என் மலர்
நீங்கள் தேடியது "Kulasekaranpattinam"
- குலசேகரன்பட்டினத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட மாநாடு நடந்தது.
- மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
உடன்குடி:
உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட மாநாடு மற்றும் பேரணி நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்து தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் நேரு, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரசல், ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில், கிசான் சங்க மாவட்ட செயலாளர் புவிராஜ், மாவட்ட செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரவேற்பு குழு தலைவர் ஆறுமுகம் வரவேற்றார்.மாநில துணைத் தலைவர் பூங்கோதை தொடக்க உரையாற்றினார்.
விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பிரச்சினைகள், ஊதியம் குறித்து கலந்துரையாடல் நடந்தது. பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது விவசாய தொழிலாளர்களுக்கு தனித்துறையை உருவாக்க வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தை நகர பகுதி மக்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும். 60 வயதை கடந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக விவசாய தொழிலாளர்களின் பேரணி நடந்தது.மாநில துணைசெயலாளர் மனைவிளை பாசி நிறைவு உரையாற்றினார்.வரவேற்புக்குழு செயலாளர் கந்தசாமி நன்றி கூறினார்.
- குலசேகரன்பட்டினத்தில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்ற கட்டிடத்தை நாளை காலை 10 மணிக்கு திறந்து வைக்கிறார்.
- படுக்கப்பத்தில் புதியதாக அமைய உள்ள துணை மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
உடன்குடி:
தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உடன்குடி ஒன்றியம் குலசேகரன்பட்டி னத்தில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்ற கட்டிடத்தை நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து காலை 11 மணிக்கு சாத்தான்குளம் ஒன்றியம் படுக்கப்பத்தில் புதியதாக அமைய உள்ள துணை மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பின்பு உடன்குடி ஒன்றியம் குதிரை மொழி ஊராட்சி சோலை குடியிருப்பில் காலை 11.30 மணிக்கு புதிய மேல்நிலை நீர் தேக்ககுடிநீர் தொட்டியை திறந்து வைக்கிறார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மற்றும் மாவட்ட வட்டார அரசு அதிகாரிகள் தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்கின்றனர்.
உடன்குடி ஒன்றிய பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் உடன்குடி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும் உடன்குடி யூனியன் சேர்மனுமான பாலசிங், துணை சேர்மன் மீரா சீராசுதீன், உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.
- கடந்த ஜூன் மாதம் அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது
- தசரா திருவிழாவை முன்னிட்டு முன் மண்டப கட்டிடப் பணிகள் ஒத்திவைக்கப்பட்டது
உடன்குடி:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தென் மாவட்டத்தில் மிகவும் புகழ் பெற்ற கோவிலாகும்.
இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் தசரா பெருந் திருவிழா தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் திருவிழாவாகும். பக்தர்கள் வசதிக்காக முன் மண்டபம் கட்ட தண்டுபத்து நா. சண்முகப் பெருமாள் நாடார் இங்கு– பிச்சமணி அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடியில் பணிகள் தொடக்க விழா கடந்த ஜூன் மாதம் இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது .
தசரா திருவிழாவை முன்னிட்டு முன் மண்டப கட்டிடப் பணிகள் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இந்த பணிகளுக்கான தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
இதை முன்னிட்டு கோவில் வளாகத்தில் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் கட்டிட பணிகள் தொடங்கியது. இதில் கட்டிட பணி நண் கொடையாளர் தண்டுபத்து ராமசாமிநாடார், கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் உட்பட பக்தர்கள், கோவில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- மாடுகள் குளத்தில் இறங்கும்போது சகதியில் சிக்கி கொள்வதால் வெளியே வர முடியாமல் அவை இறந்து போவது வாடிக்கையாகிவிட்டது
- தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மாடுகளை உயிருடன் மீட்டனர்.
உடன்குடி:
உடன்குடி அனல்மின் நிலைய பின்புறம் உப்பு நீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இது எல்லப்பநாயக்கன் குளத்தின் உபரிநீர் தேங்கும் தாழ்வான நீர்ப்பிடிப்பு பகுதி என்பதால் அதன் தரையை உயர்த்த சுற்றுவட்டார பகுதிகளில் மணல் அள்ளி நிரப்பினர். தற்போது ஆபத்தான பகுதியாகிவிட்டது
காடுகளில் மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள் தண்ணீர் குடிக்க குளத்தில் இறங்கும்போது கால்கள் சகதியில் சிக்கி கொள்வதால் வெளியே வர முடியாமல் அவை இறந்து போவது வாடிக்கையாகிவிட்டது. மேலும் இதுஆட்கள் அதிகம் நடமாடாத காட்டுப்பகுதி என்பதால் அதிகம் வெளியே தெரிவதில்லை.
