search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kabadi"

    • போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 12 பள்ளிகள் கபடி போட்டியிலும், 12 பள்ளிகள் கைப்பந்து போட்டியிலும் பங்கேற்றன.
    • சிறந்த ஆட்டக்காரருக்கான விருதுக்கு தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர் தமிழ்செல்வன் தேர்வு செய்யப்பட்டார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் வெற்றி கேடயத்துக்கான கபடிப்போட்டியும், பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனா் வெற்றி கேடயத்துக்கான கைப்பந்து போட்டியும் நடைபெற்றது. இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 12 பள்ளிகள் கபடி போட்டியிலும், 12 பள்ளிகள் கைப்பந்து போட்டியிலும் பங்கேற்றன.

    போட்டிகளை ஆதித்தனார் கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். கல்லூரி உள்தரஉறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜிம் ரீவ்ஸ் சைலண்ட் நைட் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் கல்லூரியின் முன்னாள் மாணவரும், இந்திய அணியின் கைப்பந்து வீரருமான மங்கள ஜெயபால் கலந்து கொண்டார். தொடர்ந்து கபடி போட்டிகள் செயற்கை தரையிலும், கைப்பந்து போட்டிகள் மாலையில் மின்னொளியிலும் நடைபெற்றன.

    கபடி போட்டியில் தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மேல்நிலைப்பள்ளியும், 2-வது பரிசை திருச்செந்தூர் அருள்மிகு செந்திலாண்டவர் அரசு ேமல்நிலைப்பள்ளியும், 3-வது பரிசை ஆசீர்வாதபுரம் டி.டி.டி.ஏ. மேல்நிலைப்பள்ளியும், நாலுமாவடி காமராசர் மேல்நிலைப்பள்ளியும் பகிர்ந்து கொண்டன. சிறந்த ஆட்டக்காரருக்கான விருதுக்கு தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர் தமிழ்செல்வன் தேர்வு செய்யப்பட்டார். கைப்பந்து போட்டியில், சாயர்புரம் போப் மேல்நிலைப்பள்ளி முதல் பரிசையும், தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி 2-வது பரிசையும் வென்றன. மணப்பாடு செயிண்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி 3-வது பரிசையும், தூத்துக்குடி செயிண்ட் தாமஸ் மேல்நிலைப்பள்ளி 4-வது பரிசையும் பெற்றன. சிறந்த ஆட்டக்காரர் விருதுக்கு சாயர்புரம் போப் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜெகதீசன் தேர்வு செய்யப்பட்டார்.

    மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரி முதல்வர் தலைமை தாங்கினார். கல்லூரி ெசயலாளர் ஜெயக்குமார் கலந்து கொண்டு, கபடி போட்டியில் வெற்றிபெற்ற பள்ளிகளுக்கு தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் வெற்றிக்கேடயத்தையும், கைப்பந்து போட்டியில் வெற்றிபெற்ற பள்ளிகளுக்கு பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் வெற்றிக் கேடயத்தையும் வழங்கி பாராட்டினார். போட்டிகளின் அமைப்பாளர் மோதிலால் தினேஷ் நன்றி கூறினார். விழாவில் ஆதித்தனார் கல்லூரி பேராசிரியர்கள், வேலாயுதம், மாலைசூடும் பெருமாள், பாலகிருஷ்ணன், ேசகர், நூலகர் முத்துக்கிருஷ்ணன், அலுவலக கண்காணிப்பாளர் பொன்துரை மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். போட்டி ஏற்பாடுகளை முதல்வர் ஆலோசனைப்படி உள்தரஉறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜிம் ரீவ்ஸ் சைலண்ட் நைட் செய்திருந்தார்.

    • போட்டியில் 36 மாவட்டத்தை சேர்ந்த வக்கீல்கள் தனித்தனி அணிகளாக பிரிந்து விளையாடினர்.
    • சென்னை உயர்நீதிமன்ற அணி 2-வது பரிசாக ரூ.60 ஆயிரம், கோப்பையை வென்றது.

