

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கலிபுல்லா நகரில் இளைஞர்களால் நடத்தப் பட்ட மாநில அளவிலான கபடிபோட்டியில் தமிழக த்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அணியினர் பங்கேற்றனர். ஒவ்வொரு போட்டியிலும் கபடி வீரர்கள் ஆக்ரோசத்துடன் சீறிப்பாய்ந்து விளையாடினர். வீரர்களின் ஆக்ரோஷத்தை நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர். மிகவும் ஆக்ரோஷமாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் பரிசை கல்லணையை சேர்ந்த அணியினரும், இரண்டாவது பரிசை ஆலங் குடி அணியினரும், மூன்றாவது பரிசை சிவகங்கை அணியினரும், நான்காவது பரிசை புதுக்கோட்டை மாவட்ட அணியினரும் தட்டிச் சென்றனர். போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு ரொக்கப்பரிசும், சுழற் கோப்பைகளும் வழங்கப்பட்டன.