என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pro Kabaddi"

    • இரவு 8 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர்-2 ‌ ஆட்டத்தில் பாட்னா-பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
    • நேற்றைய போட்டியில் ஜெய்ப்பூர் அணி வெளியேற்றப்பட்டது.

    புதுடெல்லி:

    டெல்லியில் நடைபெற்று வரும் புரோ கபடி லீக் போட்டியில் இன்று இரவு 9 மணிக்கு குவாலிபயர் 1 ( இறுதிப் போட்டிக்கான முதல் தகுதி சுற்று ) ஆட்டம் நடக்கிறது.

    இதில் புள்ளிகள் பட்டிய லில் முதல் இடத்தை பிடித்த புனே- 2-ம் இடத்தை பிடித்த டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோற்கும் அணி குவாலிபர் 2 (இறுதிப் போட்டிக்கான 2-வது தகுதி சுற்று) ஆட்டத்தில் விளையாடும்.

    இரு அணிகளும் லீக் சுற்றில் 13 போட்டிகளில் வெற்றி பெற்றன. 5 ஆட்டங்களில் தோற்றன. இரு அணிகள் மோதிய 2 போட்டியும் டைபிரேக்கருக்கு சென்றன. தலா ஒரு ஆட் டத்தில் வெற்றி பெற்றன. இதனால் இரு அணிகளும் மோதும் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

    முன்னதாக இரவு 8 மணிக்கு நடைபெறும் எலி மினேட்டர்-2 ஆட்டத்தில் பாட்னா-பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி எலிமினேட்டர்-3 போட்டிக்கு முன்னேறும். தோற்கும் அணி வெளியேற்றப்படும்.

    பாட்னா அணி தொடர்ச்சியாக 7 ஆட்டத்தில் வெற்றி பெற்று முன்னேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நட்சத்திர வீரர் அயனின் அபாரமான ஆட்டமே காரணம். அவர் இந்த தொடரில் இதுவரை 275 ரைடு புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் உள்ளார்.

    இரு அணிகள் மோதிய முதல் ஆட்டத்தில் பெங்களூரு 38-30 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. 2-வது ஆட்டத்தில் பாட்னா டைபிரேக்கரில் வெற்றி பெற்றது.

    நேற்றைய போட்டியில் ஜெய்ப்பூர் அணி வெளியேற்றப்பட்டது.

    • பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 1 புள்ளி வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தது.
    • தமிழ் தலைவாஸ் அணிக்கு இது 12-வது தோல்வியாகும்.

    புதுடெல்லி:

    12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

    இந்நிலையில், நேற்று இரவு 8.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பெங்கால் வாரியர்ஸ் அணி 44-43 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் அணிக்கு இது 12-வது தோல்வியாகும்.

    இந்நிலையில் தனியாளாக அர்ஜூன் ஒன்றும் செய்ய முடியாது என தங்களது கடைசிப் போட்டியிலும் தோல்வியை சந்தித்த விரக்தியில் தமிழ் தலைவாஸ் கேப்டன் அர்ஜூன் தேஷ்வால் வேதனை தெரிவித்துள்ளர்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எனக்கு உறுதுணையாக முழு அணியும், நிர்வாகமும் இருந்தால் மட்டுமே ஒரு அணியாக வெல்ல முடியும். தனியாளாக அர்ஜூன் ஒன்றும் செய்ய முடியாது.

    என தமிழ் தலைவாஸ் கேப்டன் அர்ஜூன் தேஷ்வால் கூறினார்.

    • 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
    • நேற்று நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி அடைந்தது.

    புதுடெல்லி:

    12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

    இந்நிலையில், நேற்று இரவு 8.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பெங்கால் வாரியர்ஸ் அணி 44-43 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் அணிக்கு இது 12-வது தோல்வியாகும்.

    மற்றொரு போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 50-32 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    • ஆட்டத்தை தமிழ் தலைவாஸ் அணி வெற்றியுடன் நிறைவு செய்யுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
    • தமிழ் தலைவாஸ் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 14 புள்ளிகளை தொடும்.

    புரோ கபடி 'லீக்' போட்டியின் 4-வது மற்றும் கடைசி கட்ட ஆட்டங்கள் டெல்லியில் நடைபெற்று வருகிறது.

    12 அணிகள் பங்கேற்று உள்ள இந்த போட்டியில் 'லீக்' முடிவில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளேஆப்' சுற்றுக்கு நுழையும்.