    நெல்லை:

    மாநில அளவிலான வக்கீல்கள் இடையேயான கபடி போட்டி தூத்துக்குடி தருவைகுளம் மைதானத்தில் நடந்தது. இதில் 36 மாவட்டத்தை சேர்ந்த வக்கீல்கள் தனித்தனி அணிகளாக பிரிந்து விளையாடினர். இந்த போட்டிகளில் நெல்லை மாவட்ட வக்கீல்கள் சங்க அணி முதல் பரிசு ரூ.75 ஆயிரத்தையும், கோப்பையையும் தட்டிச்சென்றது. சென்னை உயர்நீதிமன்ற அணி 2-வது பரிசாக ரூ.60 ஆயிரம் மற்றும் கோப்பையும், தூத்துக்குடி அணி 3-வது பரிசாக ரூ.45 ஆயிரமும் பெற்றன. விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நீதிபதி செல்வம், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் சேர்மன் அமல் ராஜ், துணைத்தலைவர் வேலு கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர்.

    இதற்கான ஏற்பாடுகளை பார் கவுன்சில் உறுப்பினர் மைக்கேல் ஸ்டேனிஷ் பிரபு, தூத்துக்குடி மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் செங்குட்டுவன் ஆகியோர் செய்திருந்தனர். இதில் நெல்லை வக்கீல்கள் சங்க தலைவர் ராஜேஸ்வரன், செயலாளர் மணிகண்டன், மூத்த வக்கீல் பாலகணேசன், செந்தில்குமார், பொருளாளர் ராஜா, உதவி செயலாளர் சிதம்பரம், நூலகர் இசக்கி பாண்டியன் மற்றும் வக்கீல்கள் லட்சு மணன் ரமேஷ், மகேஷ், மகாராஜன், முத்துராஜ், கதிரவன், அனந்த கிருஷ்ணன், எட்வின் துரை ஆகியோர் பங்கேற்றனர்.

    • உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.
    • அடிப்படை அத்தியாவசிய தேவையான சுகாதார வளாகத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும்.

    உடுமலை:

    தமிழர்களின் அடையாளம் வீரவிளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கும் முன்பு செய்யப்படும் பயிற்சியே கபடியாகும்.உடலையும் மனதையும் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த விளையாட்டு தமிழ் மண்ணில் தமிழர்களால் உருவாக்கப்பட்டு ஆசிய கண்டத்தின் தெற்கு பகுதியில் பிரபலமாக உள்ளது.

    கபடி,சடுகுடு,பலிஞ்சடுகுடு என்று அழைக்கப்படும் கபடி நமது மாநிலத்தின் மாநில விளையாட்டாக உள்ளது. வரலாற்றுப் பெருமைமிக்க கபடியை பள்ளி கல்லூரி படிக்கும் மாணவ மாணவியர்கள் பயின்று போட்டிகளிலும் பங்கேற்று நமது கலாச்சாரம் பாரம்பரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆண்கள் பிரிவில் 55 அணிகளும் பெண்கள் பிரிவில் 22 அணிகளும் கலந்து கொண்டன.மழையின் அச்சுறுத்தல் இருந்ததால் கூடாரம் அமைக்கப்பட்டு செயற்கை தளத்தில் போட்டிகள் நடைபெற்றது.

    முதல் தளத்தில் பெண்களும் 2- ம் தளத்தில் ஆண்களும் போட்டியில் ஈடுபட்டனர்.விருவிருப்பு உற்சாகம் பரபரப்புடன் நடந்து முடிந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் பரிசாக 10 ஆயிரத்து 202 ம்,2-ம் பரிசாக 6ஆயிரத்து 202ம்,3 மற்றும் 4-ம் பரிசாக 3ஆயிரத்து 202 ம் இரு பிரிவினருக்கும் வழங்கப்பட்டது.

    கால் இறுதி ஆட்டத்தில் தோல்வியுற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு சிறப்பு பரிசாக ஆயிரம் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது.ஆனால் நேதாஜி மைதானத்தில் சுகாதார வளாக வசதி இல்லாததால் போட்டிக்கு வந்திருந்த வீரர் வீராங்கணைகள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.இதனால் அவர்கள் மனம் மற்றும் உடல்ரீதியாக சோர்வு அடைந்ததால் ஆட்டத்தில் முழு ஈடுபாடு காட்ட முடியாத சூழல் நிலவியது.

