என் மலர்
இந்தியா

மணிப்பூருக்கு முன்பு மிசோரம் சென்றார் பிரதமர் மோடி - புதிய ரெயில் பாதையை திறந்து வைத்தார்
- மிசோரம் தலைநகர் முதல் முறையாக இந்திய ரயில்வே நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளது.
- பைராபி-சாய்ராங் புதிய ரெயில் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
வடகிழக்கு மாநிலமான மிசோரமிற்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொண்டார். மிசோரம் தலைநகரான ஐஸ்வாலில் ரூ.9,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
மிசோரம் தலைநகரை முதல் முறையாக இந்திய ரயில்வே நெட்வொர்க்குடன் இணைக்கும் ரூ.8,070 கோடிக்கு மேல் மதிப்புள்ள பைராபி-சாய்ராங் புதிய ரெயில் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இதனையடுத்து, மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக இன்று பிரதமர் மோடி மணிப்பூர் செல்கிறார். மணிப்பூரில் ரூ.8,500 கோடிக்கு மேல் மதிப்புள்ள அவர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மணிப்பூர் கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்குப் பின் முதல்முறையாக பிரதமர் மோடி செல்வதால் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.