    புனே, டெல்லி ( தலா 26 புள்ளிகள்) முதல் 2 இடங்களை பிடித்து 'பிளே ஆப்' சுற்றுக்கு நுழைந்தன. அதை தொடர்ந்து தெலுங்கு டைட்டன்ஸ் (20 புள்ளி) , பெங்களூரு, மும்பை (தலா 18 ) பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. இதுவரை 5 அணிகள் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இன்னும் 3 அணிகள் தகுதி பெற வேண்டும்.

    இதற்கு கடும் போட்டி நிலவுகிறது. அரியானா , ஜெய்ப்பூர் அணிகள் தலா 16 புள்ளிகளுடன் உள்ளன. அந்த அணிகளுக்கு 2 ஆட்டம் எஞ்சி உள்ளன.

    குஜராத், தமிழ் தலைவாஸ், பாட்னா, உ.பி. தலா 12 புள்ளிகளுடன் உள்ளன. தமிழ் தலைவாசுக்கும், உ.பி.க்கும் ஒரு போட்டியே உள்ளன. குஜராத், பாட்னாவுக்கு 2 ஆட்டம் இருக்கிறது. பெங்கால் 10 புள்ளியுடன் உள்ளது. அந்த அணிக்கு 2 ஆட்டம் உள்ளது.

    சென்னை நகரை மையமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி தனது கடைசி 'லீக்' ஆட்டத்தில் பெங்கால் வாரியர்சை இன்று இரவு 7.30 மணிக்கு மீண்டும் சந்திக்கிறது.

    இந்த ஆட்டத்தை தமிழ் தலைவாஸ் அணி வெற்றியுடன் நிறைவு செய்யுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி கடந்த 4 ஆட்டத்தில் தோல்வியை தழுவி இருந்தது. தமிழ் தலைவாஸ் அணி கடந்த செப்டம்பர் 12-ந்தேதி ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் 46-36 என்ற புள்ளிக்கணக்கில் பெங்காலை வீழ்த்தி இருந்தது.

    தமிழ் தலைவாஸ் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 14 புள்ளிகளை தொடும். குஜராத், உ.பி. அணிகள் விளையாடும் ஆட்டத்தை பொறுத்து பிளேஆப் சுற்று வாய்ப்பு இருக்கிறது. மற்ற ஆட்டங்களில் மும்பை-ஜெய்ப்பூர் (இரவு 8.30 மணி), அரியானா-குஜராத் (இரவு 9.30 மணி) மோதுகின்றன.

    • புரோ கபடி ‘லீக்’கின் 4-வது மற்றும் கடைசி கட்ட ‘லீக்’ ஆட்டங்கள் டெல்லியில் நடைபெற்று வருகிறது.
    • டெல்லி, புனே அணிகள் மட்டுமே இதுவரை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளன.

    புதுடெல்லி:

    புரோ கபடி 'லீக்'கின் 4-வது மற்றும் கடைசி கட்ட 'லீக்' ஆட்டங்கள் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இன்றும் 3 ஆட்டங்கள் நடக்கிறது. பெங்களூரு புல்ஸ்-பாட்னா பைரேட்ஸ் (இரவு 7.30 மணி), தெலுங்கு டைட்டன்ஸ்-மும்பை (8.30 மணி), உ.பி. யோதாஸ்- அரியானா ஸ்டீலர்ஸ்-(9.30 மணி) அணிகள் மோதுகின்றன.

    டெல்லி, புனே அணிகள் மட்டுமே இதுவரை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளன. இன்னும் 6 அணி கள் தகுதி பெற வேண்டும்.

    • சென்னையில் 24 ஆட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.
    • தமிழ் தலைவாஸ் அணி நேரு ஸ்டேடியத்தில் 4 போட்டியில் விளையாடி இரண்டில் வென்றது.

    12-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த ஆகஸ்ட் 29-ந்தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. அதை தொடர்ந்து 2-வது கட்ட போட்டிகள் ஜெய்ப்பூரில் நடைபெற்றது.

    சென்னையில் 3-வது கட்ட புரோ கபடி 'லீக்' போட்டிகள் கடந்த மாதம் 29-ந்தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடங்கியது. நாளையுடன் சென்னையில் போட்டிகள் முடிவடைகிறது. சென்னையில் 24 ஆட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. நேற்றுடன் 20 போட்டிகள் முடிவடைந்தன.

    இன்று 2 ஆட்டங்களும் (பெங்கால்-டெல்லி, குஜராத்-உ.பி.) நாளை 2 போட்டிகளும் (குஜராத்-டெல்லி, பெங்கால்-மும்பை) நடைபெறுகிறது.