    இந்த மைதானத்தில் சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.ஆனால் நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது. அடிப்படை அத்தியாவசிய தேவையான சுகாதார வளாகத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும்.இதனால் வீரர் வீராங்கனைகள் போட்டியில் உடல்ரீதியாக முழு பலத்தோடு ஈடுபடுவதற்கு ஏதுவாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    • கபடி போட்டியில் அரசு பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர்
    • மாவட்ட அளவில் நடந்தது

    கரூர்:

    கரூர் மாவட்ட அளவிலான பெண்கள் கபடி போட்டி கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டிகளை கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி மன்ற தலைவி சேதுமணி மகாலிங்கம் அவர்கள் தொடங்கி வைத்தார்.கிருஷ்ணராயபுரம் வார்டு உறுப்பினர்கள் ராதிகா கதிரேசன், சசிகுமார்,‌ இளங்கோ, சிவகாமி,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மதியழகன் ஆகியோர் போட்டிகளில் பங்கேற்ற மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற 14 வயது உட்பட்ட மாணவிகளுக்கான போட்டியில் முதலிடம் கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியும், இரண்டாம் இடம் எ. உடையாபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியும் , மூன்றாம் இடம் என். புதூர் அரசு உயர்நிலைப்பள்ளியும் பெற்றது.

    17 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான போட்டியில் முதலிடம் வாங்கல் எஸ்டி மேரிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியும் , இரண்டாம் இடம் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் , மூன்றாம் இடம் காக்காவடி பி.ஏ.வித்யாபவன் பள்ளியும் பெற்றன.

    19 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான போட்டியில் முதலிடம் பஞ்சப்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியும் , இரண்டாம் இடம் கீழவெளியூர் அரசு மேல்நிலைப்பள்ளியும் , மூன்றாம் இடம் வெள்ளியணை பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும்வெ ற்றி பெற்றுள்ளன.

    வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு கிருஷ்ணாபுரம் பேரூராட்சி மன்ற தலைவி சேதுமதி மகாலிங்கம் பரிசுகள் வழங்கி பாராட்டி னார். போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் செந்தில்வேலன் மற்றும் தியாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • மாநில அளவிலான கபடிபோட்டி நடந்தது
    • மாநில அளவிலான கபடிபோட்டி நடந்தது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கலிபுல்லா நகரில் இளைஞர்களால் நடத்தப் பட்ட மாநில அளவிலான கபடிபோட்டியில் தமிழக த்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அணியினர் பங்கேற்றனர். ஒவ்வொரு போட்டியிலும் கபடி வீரர்கள் ஆக்ரோசத்துடன் சீறிப்பாய்ந்து விளையாடினர். வீரர்களின் ஆக்ரோஷத்தை நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர். மிகவும் ஆக்ரோஷமாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் பரிசை கல்லணையை சேர்ந்த அணியினரும், இரண்டாவது பரிசை ஆலங் குடி அணியினரும், மூன்றாவது பரிசை சிவகங்கை அணியினரும், நான்காவது பரிசை புதுக்கோட்டை மாவட்ட அணியினரும் தட்டிச் சென்றனர். போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு ரொக்கப்பரிசும், சுழற் கோப்பைகளும் வழங்கப்பட்டன.

    • கபடி போட்டியில் அரசு பள்ளிகள் முதலிடம் பிடித்தது.
    • மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் குடியரசு தின விழாவையொட்டி நடந்த பெரம்பலூர் குறுவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் மழையின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த கபடி, கோ-கோ, கால்பந்து ஆகிய குழு போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. இதில் 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டியில் பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டியில் அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும் பிடித்தது. 14, 19 ஆகிய வயதுகளுக்குட்பட்ட மாணவர்களுக்கான கோ-கோ போட்டியில் எறையூர் அரசு நிதியுதவி பெறும் நேரு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது. 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில் பெரம்பலூர் மரகத மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடமும் பிடித்தன.

    • முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 307-வது பிறந்த நாளை முன்னிட்டு குலசேகரன்பட்டினத்தில் நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மின்னொளி கபடி போட்டி 2 நாட்கள் நடந்தது.
    • போட்டியில் நாணல்காடு அணி முதல் பரிசை பெற்றது

    உடன்குடி:

    முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 307-வது பிறந்த நாளை முன்னிட்டு குலசேகரன்பட்டினத்தில் நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மின்னொளி கபடி போட்டி 2 நாட்கள் நடந்தது.

    போட்டியில் நாணல்காடு அணி முதல் பரிசை பெற்றது. 2 -வது பரிசை குலசேகரன்பட்டினம் நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் பெற்றது, 3-வது பரிசை அகரம் அணி பெற்றது.

