என் மலர்
விளையாட்டு

தனியாளாக ஒன்றும் செய்ய முடியாது: தமிழ் தலைவாஸ் கேப்டன் அர்ஜூன் வேதனை
- பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 1 புள்ளி வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தது.
- தமிழ் தலைவாஸ் அணிக்கு இது 12-வது தோல்வியாகும்.
புதுடெல்லி:
12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு 8.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பெங்கால் வாரியர்ஸ் அணி 44-43 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் அணிக்கு இது 12-வது தோல்வியாகும்.
இந்நிலையில் தனியாளாக அர்ஜூன் ஒன்றும் செய்ய முடியாது என தங்களது கடைசிப் போட்டியிலும் தோல்வியை சந்தித்த விரக்தியில் தமிழ் தலைவாஸ் கேப்டன் அர்ஜூன் தேஷ்வால் வேதனை தெரிவித்துள்ளர்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
எனக்கு உறுதுணையாக முழு அணியும், நிர்வாகமும் இருந்தால் மட்டுமே ஒரு அணியாக வெல்ல முடியும். தனியாளாக அர்ஜூன் ஒன்றும் செய்ய முடியாது.
என தமிழ் தலைவாஸ் கேப்டன் அர்ஜூன் தேஷ்வால் கூறினார்.






