஜனாதிபதி உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சிகள் தங்கள் பிரச்சனை குறித்து பேசலாம் என தெரிவித்தார்.

    ஆனால் இதை ஏற்காத எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதைப்போல மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் நீட் விவகாரத்தை முன்வைத்து அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை நடவடிக்கைகள் பெரும்பாலும் முடங்கின.

    எனினும் மாநிலங்களவையில் ஜனாதிபதி உரை மீதான விவாதம் தொடங்கியது. பா.ஜனதா எம்.பி. சுதான்ஷு திரிவேதி இந்த விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் பா.ஜனதா எம்.பி. கவிதா பதிதார் மற்றும் 9 உறுப்பினர்கள் பேசினர். இந்த நிலையில் ஜனாதிபதி உரை மீதான விவாதம் இன்று மீண்டும் இரு அவைகளிலும் சற்று நேரத்தில் தொடங்குகிறது.

    இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி முழக்கத்தில் ஈடுபட்டனர். மேலும் அரசியல் ஆதாயத்துக்காக சிபிஐ, ED போன்ற அமைப்புகளை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டி உள்ளனர்.

    முன்னதாக, நீட் தேர்வு முறைகேடு மற்றும் புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்தது குறித்து விவாதிக்க கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. இதனால் இன்றைய கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    • அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்புகள் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளன.
    • மூன்று நாள் சிபிஐ காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி.

    டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அம்மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து ஜாமின் கேட்டு போராடி வந்த நிலையில் ஜாமின் கிடைப்பதற்கான வாய்ப்பு கிட்டியது. இந்த நிலையில் சிபிஐ கைது செய்துள்ளது.

    தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி தலைவர் சஞ்சய் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேலும், தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசுவேன். ஏற்கனவே உத்தவ் தாக்கரேயிடம் பேசியுள்ளேன். காங்கிரஸ் தலைவர்களுடன் பேசுவேன். பாஜக விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் இது தொடர்பாக குரல் எழுப்ப வேண்டுகோள் விடுக்கப்படும்.

    மாநிலத்தை பொறுத்த வரையில் எங்களுக்கும் காங்கிரஸ்க்கும் இடையில் வேறுபாடு உள்ளது. ஆனால் அரசியலமைப்பு, ஜனநாயகம் மற்றும் விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்துதல் போன்ற தேசிய அளவில் பாஜக-வுக்கு எதிராக எதிராக கட்சிகள்" என்றார்.

    • நாங்கள் துணை சபாநாயகர் பதவி பற்றி கேட்டோம். அப்போது எங்களுக்கு எந்த உறுதிமொழியும் வழங்கப்படவில்லை.
    • இந்தத் தேர்தலின் முழுப்பொறுப்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமையால்தான் என்றார்.

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதியாக தேர்வானவர்கள் எம்.பி.க்களாக பதவி ஏற்றுக்கொண்டுள்ளனர். கடந்த 24-ந்தேதி தொடங்கிய முதல் நாள் பாராளுமன்ற கூட்டத்தில் 262 பேரும், நேற்று 271 பேரும் எம்.பி.க்களாக பதிவியேற்றுக்கொண்டுள்ளனர்.

    புதிய எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதற்காக ஒடிசாவை சேர்ந்த மகதாப்பை தற்காலிக சபாநாயகராக ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து அவரது முன்னிலையில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர்.

    இதையடுத்து, பாராளுமன்ற சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 11 மணிக்கு நடைபெற இருக்கிறது. பாராளுமன்ற வரலாற்றில் மூன்றாவது முறையாக நடைபெற இருக்கும் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்கட்சிகள் சார்பில் மவெலிக்கரா எம்.பி. கே. சுரேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    இந்த நிலையில், சபாநாயகர் தேர்தலில் எதற்காக போட்டியிடுகிறோம் என்பது குறித்து எதிர்கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுரேஷ் கூறியதாவது:-

    நாங்கள் சபாநாயகருக்கு எதிராக தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. ஆனால் மோடி தலைமையிலான அரசாங்கம், இந்திய கூட்டணியை குறிப்பாக காங்கிரஸ் கட்சித் தலைமையை அணுகியபோது, நாங்கள் துணை சபாநாயகர் பதவி பற்றி கேட்டோம். அப்போது எங்களுக்கு எந்த உறுதிமொழியும் வழங்கப்படவில்லை.