    4-வது பரிசு திருச்செந்தூர் அருண்பாண்டி அணியினருக்கு கிடைத்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன், ஊராட்சி துணைத்தலைவர் கணேசன் , வள்ளி குமார், வழக்கறிஞர் முத்துக்குமார், அப்துல் ஹமீது, தொழிலதிபர் முத்துக்குமார், வழக்கறிஞர் ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினர்.

    • ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஏற்பாட்டில் அப்புவிளையில் கபடி போட்டி நடக்கிறது.
    • இதில் குஜராத் அணி 32 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்றது.

    திசையன்விளை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 69-வது பிறந்தநாளையொட்டி நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஏற்பாட்டில் திசையன்விளையை அடுத்த அப்புவிளை வி. எஸ்.ஆர் விளையாட்டு மைதானத்தில் அகில இந்திய அளவிலான ஆண்கள், பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது.

    இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 80 அணிகள் பங்கேற்க உள்ளனர் நேற்று இரவு ஆண்கள் பிரிவில் நடந்த விளையாட்டு போட்டியில் கூடங்குளம் அணியும், குஜராத் அணியும் விளையாடியது.

    இதில் குஜராத் அணி 32 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்றது. கூடங்குளம் அணி 29 புள்ளிகள் பெற்றது.பெண்கள் அணியில் குஜராத் அணியும், மதுரை அமெரிக்கன் கல்லூரி அணியும் விளையாடியது.

    இதில் குஜராத் அணி 27 புள்ளிகள் பெற்று வெற்றிபெற்றது. அமெரிக்க கல்லூரி அணி 26 புள்ளிகள் பெற்றது. நேற்று மாலையில் வீரர்கள்- வீராங்கனைகளின் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.

    மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். திசையன்விளை காமராஜர் சிலை முன்பு இருந்து புறப்பட்ட ஊர்வலம் முக்கிய வீதி வழியாக சென்று விளையாட்டு மைதானத்தை அடைந்தது.

    குமாரபுரம் பஞ்சாயத்து தலைவர் அனிதா பிரின்ஸ், அப்புவிளை பஞ்சாயத்து முன்னாள் தலைவர் வி.எஸ்.ஆர்.சுரேஷ், இடையன்குடி பஞ்சாயத்து தலைவர் ஜேகர், மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, நவ்வலடி சரவணகுமார், அரிமா சங்க முன்னாள் கவர்னர் சுயம்புராஜன் திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கமலா நேரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விளையாட்டு போட்டிகளை அப்துல்வகாப் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், நெல்லை மேயர் சரவணன், ராதாபுரம் யூனியன் தலைவர் சவுமியா ஜெகதீஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டிகள் நாளை 14-ந் தேதி ஞாயிற்றுகிழமை வரை நடைபெறுகிறது.தொடர்ந்து பரிசளிப்பு விழா நடக்கிறது.

    • காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டி தமிழாக்குறிச்சியில் நடந்தது.
    • முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் வழங்கினார்.

    நெல்லை:

    பெருந்தலைவர் காமராஜர் 120-வது பிறந்த நாளை முன்னிட்டு 3-ம் ஆண்டு மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டி திடியூர் ஊராட்சி மன்றம் தமிழாகுறிச்சி கிராமத்தில் நடைபெற்றது.

    நாங்குநேரி முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    இதில் மின்னொளி கபடி போட்டியின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜெயராஜ், தலைவர் பால்துரை, பொருளாளர் பிலிப், செயலாளர் சத்யராஜ் மற்றும் பாளை ஒன்றிய தகவல் தொழில்நுட்பு பொருளாளர் மாயா ரகுராம், முத்தூர் நைனார், தருவை செல்லத்துரை மற்றும் மருதகுளம் முதுநிலை ஆசிரியர் ஸ்டீபன் செல்லையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கேலோ இந்தியா தேசிய கபடிப்போட்டி கடந்த மாதம் அரியானா மாநிலத்தில் நடந்தது.
    • தமிழக பெண்கள் அணி கபடி போட்டியில் கலந்து கொண்டு 3 வது இடம் பெற்று வெண்கல பதகத்தை வென்றனர்.