இந்த நிலையில்ஒரு பள்ளத்தில் மாடுகள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்த பக்கத்து தோட்டக்காரர் சிவலூர்ஜெயராஜ் உடனடியாக திருச்செந்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு இதுபற்றி தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து மாடுகளை உயிருடன் மீட்டனர். இதில் ஒரு மாடு பலியாகி விட்டது.
- குலசேகரன்பட்டினம் ஹசனியா பவுன்சர்ஸ் மற்றும் ஊர்பொதுமக்கள் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான கிரிக்கெட்போட்டி 3 நாட்கள் நடந்தது.
- விழாவில் 3-வது வார்டு உறுப்பினர் ராமலிங்கம் துரை கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
உடன்குடி:
குலசேகரன்பட்டினம் ஹசனியா பவுன்சர்ஸ் மற்றும் ஊர்பொதுமக்கள் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான கிரிக்கெட்போட்டி 3 நாட்கள் நடந்தது. இதில் 30-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டது.
இதில் முதலிடம் பிடித்த தேரியூர் அணிக்கு ரூ.15ஆயிரத்தை குலசை ஊராட்சி தலைவர் சொர்ணபிரியாதுரையும், 2-வது இடம் பிடித்த குலசை ஹசனியா பவுன்சர் அணிக்கு ரூ.10ஆயிரத்தை தாண்டவன்காடு எஸ்.ஜி டிரேடர்ஸ், 3-வது இடம் பிடித்த ஆர்.எஸ்.புரம் அணிக்கு ரூ.6ஆயிரத்தை ஜெயா மல்டி ஸ்பெஷாலிட்டிகிளினிக், 4-வது இடம் பிடித்த குலசை ஹசனியா அணியிணருக்கு ரூ.4ஆயிரத்தை கிராமநிர்வாக அலுவலர் வைரமுத்து ஆகியோர் வழங்கினர். தொடர்நாயகன் விருதினை தேரியூர் சதீஷ்க்கு ஹாஜி வழங்கினார்.
சிறந்த பேட்ஸ்மேனாக தேரியூர் ரவி, சிறந்த பவுலராக முகமது யூசுப், கவுதம், சிறந்த பீல்டராக சபீர், சிறந்த அணியாக விண்ணவரம் அணியினரும் பரிசுகளை பெற்றனர். கிரிக்கெட் போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவிற்கு ஹாஜா, 11-வது வார்டு கவுன்சிலர் முகமது அபுல்ஹசன் ஆகியோர் தலைமை தாங்கினார். விழாவில் 3-வது வார்டு உறுப்பினர் ராமலிங்கம் துரை கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
- முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழா கடந்த 6-ந்தேதி நிறைவு பெற்றது.
- குப்பை குளங்களை அப்புறப்படுத்துவதில் ஊராட்சிமன்றம் சுறுசுறுப்பு இல்லாமல் இருப்பதாக பக்தர்கள் குமுறுகின்றனர்
உடன்குடி:
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஒன்றியத்திற்குட்பட்ட குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழா கடந்த 6-ந்தேதி நிறைவு பெற்றது. 11 நாள் நடந்த விழாவில் பல லட்சம் பக்தர்கள் கோவில் வளாகம், கடற்கரை மற்றும் குலசேகரன்பட்டினம் ஊராட்சி மன்ற பகுதி முழுவதும் முகாமிட்டு தசரா திருவிழா கோலங்காலமாக நடந்தது.
அப்போது ஏராளமான குப்பை குளங்கள் குவிந்தன. குப்பை குளங்களை அப்புறப்படுத்துவதில் குலசேகரன்பட்டினம் ஊராட்சிமன்றம் சுறுசுறுப்பு இல்லாமல் இருப்பதாக பக்தர்கள் குமுறுகின்றனர்.
கோயில் முன்பு கடற்கரை வளாகம் ஆகிய பகுதியில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது இவைகளை உடனடியாக அப்புறப்படுத்த கூடுதல் பணியாளர்கள் நியமி த்து பணி செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஏரல் நட்டாத்தியைச் சேர்ந்தவர் கதிரேசன் சென்னை வானகரத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார்
- குலசேகரன்பட்டினத்தில் நடந்த தசரா திருவிழாவிற்கு மனைவி அதிர்ஷ்டலட்சுமி, மகள் ராஜேஷ்வரி ஆகியோருடன் கோவிலுக்கு வந்துள்ளனர்.
உடன்குடி:
ஏரல் நட்டாத்தியைச் சேர்ந்தவர் கதிரேசன் (வயது 51) சென்னை வானகரத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 5-ந்தேதி குலசேகரன்பட்டினத்தில் நடந்த தசரா திருவிழாவிற்கு மனைவி அதிர்ஷ்டலட்சுமி, மகள் ராஜேஷ்வரி ஆகியோருடன் கோவிலுக்கு வந்துள்ளனர். ராஜேஸ்வரி (21) எம்.ஏ. பட்டதாரி.