    முதலில் நீங்கள் சபாநாயகர் தேர்தலை ஆதரவு அளிங்கள், அதன் பிறகு துணை சபாநாயகரை பற்றி பேசலாம் என்றனர்.

    அந்த பதில் எங்களுக்கு திருப்திகரமாக இல்லை. எனவே, சபாநாயகர் தேர்தலில் போட்டியிட எங்கள் தலைவர்கள் முடிவு செய்தனர்.

    இந்த தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிடிவாதமான நிலைப்பாட்டால் ஏற்பட்டது. இல்லாவிட்டால் தவிர்த்திருக்கலாம். ஆனால், அவர்கள் எதிர்க்கட்சிகளுடன் ஒத்துழைக்க தயாராக இல்லை. துணை சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சிக்கு வாய்ப்பளிக்க தயாராகவும் இல்லை.

    அதனால் தான் இன்று தேர்தல் நடக்கிறது. ஆனால், இந்தத் தேர்தலின் முழுப்பொறுப்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமையால்தான் என்றார்.

    • காங்கிரஸ் கட்சி எம்.பி. கே சுரேஷ் சபாநாயகர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
    • இது தொடர்பாக எங்களிடம் ஆலோசிக்கவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    துணை சபாநாயகர் பதவியை விட்டுக்கொடுக்க மறுத்துள்ள காரணத்தினால் காங்கிரஸ் கட்சி கே. சுரேஷை சபாநாயகர் போட்டிக்கு நிறுத்தியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லா நிறுத்தப்பட்டுள்ளார். ஒருமனதாக சபாநாயகரை தேர்வு செய்ய என்டிஏ விரும்புகிறது. துணை சபாநாயகர் பதவியை விட்டுக்கொடுத்தால்தான் ஒருமனதாக சபாநாயகரை தேர்வு செய்ய சம்மதிப்போம் என காங்கிரஸ் தெரிவித்துள்ளார்.

    ஒருவேளை போட்டி ஏற்பட்டால் காங்கிரஸ் கட்சி அனைத்து எதிர்க்கட்சிகளிடமும் ஆதரவு கேட்க வேண்டும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 30 இடங்களுக்கு மேல் உள்ளது. இதனால் அந்த கட்சியின் ஆதரவும் முக்கியது.

    இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் சபாநாயகர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்வது குறித்து எங்களிடம் எந்தவிதமான ஆலோசனையும் நடத்தப்படவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அபிஷேக் பானர்ஜி கூறுகையில் "இது தொடர்பாக எங்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. துரதிருஷ்டவசமாக ஒருதலைபட்சமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எங்களுடைய கட்சி தலைவர் மம்தா பானர்ஜி சபாநாயகர் தேர்தல் தொடர்பாக முடிவு செய்வார்" என்றார்.

    மக்களவையில் எம்.பி.க்கள் பதவி ஏற்றுக் கொண்டிருந்தபோது அபிஷேக் பார்னஜி உடன் ராகுல் காந்தி பேசிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மக்களவை சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்.
    • நாளை புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதியாக தேர்வானவர்கள் எம்.பி.க்களாக பதவி ஏற்பது நேற்று தொடங்கியது.

    பாராளுமன்றம் நேற்று தொடங்குவதற்கு முன்பு புதிய எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதற்காக ஒடிசாவை சேர்ந்த மகதாப்பை தற்காலிக சபாநாயகராக ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து அவரது முன்னிலையில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர்.

    முதலில் பாராளுமன்ற ஆளும்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் பிரதமர் மோடி அழைக்கப்பட்டு எம்.பி.யாக பதவி ஏற்றார். அவரைத் தொடர்ந்து மத்திய மந்திரிகள் பதவி ஏற்றனர். அதன் பிறகு மாநிலம் வாரியாக ஆங்கில அகர வரிசைபடி எம்.பி.க்கள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகு புதிய எம்.பி.க்கள் அதற்கான கோப்பில் கையெழுத்திட்டனர். நேற்று மொத்தம் 262 பேர் புதிய எம்.பி.க்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

    இன்று 2-வது நாளாக பாராளுமன்றத்தில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர். அனைத்து எம்.பி.க்களும் தமிழில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இன்று மொத்தம் 271 எம்.பி.க்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள். இன்று மாலையுடன் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு விழா நிறைவுக்கு வருகிறது. நாளை புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

    இதனிடையே துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க பா.ஜ.க. மறுத்துவிட்டதால் தேசிய ஜனநாயக கூட்டணி சபாநாயகர் வேட்பாளர் ஓம் பிர்லாவுக்கு ஆதரவு அளிக்காமல் தேர்தலில் போட்டியிட இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது.

