என் மலர்
உள்ளூர் செய்திகள்

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் பரிசு வழங்கிய போது எடுத்தபடம்.
மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
- காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டி தமிழாக்குறிச்சியில் நடந்தது.
- முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் வழங்கினார்.
நெல்லை:
பெருந்தலைவர் காமராஜர் 120-வது பிறந்த நாளை முன்னிட்டு 3-ம் ஆண்டு மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டி திடியூர் ஊராட்சி மன்றம் தமிழாகுறிச்சி கிராமத்தில் நடைபெற்றது.
நாங்குநேரி முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இதில் மின்னொளி கபடி போட்டியின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜெயராஜ், தலைவர் பால்துரை, பொருளாளர் பிலிப், செயலாளர் சத்யராஜ் மற்றும் பாளை ஒன்றிய தகவல் தொழில்நுட்பு பொருளாளர் மாயா ரகுராம், முத்தூர் நைனார், தருவை செல்லத்துரை மற்றும் மருதகுளம் முதுநிலை ஆசிரியர் ஸ்டீபன் செல்லையா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story