இந்நிலையில் தசரா திருவிழாவிற்கு வந்தவர்கள் குலசேகரன்பட்டினத்தில் உள்ள தங்கும் விடுதியில் குடும்பத்துடன் தங்கியுள்ளனர். திடீரென அதிகாலையில் கண் விழித்துப் பார்க்கும் போது மகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து கதிரேசன் அளித்த புகாரின் பேரில் குலசே கரன்பட்டினம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
- முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
- கோவில் செயல் அலுவலர் ,ஆலய ஊழியர்கள் அமைச்சரை வரவேற்றனர்.
உடன்குடி:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. நாளை மறுநாள் (5-ந் தேதி) நள்ளிரவு 12 மணிக்கு கடற்கரையில் மகிஷாசூர சம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.
இதையொட்டி திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், மனைவி ஜெயகாந்தியுடன் நேற்று இரவு குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு வந்தார்.அங்கு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஆலய ஊழியர்கள் அமைச்சரை வரவேற்றனர்.
அமைச்சருடன் உடன்குடி யூனியன் சேர்மனும் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் பாலசிங், கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவர் மால்ராஜேஷ், குலசேகரன்பட்டினம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கணேசன், உடன்குடி நகர முன்னாள் செயலாளர் ஜான் பாஸ்கர், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரவி ராஜா உட்பட தி.மு.க.வினர் பலர் உடன் வந்தனர்.
- முத்தாரம்மன் கமலவாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
- பக்தர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
உடன்குடி:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்தசரா பெருந்திருவிழாவில் 8-ம் திருநாளான இன்று இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் கமலவாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். இன்று முன்னதாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்குபல்வேறு சிறப்பு அபிசேகங்களும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சமய சொற்பொழிவு, இன்னிசை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
கோவிலில் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் சங்கர், செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் செய்து உள்ளனர்.மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பக்தர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. விரதம் இருந்து வந்த பக்தர்கள் தங்களுக்கு பிடித்தமான வேடங்களை அணிந்து ஊர் ஊராகச் சென்று அம்மன் பெயரில் காணிக்கைவசூல் செய்து வருகின்றனர். ஊர் பெயரை கொண்டு தசரா குழு அமைத்து நையாண்டி மேளம், தாரை தப்பட்டை, கரகம் காவடி, கோலாட்டம் மயிலாட்டம் என பல்வேறு கிராம தய கலைஞர்களுடன் இணைந்து ஊர் ஊராக சென்று கலை நிகழ்ச்சி நடத்தி அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகின்றனர்.
- குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் பவனி வந்துபக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
- அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிசேகங்களும் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சமய சொற்பொழிவு, இன்னிசை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
உடன்குடி:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் 7-ம் திருநாளான இன்று இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் பவனி வந்துபக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். நேற்றும் இன்றும் தசரா குழுவினர் நையாண்டி மேளம் மற்றும் பல்வேறு மேலத்துடன் வந்து காப்பு கட்டி செல்கின்றனர்.
இதனால் கோவில் வளாகம் மற்றும் கடற்கரை வளாகம் கூட்டமாக நிரம்பி வழிகிறது. முன்னதாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிசேகங்களும் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சமய சொற்பொழிவு, இன்னிசை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. விரதம் இருந்து வந்த பக்தர்கள் தங்களுக்கு பிடித்தமான வேடங்களை அணிந்து ஊர் ஊராகச் சென்று அம்மன் பெயரில் காணிக்கைவசூல் செய்து வருகின்றனர்.
- 6-ம் திருநாளான இன்று இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்மவாகனத்தில் மகிஷாசூர மர்த்தினி திருக்கோலத்தில் பவனி வந்துபக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
- பரதநாட்டிய குழுவினருக்கு கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
உடன்குடி:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருகோவில் தசரா பெருந்திருவிழாவில் 6-ம் திருநாளான இன்று இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்மவாகனத்தில் மகிஷாசூர மர்த்தினி திருக்கோலத்தில் பவனி வந்துபக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
நேற்று இரவு பரதநாட்டியம் நடைபெற்றது. இந்த பரதநாட்டிய குழுவினருக்கு கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். அருகில் பாரத திருமுருகன் திருச்சபை நிறுவனரும் சமய சொற்பொழிவாளருமான ஏ.வி.பி.மோகனசுந்தரம் உடன் இருந்தார்.
இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்குபல்வேறு சிறப்பு அபிசேகங்களும் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சமய சொற்பொழிவு, இன்னிசை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
கோவிலில் திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி உதவிய ஆணையர் சங்கர் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பக்தர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. விரதம் இருந்து வந்த பக்தர்கள் தங்களுக்கு பிடித்தமான வேடங்களை அணிந்து ஊர் ஊராகச் சென்று அம்மன் பெயரில் காணிக்கைவசூல் செய்து வருகின்றனர். தற்போது குலசேகரன்பட்டினம். உடன்குடி, பகுதியில் தசரா திருவிழாவில் எழுச்சி அதிகமாகவே காணப்படுகிறது.