என் மலர்
நீங்கள் தேடியது "Lalduhoma"
- அரசுத்துறைகளில் தகுதியற்ற அனைத்து ஊழியர்களையும் விடுவிப்பது நல்லது என கருதுகிறோம்.
- அவர்கள் அரசு வேலைக்கு தகுதியற்றவர்கள். அவர்கள் பணியில் இருந்து வெளியேறுவது நல்லது.
ஐசால்:
மிசோரம் மாநில கல்வித்துறையின் முன்முயற்சிகள் தொடர்பாக ஐசால் நகரில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல் மந்திரி லால்துஹோமா பங்கேற்று பேசியதாவது:
மிசோரம் மாநிலத்தில் ஒழுங்காக வேலை செய்யாத அரசு ஊழியர்களை கண்டறிந்து அவர்களை வேலையில் இருந்து விடுவிக்க அரசு முடிவு செய்துள்ளது.
அரசுத் துறைகளில் தகுதியற்ற அனைத்து ஊழியர்களையும் விடுவிப்பது நல்லது என கருதுகிறோம். அவர்கள் இனி அரசு வேலைக்கு தகுதியற்றவர்கள். உரிய விதிமுறைகளின்படி அவர்கள் பணியில் இருந்து வெளியேறுவது நல்லது.
சிறப்பாக வேலை செய்யும் திறமையான ஊழியர்களை பணியமர்த்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
தகுதிவாய்ந்த மற்றும் திறமையான பணியாளர்கள் இருப்பதை உறுதிசெய்ய முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
மாநில அரசு ஊழியர்களின் பணிக்காலம் மற்றும் அவர்களின் சேவைகளை மறுபரிசீலனை செய்ய அந்தந்தத் துறைகளில் குழுக்கள் அமைக்கப்படுகின்றன.
அனைத்துத் திட்டங்களும் முறையாகவும், திறம்படவும் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்தார்.
- மிசோ தேசிய முன்னணி கட்சி 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
- சோரம் மக்கள் இயக்க கட்சி தலைவர் லால்டுஹோமா அம்மாநில முதல்வர் ஆனார்.
மிசோரம் சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 7-ம் தேதி ஒரேகட்டமாக நடந்தது. 40 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த திங்கட்கிழமை எண்ணப்பட்டது. இதில் சோரம் மக்கள் இயக்கம் கட்சி 27 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
இதையடுத்து, மிசோ தேசிய முன்னணி கட்சி 10 தொகுதிகளையும், பா.ஜ.க. 2 தொகுதிகளையும், காங்கிரஸ் ஒரு தொகுதியையும் கைப்பற்றியது. ஆட்சியமைக்க பெரும்பான்மை பெற்றதை அடுத்து சோரம் மக்கள் இயக்க கட்சி தலைவர் லால்டுஹோமா அம்மாநில முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.
#WATCH | Aizawl, Mizoram: Zoram People's Movement (ZPM) leader Lalduhoma takes oath as the Chief Minister of Mizoram as the swearing-in ceremony begins pic.twitter.com/oCMbU2xVSf
— ANI (@ANI) December 8, 2023
இவருடன் 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். மிசோரம் மாநிலத்தின் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சோரம்தங்காவும் கலந்து கொண்டிருந்தார்.
- மாநில கவர்னர் ஹரி பாபுவை நேற்று சந்தித்த லால்டுஹோமா, ஆட்சியமைக்க உரிமை கோரினாா்.
- முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பாதுகாப்புப் பொறுப்பு அதிகாரியாக இவா் பணியாற்றியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜஸால்:
வடகிழக்கு மாநிலமான மிசோரமில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 7-ந் தேதி ஒரே கட்டமாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற்றது. மொத்தம் 8.57 லட்சம் வாக்காளா்களைக் கொண்ட இந்த மாநிலத்தில் 82 சத வீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகின. கடந்த 4-ந் தேதி (திங்கட் கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
மாநிலத்தில் ஏற்கெனவே ஆட்சியில் இருந்த மிசோ தேசிய முன்னணியை வீழ்த்தி, மற்றொரு பிராந்திய கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியைக் கைப்பற்றியது.
இக்கட்சி 27 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மிசோ தேசிய முன்னணிக்கு 10 இடங்கள் கிடைத்தன. பா.ஜ.க. 2 இடங்களை மட்டுமே கைப்பற்றிய நிலையில், காங்கிரசுக்கு ஓரிடம்தான் கிடைத்தது.
இந்நிலையில், ஜோரம் மக்கள் இயக்கம் கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில் முதல்-மந்திரியாக கட்சித் தலைவா் லால்டுஹோமா தோ்வு செய்யப்பட்டாா்.
இதைத் தொடா்ந்து, மாநில கவர்னர் ஹரி பாபுவை நேற்று சந்தித்த லால்டுஹோமா, ஆட்சியமைக்க உரிமை கோரினாா்.
மாநில முதல்-மந்திரியாக லால்ஹோமா நாளை (வெள்ளிக்கிழமை) பதவியேற்க உள்ளதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
74 வயதாகும் லால்டு ஹோமா, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவாா். முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பாதுகாப்புப் பொறுப்பு அதிகாரியாக இவா் பணியாற்றியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.