என் மலர்tooltip icon

    இந்தியா

    6-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 61.2 சதவீத வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
    X

    6-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 61.2 சதவீத வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    • டெல்லி, அரியானா உள்பட ஆறு மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.
    • 6 கட்ட தேர்தல்களில் மிக குறைவான வாக்குப்பதிவு சதவீதம் 6-ம் கட்ட தேர்தலில் தான் பதிவாகியுள்ளது.

    இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஐந்து கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஆறாவது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று முடிந்தது.

    நேற்று டெல்லி, அரியானா உள்பட ஆறு மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.

    58 தொகுதிகளில் இரவு 11.45 மணி நிலவரப்படி 61.2 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதுவரை நடந்து முடிந்த 6 கட்ட தேர்தல்களில் மிக குறைவான வாக்குப்பதிவு சதவீதம் 6-ம் கட்ட தேர்தலில் தான் பதிவாகியுள்ளது.

    மாநிலம் வாரியாக விவரங்கள் :

    பீகார் - 52.2 சதவீதம்

    டெல்லி - 57.67 சதவீதம்

    அரியானா - 60.4 சதவீதம்

    ஜம்மு காஷ்மீர் - 54.3 சதவீதம்

    ஜார்க்கண்ட் - 63.76 சதவீதம்

    ஒடிசா - 69.56 சதவீதம்

    உத்தர பிரதேசம் - 54.03 சதவீதம்

    மேற்கு வங்கம் - 79.47 சதவீதம்

    Next Story
    ×