    சென்னையை தலைமையிடமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி நேரு ஸ்டேடியத்தில் 4 போட்டியில் விளையாடி இரண்டில் வென்றது. இரண்டில் தோற்றது. ஒட்டு மொத்தத்தில் 6 வெற்றி, 7 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. இன்னும் 5 ஆட்டங்கள் எஞ்சியுள்ளது. இந்த 5 போட்டிகளையும் டெல்லியில் விளையாடுகிறது.

    நேற்றுடன் 72 ஆட்டங்கள் முடிந்துள்ளது. டெல்லி அணி 11 வெற்றி, 1 தோல்வி யுடன் 22 புள்ளிகள் பெற்று முதல் இடத்திலும். புனே 10 வெற்றி, 3 தோல்வியுடன் 20 புள்ளிகள் பெற்று 2-வது இடத்திலும் உள்ளன.

    தெலுங்கு டைட்டன்ஸ் (16 புள்ளிகள்), மும்பை பெங்களூரு (தலா 12 புள்ளி)ஆகியவை முறையே 3 முதல் 5-வது இடங்களில் உள்ளன. ஜெய்ப்பூர், அரியானா (12) 7-வது மற்றும் 8-வது இடத்தில் உள்ளன. உ.பி. (8), குஜராத், பெங்கால், பாட்னா (தலா 6 புள்ளிகள்) ஆகிய அணிகள் முறையே 9 முதல் 12-வது இடங்களில் உள்ளன.

    முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    • தமிழ் தலைவாஸ் அணி தனது 13-வது ஆட்டத்தில் பாட்னா பைரேட்சை நேற்று எதிர் கொண்டது.
    • இதில் தமிழ் தலைவாஸ் அணி 56-37 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

    சென்னை:

    12 அணிகள் பங்கேற்று உள்ள 12-வது புரோ கபடி லீக்கின் 3-வது கட்ட போட்டிகள் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

    ஒவ்வொரு அணியும் 18 ஆட்டத்தில் விளையாட வேண்டும். 'லீக்' முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

    சென்னை நகரை மையமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி தனது 13-வது ஆட்டத்தில் பாட்னா பைரேட்சை நேற்று எதிர் கொண்டது. இதில் தமிழ் தலைவாஸ் அணி 56-37 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

    தமிழ் தலைவாசுக்கு கிடைத்த 6-வது வெற்றியாகும். இதன் மூலம் 12 புள்ளிகளுடன் 7-வது இடத்துக்கு முன்னேறியது. 7 போட்டியில் தோல்வியை தழுவியது.

    தமிழ் தலைவாஸ் அணியின் வெற்றிக்கு கேப்டன் அர்ஜூன் தேஷ்வால் முக்கிய பங்கு வகித்தார். அரியானாவுக்கு எதிராக கடந்த 3-ந்தேதி நடைபெற்ற ஆட்டத்தில் அவர் தமிழக ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அதேபோல நேற்றும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மீண்டும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

    அர்ஜூன் தேஷ்வால் 26 புள்ளிகளை எடுத்தார். இதன் மூலம் புரோ கபடி லீக் போட்டி வரலாற்றில் 71-வது முறையாக (127 ஆட்டம்) 'சூப்பர் 10' எடுத்து சாதனை படைத்து 3-வது இடத்தை பிடித்தார். அவர் பவன் ஷெராவத்தை முந்தினார். பவன் 70-வது தடவை (142) 'சூப்பர் 10' எடுத்தார். பர்தீப் நர்வால் 88 முறையும் (190 ஆட்டம்), மனீந்தர் சிங் 80 தடவையும் (164), சூப்பர் 10 புள்ளிகளை பெற்று முதல் 2 இடங்களில் உள்ளன.

    தமிழ் தலைவாஸ் அணியின் மற்ற வீரர்களில் நரேந்தர் 6 புள்ளியும், ஆசிஷ், நிதேஷ்குமார் தலா 5 புள்ளியும், ஹிமான்சு 3 புள்ளியும் எடுத்தனர்.

    தமிழ் தலைவாஸ் சென்னையில் வெற்றியுடன் ஆட்டத்தை நிறைவு செய்தது. நேரு உள்விளையாட்டு அரங்கில் அந்த அணி 4 ஆட்டங்களில் விளையாடி இரண்டில் (அரியானா, பாட்னா) வெற்றி பெற்றது. இரண்டு போட்டியில் (மும்பை, பெங்களூரு) தோற்றது.