    எனினும், மக்களவை சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் இந்தியா கூட்டணி சார்பில் மக்களவை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட கேரள காங்கிரஸ் எம்.பி.கொடிக்குன்னிஸ் சுரேஷ் மனுத்தால் செய்துள்ளார்.

    இந்நிலையில், மக்களவை துணை சபாநாயகர் பதவியை பெறுவது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் இன்று இரவு 8 மணிக்கு பாராளுமன்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    இந்திய பாராளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பொதுவாக துணை சபாநாயகர் பதவி எதிர்கட்சியை சேர்ந்த எம்.பி.க்கு வழங்கப்படுவது வழக்கம்.
    • கடந்த முறை மோடி அரசு தனி மெஜாரிட்டி பெற்றபோதிலும் துணை சபாநாயகர் பதவியை வழங்க மறுத்துவிட்டது.

    மக்களவை தேர்தலில் பாஜக-வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. சபாநாயகர் பதவியை கூட்டணி கட்சிகளுக்கு வழங்க பாஜக விரும்பவில்லை. துணை சபாநாயகர் பதவியையும் வைத்துக் கொள்ள விரும்புவதாக தெரிகிறது.

    பாராளுமன்ற வழக்கப்படி ஆளுங்கட்சி அல்லது கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஒருவர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார். துணை சபாநாயகர் எதிர்க்கட்சியை சேர்ந்த நபருக்கு வழங்கப்படும்.

    ஆனால் பாஜக கடந்த முறை 2-வதாக ஆட்சி அமைக்கும்போது துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்கவில்லை.

    இந்த முறை கூட்டணி ஆட்சி அமைந்துள்ளதாலும், எதிர்க்கட்சிகள் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாலும் துணை சபாநாயகர் பதவியை கேட்டு வலியுறுத்துவோம் என காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் சரத் பவாரிடம் துணை சபாநாயகர் பதவி கேட்டு வலியுறுத்துவீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு "இந்த விதிமுறை கடந்த மோடி அரசால் கடைபிடிக்கப்படவில்லை. இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும். ஆனால், நல்ல பதில் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை" என்றார்.

    மேலும், எதிர்கட்சி தலைவர் பதவி குறித்த கேள்விக்கு "முன்னதாகவே அதிக இடங்களை பிடிக்கும் கட்சி எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறுவது தொடர்பாக ஒப்புக்கொண்டோம். அதனால் காங்கிரஸ் கட்சி அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அந்த கட்சி முடிவு செய்யும்" என்றார்.

    மக்களவை தேர்தலில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி தனியாக 99 இடங்களில் வெற்றி பெற்றது. மகாராஷ்டிராவில் வாய்ப்பு வழங்காததால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒருவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதனால் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 100 ஆக உள்ளது.

    • பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது.
    • பதவியேற்பு விழாவில் பங்கேற்க பல நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. தொடர்ந்து 3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி நாளை பதவியேற்க உள்ளார்.

    தலைநகர் டெல்லியில் நாளை நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்ம்படி பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பதவியேற்பு விழாவில் பங்கேற்க இதுவரை அழைப்பு வரவில்லை என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், மோடியின் பதவியேற்பு விழாவிற்கு சர்வதேச தலைவர்களுக்கு மட்டும்தான் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எங்கள் தலைவர்களுக்கு இதுவரை அழைப்பு விடுக்கவில்லை. இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு அழைப்பு வரும்போது அது குறித்து சிந்திப்போம் என தெரிவித்தார்.

    • பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியுடன் இணைந்து ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டது.
    • டெல்லியில் நடைபெற்ற 7 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி தோல்வியைத் தழுவியது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியுடன் இணைந்து ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டது. டெல்லியில் நடைபெற்ற 7 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி தோல்வியைத் தழுவியது.

    இதற்கிடையே, தலைநகர் தலைநகர் டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி கட்சித் தலைவர் கோபால் ராய் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், பாராளுமன்ற தேர்தலுக்காக இந்தியா கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டோம். வரும் சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி இந்தியா கூட்டணியுடன் இணைந்து போட்டியிடாது. டெல்லி மக்களுடன் இணைந்து சட்டசபைத் தேர்தலை தனியாகச் சந்திப்போம் என தெரிவித்தார்.

    ×