என் மலர்tooltip icon

    விளையாட்டு

    புரோ கபடி லீக் இறுதிப்போட்டியில் நுழைவது யார்? புனே-டெல்லி அணிகள் இன்று மோதல்
    X

    புரோ கபடி லீக் இறுதிப்போட்டியில் நுழைவது யார்? புனே-டெல்லி அணிகள் இன்று மோதல்

    • இரவு 8 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர்-2 ‌ ஆட்டத்தில் பாட்னா-பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
    • நேற்றைய போட்டியில் ஜெய்ப்பூர் அணி வெளியேற்றப்பட்டது.

    புதுடெல்லி:

    டெல்லியில் நடைபெற்று வரும் புரோ கபடி லீக் போட்டியில் இன்று இரவு 9 மணிக்கு குவாலிபயர் 1 ( இறுதிப் போட்டிக்கான முதல் தகுதி சுற்று ) ஆட்டம் நடக்கிறது.

    இதில் புள்ளிகள் பட்டிய லில் முதல் இடத்தை பிடித்த புனே- 2-ம் இடத்தை பிடித்த டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோற்கும் அணி குவாலிபர் 2 (இறுதிப் போட்டிக்கான 2-வது தகுதி சுற்று) ஆட்டத்தில் விளையாடும்.

    இரு அணிகளும் லீக் சுற்றில் 13 போட்டிகளில் வெற்றி பெற்றன. 5 ஆட்டங்களில் தோற்றன. இரு அணிகள் மோதிய 2 போட்டியும் டைபிரேக்கருக்கு சென்றன. தலா ஒரு ஆட் டத்தில் வெற்றி பெற்றன. இதனால் இரு அணிகளும் மோதும் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

    முன்னதாக இரவு 8 மணிக்கு நடைபெறும் எலி மினேட்டர்-2 ஆட்டத்தில் பாட்னா-பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி எலிமினேட்டர்-3 போட்டிக்கு முன்னேறும். தோற்கும் அணி வெளியேற்றப்படும்.

    பாட்னா அணி தொடர்ச்சியாக 7 ஆட்டத்தில் வெற்றி பெற்று முன்னேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நட்சத்திர வீரர் அயனின் அபாரமான ஆட்டமே காரணம். அவர் இந்த தொடரில் இதுவரை 275 ரைடு புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் உள்ளார்.

    இரு அணிகள் மோதிய முதல் ஆட்டத்தில் பெங்களூரு 38-30 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. 2-வது ஆட்டத்தில் பாட்னா டைபிரேக்கரில் வெற்றி பெற்றது.

    நேற்றைய போட்டியில் ஜெய்ப்பூர் அணி வெளியேற்றப்பட்டது.

    Next Story
    ×