    தமிழ் தலைவாஸ் தனது 14-வது ஆட்டத்தில் புனேயை வருகிற 11-ந்தேி எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் டெல்லியில் நடக்கிறது. நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் டெல்லி அணி மீண்டும் அரியானாவை வீழ்த்தி 11-வது வெற்றியை பெற்றது.

    இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் தெலுங்கு டைட்டன்சை-அரியானா அணிகளும், 9 மணிக்கு நடக்கும் 2-வது ஆட்டத்தில் புனே-மும்பை அணிகளும் மோதுகின்றன.

    • ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு அடுத்த சுற்று போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது.
    • அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந் தேதி வரை இங்கு மொத்தம் 24 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.

    சென்னை:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கியது. முதல் கட்ட ஆட்டங்கள் விசாகப்பட்டினத்திலும், 2-வது கட்ட ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் நடந்தன. இந்த நிலையில் ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு அடுத்த சுற்று போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது. அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந் தேதி வரை இங்கு மொத்தம் 24 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.

    இதையொட்டி புரோ கபடி லீக் தலைவர் அனுபம் கோஸ்வாமி நேற்று நிருபர்களிடம் கூறுகையில் '2 ஆண்டுக்கு பிறகு புரோ கபடி லீக் மீண்டும் சென்னையில் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு எப்போதுமே இந்தியாவின் மிக சிறந்த கபடி மையங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த சீசன் மிக சிறப்பாக நடந்து வருகிறது. கடந்த சீசனை விட அதிக 'சூப்பர் 10' ரைடுகளை பார்க்க முடிகிறது. மேலும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அணிக்கும், 8-வது இடம் வகிக்கும் அணிக்கும் இடையே வெறும் 6 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. இந்த விறுவிறுப்பான கபடி தொடரை சென்னை ரசிகர்களுடன் கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறோம்' என்றார்.

    இந்த சீசனில் மொத்தம் 12 தமிழ்நாட்டு வீரர்கள் வெவ்வேறு அணிகளில் விளையாடுகிறார்கள். அவர்களில் ஒருவரான பெங்களூரு புல்ஸ் அணிக்காக ஆடும் தீபக் சங்கர் கூறுகையில் 'என் சொந்த மாநிலத்தில் விளையாடுவது அற்புதமான உணர்வாகும். நான் பெங்களூரு புல்ஸ் அணியில் இருந்தாலும், தமிழக ரசிகர்களின் ஆதரவும், அன்பும் என்னை மேலும் ஊக்குவிக்கும். இது எனது அறிமுக தொடராகும். ஸ்டேடியம் முதல் சமூக ஊடகம் வரை கிடைக்கும் அன்பு அபாரமானது. என் குடும்பம், நண்பர்கள் அனைவரும் நேரில் வரும்போது அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் விளையாட விரும்புகிறேன்' என்றார்.

    இதுவரை 52 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. புள்ளிபட்டியலில் முன்னாள் சாம்பியன்களான தபாங் டெல்லி 7 வெற்றி, ஒரு தோல்வி என 14 புள்ளிகளுடன் முதலிடத்திலும், புனேரி பால்டன் 6 வெற்றி, 3 தோல்வி என 12 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன. தமிழ் தலைவாஸ் அணி 4 வெற்றி, 5 தோல்வி என 8 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது.

    இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் உ.பி. யோத்தாஸ்- குஜராத் ஜெயன்ட்ஸ் (இரவு 8 மணி), தபாங் டெல்லி- அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன. உள்ளூரில் தமிழ் தலைவாஸ் அணிக்குரிய முதல் ஆட்டம் 1-ந்தேதி (யு மும்பைவுடன் மோதல்) நடக்கிறது.

    போட்டிக்கான டிக்கெட்டுகளை District by Zomato என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து பெற்றுகொள்ளலாம். ரூ.150, ரூ.250, ரூ.1,000, ரூ.1,250, 2,000 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்படுகிறது. ஆட்டங்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • 12-வது புரோ கபடி லீக் போட்டி தொடர் நடந்து வருகிறது.
    • 12 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் 2-ம் கட்ட ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது.

    12-வது புரோ கபடி லீக் போட்டி தொடர் நடந்து வருகிறது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் 2-ம் கட்ட ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது.

    இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே டைட்டன்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதி முடிவில் டைட்டன்ஸ் அணி 22-10 என வலுவான நிலையில் இருந்தது. இரண்டாவது பாதியிலும் டைட்டன்ஸ் அணியின் ஆதிக்கமே தொடர்ந்தது.

