என் மலர்
இந்தியா

பீகார் தேர்தல்: இலவச அறிவிப்புகளை அள்ளி வீசிய இந்தியா கூட்டணி
- பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
- பீகார் சட்டசபைக்கு 2 கட்டமாக அடுத்த மாதம் 6 மற்றும் 11-ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பாட்னா:
பீகார் மாநில சட்டசபைக்கு 2 கட்டமாக அடுத்த மாதம் 6 மற்றும் 11-ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தீவிரமாக பணியாற்றி வருகிறது.
ஆட்சியைக் கைப்பற்றும் வேட்கையில் எதிர்க்கட்சியான தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி-காங்கிரசின் மகாபந்தன் கூட்டணி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையே, பீகார் மாநிலத்தின் சரன் மாவட்டத்தில் உள்ள பர்சா பகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடந்தது. இதில் ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் தலைவர் பவன் கெரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், சட்டசபைக்கான தேர்தல் வாக்குறுதிகளை இந்தியா கூட்டணி இன்று வெளியிட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்.
ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் இலவசம்
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு அரசு வேலைவாய்ப்பு வழங்குவோம்.
மகளிருக்கு மாதம் தோறும் 2,500 ரூபாய் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது.






