என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சென்னையில் நாளையுடன் முடிவடைகிறது புரோ கபடி லீக் போட்டி
    X

    சென்னையில் நாளையுடன் முடிவடைகிறது "புரோ கபடி லீக்" போட்டி

    • சென்னையில் 24 ஆட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.
    • தமிழ் தலைவாஸ் அணி நேரு ஸ்டேடியத்தில் 4 போட்டியில் விளையாடி இரண்டில் வென்றது.

    12-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த ஆகஸ்ட் 29-ந்தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. அதை தொடர்ந்து 2-வது கட்ட போட்டிகள் ஜெய்ப்பூரில் நடைபெற்றது.

    சென்னையில் 3-வது கட்ட புரோ கபடி 'லீக்' போட்டிகள் கடந்த மாதம் 29-ந்தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடங்கியது. நாளையுடன் சென்னையில் போட்டிகள் முடிவடைகிறது. சென்னையில் 24 ஆட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. நேற்றுடன் 20 போட்டிகள் முடிவடைந்தன.

    இன்று 2 ஆட்டங்களும் (பெங்கால்-டெல்லி, குஜராத்-உ.பி.) நாளை 2 போட்டிகளும் (குஜராத்-டெல்லி, பெங்கால்-மும்பை) நடைபெறுகிறது.

    சென்னையை தலைமையிடமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி நேரு ஸ்டேடியத்தில் 4 போட்டியில் விளையாடி இரண்டில் வென்றது. இரண்டில் தோற்றது. ஒட்டு மொத்தத்தில் 6 வெற்றி, 7 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. இன்னும் 5 ஆட்டங்கள் எஞ்சியுள்ளது. இந்த 5 போட்டிகளையும் டெல்லியில் விளையாடுகிறது.

    நேற்றுடன் 72 ஆட்டங்கள் முடிந்துள்ளது. டெல்லி அணி 11 வெற்றி, 1 தோல்வி யுடன் 22 புள்ளிகள் பெற்று முதல் இடத்திலும். புனே 10 வெற்றி, 3 தோல்வியுடன் 20 புள்ளிகள் பெற்று 2-வது இடத்திலும் உள்ளன.

    தெலுங்கு டைட்டன்ஸ் (16 புள்ளிகள்), மும்பை பெங்களூரு (தலா 12 புள்ளி)ஆகியவை முறையே 3 முதல் 5-வது இடங்களில் உள்ளன. ஜெய்ப்பூர், அரியானா (12) 7-வது மற்றும் 8-வது இடத்தில் உள்ளன. உ.பி. (8), குஜராத், பெங்கால், பாட்னா (தலா 6 புள்ளிகள்) ஆகிய அணிகள் முறையே 9 முதல் 12-வது இடங்களில் உள்ளன.

    முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    Next Story
    ×