search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை அண்ணா விளையாட்டரங்கில் ஜூனியர் தடகள சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
    X

    பாளை அண்ணா விளையாட்டரங்கில் ஜூனியர் தடகள சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

    • நெல்லை மாவட்ட 24-வது ஜூனியர் தடகள சாம்பியன் போட்டிகள் பாளை அண்ணா விளையாட்ட ரங்கில் நேற்று தொடங்கியது.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் மாநில அளவில் நடைபெற விருக்கும் போட்டிகளில் பங்குபெறுவார்கள்.

    நெல்லை:

    2023-ம் ஆண்டிற்கான நெல்லை மாவட்ட 24-வது ஜூனியர் தடகள சாம்பியன் போட்டிகள் பாளை அண்ணா விளையாட்ட ரங்கில் நேற்று தொடங்கி இன்றுடன் முடிவடைந்தது.

    தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ கலந்து கொண்டு தேசிய கொடி, ஜோதியினை ஏற்றி தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா 6 பிரிவுகளில் (12, 14, 16, 18, 20 வயதுக்கு உட்பட்டோர் கள்) மற்றும் பொது பிரிவுகளில் 500 வீரர்கள், 400 வீராங்கனைகள் உட்பட மொத்தம் 900 பேர் கலந்து கொண்டனர்.

    இதில் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஓட்டப் பந்தயம், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், சங்கிலி குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், மும் முறை தாண்டுதல், உயரம் தாண்டுதல், கோலூன்றி தாண்டுதல் ஆகிய போட்டி கள் உட்பட மொத்தம் 67 போட்டிகள் நடைபெற்றது.

    இப்போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவில் நடைபெற விருக்கும் போட்டிகளில் பங்குபெறுவார்கள்.

    இப்போட்டிகளின் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி யில் நெல்லை மாவட்ட தடகள சங்க தலைவர் செய்யது நவாஸ் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனை களுக்கு வெற்றிக் கோப்பை களும், சுழற்கோப்பைகளும் வழங்கி பாரட்டினார்.

    மேலும் ஆசிய அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் பங்கு பெற்று 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பதக்கம் வென்று சாதனை படைத்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வீராங்கனைகளான தங்கப் பதக்கம் வென்ற கனிஷ்டா தீனா மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற அபிநயா ராஜராஜன் ஆகியோரை ஊக்குவிக்கும் விதமாக நினைவு பரிசு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தடகள சங்க துணைத்தலைவர் சுரேஷ் , டாக்டர் பிரேம்நாத் மற்றும் நிர்வாகிகள், தடகள சங்க உறுப்பினர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பயிற்று நர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட தடகள சங்க செய லாளர் சேது நன்றி கூறினார்.

    Next Story
    ×