    இறுதியில்  43-29 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

    முன்னதாக நடப்பு தொடரில் தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தொடங்கிய தமிழ் தலைவாஸ் அந்த அணியை 38-35 என்கிற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது.

    இந்நிலையில் தற்போதைய வெற்றியின் மூலம் தெலுங்கு டைட்டன்ஸ் அணி சீசனின் முதல் தோல்விக்கு பழிவாங்கியது.

    • தமிழ் தலைவாஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதுகிறது.
    • தமிழ் தலைவாஸ் அணி 5 ஆட்டத்தில் 3 வெற்றி, 2 தோல்வி பெற்று 6 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது.

    12-வது புரோ கபடி லீக் போட்டி தொடர் நடந்து வருகிறது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் 2-ம் கட்ட ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் புனேரி பால்டன்-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன. புனேரி பால்டன் 8 ஆட்டத்தில் 6 வெற்றி, 2 தோல்வி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. அரியானா அணி 6 ஆட்டத்தில் 4 வெற்றி, 2 தோல்வி பெற்றுள்ளது.

    இரவு 9 மணிக்கு நடக்கும் போட்டியில் தமிழ் தலைவாஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தமிழ் தலைவாஸ் அணி 5 ஆட்டத்தில் 3 வெற்றி, 2 தோல்வி பெற்று 6 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி 8 ஆட்டத்தில் 3 வெற்றி, 5 தோல்வியை சந்தித்துள்ளது.

    இந்நிலையில் தமிழ் தலைவாஸ் அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் அருள்நந்தா பாபு இணைந்துள்ளார். இவர் தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜெய்ப்பூர் அணிக்கு 43 ரெய்டுகளில் 20 ரெய்டு வெற்றிகரமாக அமைந்தது. இதில் 28 புள்ளிகள் கிடைத்தன.
    • பெங்கால் அணிக்கு 46 ரெய்டுகளில் 23 ரெய்டுகள் வெற்றிகரமாக அமைந்தன. இதில் 29 புள்ளிகள் கிடைத்தன.

    புரோ கபடி லீக் 2025 சீசனில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- பெங்கால் வாரியார்ஸ் அணிகள் மோதின. இதில் ஜெய்ப்பூர் அணி 45-41 என 4 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முதல் பாதி நேர ஆடடத்தில் ஜெய்ப்பூர் 24-18 என முன்னிலை பெற்றது. 2ஆவது பாதி நேர ஆட்டத்தில் 21-23 என சறுக்கினாலும் வெற்றியை உறுதி செய்தது.

    ஜெய்ப்பூர் அணிக்கு 43 ரெய்டுகளில் 20 ரெய்டு வெற்றிகரமாக அமைந்தது. இதில் 28 புள்ளிகள் கிடைத்தன.

    பெங்கால் அணிக்கு 46 ரெய்டுகளில் 23 ரெய்டுகள் வெற்றிகரமாக அமைந்தன. இதில் 29 புள்ளிகள் கிடைத்தன.

    ஜெய்பூர் அணிக்கு டேக்கிள் மூலம் 13 புள்ளிகள் கிடைத்தன. இதில் 3 சூப்பர் டேக்கிள் மூலம் கிடைத்தன. பெங்கால் அணிக்கு 8 புள்ளிகள் கிடைத்தன.

    • கடைசி நேரத்தில் குஜராத் 36-38 என்ற கணக்கில் பின்தங்கிய இருந்தது.
    • அதன்பின் 37-40 எனத் தோல்வியடைந்தது.

    புரோ கபடி லீக் 2025 சீசனின் 33ஆவது போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் ஹரியானா ஸ்டீலர்ஸ்- குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. முதல் பாதி நேர ஆட்டத்தில் ஹரியானா அணி 25-20 என 5 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலைப் பெற்றது.

    2ஆவது பாதி நேர ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் அபாரமாக விளையாடினர். இதனால் போட்டி பரபரப்பாக சென்றது. இரு அணிகளுக்கும் இடையில் 2 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் இருந்தது. கடைசி நேரத்தில் ஹரியானா ரெய்டர்கள் ஷவம் பட்டாரே, ஸ்ரீதர் கடம், வினய் ஆகியோர் தலா ஒரு புள்ளி எடுக்க 40-37 என ஹரியானா வெற்றி பெற்றது. 2ஆவது பாதி நேர ஆட்டத்தில் குஜராத் 17-15 என முன்னிலைப் பெற்றும் பயனில்லை.

    ×