    திருப்பூர்

    மத்திய அரசால் நடத்தப்படும் கேலோ இந்தியா தேசிய கபடிப்போட்டி கடந்த மாதம் அரியானா மாநிலத்தில் நடந்தது. இதில் தமிழக பெண்கள் அணி கலந்து கொண்டு 3-வது இடம் பெற்று வெண்கல ப்பதக்கத்தை வென்றது. இந்த போட்டியில் தமிழக மகளிர் அணியில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2 கபடி வீராங்கனைகள் பங்கு பெற்று விளையாடினர். வெண்கலப்பதக்கம் வென்ற திருப்பூர் கபடி வீராங்கனைகளுக்கு பாராட்டும், பரிசளிப்பு விழாவும் மாவட்ட கபடி கழகத்தில் நடந்தது.

    விழாவுக்கு மாவட்ட கபடி கழக செயலரும், மாநில கபடி கழக பொருளாளருமான ஜெயசித்ரா ஏ.சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட கபடி கழக துணைத்தலைவரும், மாநகர மன்ற உறுப்பினருமான செந்தூர் முத்துகிருஷ்ணன், மாவட்ட கபடி கழக பொருளாளர் கன்னிமார்ஸ் ஆறுச்சாமி, செய்தி தொடர்பாளர் சிவபாலன், புரவலர்கள் மினுபேஷன் கே.எம்.வேலுச்சாமி, மகாலட்சுமி ரத்தினசாமி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் பிரிவு, விளையாட்டு அலுவலர் எம்.ராஜகோபால் கலந்து கொண்டு திருப்பூர் வீராங்கனைகள் ஏ.வி.பி.கல்லூரியில் படிக்கும் யாழினி, உடுமலையில் படிக்கும் கஜிதாபீபி ஆகியோருக்கு பாராட்டும், பரிசும் வழங்கினார். ஆண்கள் பிரிவில் சீனியர் தேசிய போட்டி அரியானாவில் நடந்தது.

    இதில் தமிழக அணிக்கு திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராமகிருஷ்ணமூர்த்தி, கன் னீஸ்வரன் ஆகியோர் தேர்வு பெற்று சேலத்தில் நடைபெறுகிற பயிற்சி முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விழாவில் விளையாட்டு கழக தடகள பயிற்சியாளர் திவ்விய நாகேஸ்வரி, மாவட்ட கபடி கழக துணை செயலாளர் சின்னு, அன்னை செல்வ ராஜ், நடுவர் குழு ஒருங்கிணைப்பாளர் ஏ.சி.சேகர், தண்டபாணி, பாண்டியன், செந்தில், தர்மராஜ், டெக்னிக்கல் மெம்பர் ஆர்.ரங்கசாமி, ராஜன், வாசு ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக அனைவரையும் மாவட்ட கபடி கழக நடுவர் குழு சேர்மனும், சர்வதேச நடுவருமான ஆர்.முத்துசாமி வரவேற்றார்.

    முடிவில் இணை செயலாளர் பி.எஸ்.என்.எல். வாலீசன் நன்றி கூறினார்.

    பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது அடுத்த படத்திற்காக கபடி வீராங்கனையாக மாற இருக்கிறார். #KanganaRanaut #Kangana
    தமிழில் தனுஷ் தயாரிப்பில் அமலா பால் நடித்த அம்மா கணக்கு திரைப்படத்தை இயக்கியவர் அஸ்வினி ஐயர் திவாரி. இவர் அடுத்து பெண்கள் கபடியை மையமாக வைத்து படம் இயக்குகிறார். இதில் கங்கனா ஹீரோயினாக நடிக்கிறார். 

    இந்தப் படத்தில் நடிப்பதற்காக கபடி நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ள இருக்கிறார் கங்கனா. கபடி விளையாடி பயிற்சி பெறவும் இருக்கிறார். ஆகஸ்ட் மாதம் தொடங்கி டிசம்பர் வரை இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கவிருக்கின்றது. 

    இந்தியில் விளையாட்டை மையமாக வைத்து அதிகமான படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுவருகின்றன. அந்த வரிசையில் கபடி விளையாட்டை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. 



    கங்கனா நடிப்பில் அடுத்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் திரைப்படம் இயக்குனர் கிரிஷ் இயக்கியுள்ள மணிகார்னிகா: தி குயின் ஆப் ஜான்சி. இப்படம் ராணி லட்சுமிபாயின் வரலாறை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படமாகும்.
    ×