search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dussehra Thiruvizha"

    • முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா அடுத்த மாதம் 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • தற்காலிக ஓய்வு கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா அடுத்த மாதம் 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 24-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு மகிஷா சூரசம்கார விழா நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    பக்தர்களுக்கு ஓய்வுகூடம்

    இந்த தசரா திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு ஓய்வுகூடம் அமைப்பதற்காக குலசேகரபட்டினம் சிதம்பரேஸ்வரர் கோவில் அருகே ரூ. 58 லட்சம் மதிப்பில் பக்தர்கள் தங்குவதற்கான தற்காலிக ஓய்வு மற்றும் தற்காலிக கழிப்பறை, குடிநீர் வசதி ஆகிய அடிப்படை வசதிகள் செய்வது குறித்து தூத்துக்குடி மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அன்புமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

    தசரா திருவிழாவில் இந்த தற்காலிக ஓய்வு கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    தூய்மைப்படுத்தும் பணி

    இந்த ஆய்வின்போது கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், கோவில் சூப்பிரண்டு வெங்கடேஸ்வரி, ஆய்வாளர் பகவதி மற்றும் கோவில் கணக்கர் டிமிட்ரோ மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர். மேலும் கடற்கரை வளாகப் பகுதிகளில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் தூய்மைப்படுத்தும் பணியினையும் நேரில் ஆய்வு செய்தார். தசரா திருவிழாவிற்கு முன்பு அடிப்படை பணிகள் அனைத்தையும் முடித்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரி உத்தரவிட்டார்.

    ×