என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mutharamman temple"

    • கடந்த ஜூன் மாதம் அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது
    • தசரா திருவிழாவை முன்னிட்டு முன் மண்டப கட்டிடப் பணிகள் ஒத்திவைக்கப்பட்டது

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தென் மாவட்டத்தில் மிகவும் புகழ் பெற்ற கோவிலாகும்.

    இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் தசரா பெருந் திருவிழா தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் திருவிழாவாகும். பக்தர்கள் வசதிக்காக முன் மண்டபம் கட்ட தண்டுபத்து நா. சண்முகப் பெருமாள் நாடார் இங்கு– பிச்சமணி அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடியில் பணிகள் தொடக்க விழா கடந்த ஜூன் மாதம் இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது .

    தசரா திருவிழாவை முன்னிட்டு முன் மண்டப கட்டிடப் பணிகள் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இந்த பணிகளுக்கான தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

    இதை முன்னிட்டு கோவில் வளாகத்தில் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் கட்டிட பணிகள் தொடங்கியது. இதில் கட்டிட பணி நண் கொடையாளர் தண்டுபத்து ராமசாமிநாடார், கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் உட்பட பக்தர்கள், கோவில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நள்ளிரவு 3மணிக்கு அக்னி குண்டத்தில் பக்தர்கள் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.
    • இதற்கான ஏற்பாடுகளை கொடை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட பரமன்குறிச்சி வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் சித்திரை கொடை விழா வருடம் தோறும் சிறப்பாக கொண்டா டப்படும்.

    வருசாபிஷேகம்

    இந்த ஆண்டு திருவிழா கடந்த 30-ந் தேதி காலை 8 மணிக்கு வருசாபி ஷேகத்துடன் தொட ங்கியது. தொடர்ந்து பகல் 11 மணிக்கு புஷ்பா ஞ்சலி,நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜையும், தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு உடன்குடி வட்டாரப்பகுதியில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி, வறட்சி நீங்கி பசுமை வேண்டி பெண்கள் பாடல்கள் பாடி சிறப்பு வழிபாடு செய்யும் திரு விளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் நடந்தது. கடந்த 1-ந் தேதி காலை 8 மணிக்கு மேளதாளம் வாண வேடிக்கையுடன் பால்குடம் எடுத்துபவனி வருதல், நண்பகல் 12 மணிக்கு அலங்கார பூஜை, மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு7 மணிக்கு பரதநாட்டியம், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீப ஆரா தனையுடன் உச்சினிமாகாளி அம்மன் சிங்க வாகனத்தில் பவனி வருதல் நடந்தது.

    நேற்று காலை 9 மணி மற்றும் இரவு 7 மணிக்கு வில்லிசை, நண்பகல் 1 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையுடன் அம்மன் வீதி உலா வருதல், இரவு 8 மணிக்கு சுமங்கலி பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு சந்தன மாரியம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் வழங்குதல் நடந்தது.

    இன்று நண்பகல் 1 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையுடன் அம்மன் மஞ்சள் நீராடுதல், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் முத்தாரம்மன் சப்பரத்தில் பவனிவருதல். நள்ளிரவு 3மணிக்கு அக்னி குண்டத்தில் பக்தர்கள் பூக்குழி இறங்குதல், நாளை (4-ந் தேதி) இரவு 8 மணிக்கு கேரள புகழ் கலக்கல் கண்ணன் குழுவினரின் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி , 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சங்கடக்கார சுவாமி கோவிலில் காலை 8 மணிக்கு வருசாபிஷேகம், பகல் 12 மணிக்கு அலங்காரம், தீபாராதனை, இரவு12 மணிக்கு சிறப்பு படையல் பூஜை, மறுநாள் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கொடை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    • முத்துகிருஷ்ணாபுரம் முத்தாரம்மன் கோவிலில் சித்திரை கொடை விழா யாக பூஜையுடன் தொடங்கி 8 நாட்கள் நடைபெற்றது.
    • இரவில் சாம பூஜையை தொடர்ந்து அம்மனின் சிம்ம வாகனத்தில் சப்பர பவனி நடைபெற்றது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி முத்துகிருஷ்ணாபுரம் முத்தாரம்மன் கோவிலில் சித்திரை கொடை விழா யாக பூஜையுடன் தொடங்கி 8 நாட்கள் நடைபெற்றது. விழா நாட்களில் திருவிளக்கு பூஜை, வில்லிசை, கும்மி அடித்தல், வான வேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நிறைவு நாள் விழா அன்று காலையில் ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பில் அமைந்துள்ள செந்தில் விநாயகர் ஆலயத்தில் இருந்து அலங்கார யானை முன் செல்ல பால்குட பவனி நடந்தது. இதனை சாகுபுரம் டி.சி.டபுள்யூ நிறுவன மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து அம்மனுக்கு கும்ப பூஜையும், பின்னர் அன்னதானமும் நடைபெற்றன. மதியம் அம்மனுக்கு அபிஷேகம், மஞ்சள் காப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தன. தொடர்ந்து சுவாமிகள் மஞ்சள் நீராடி தாமிரபரணி ஆற்றில் தீர்த்தம் எடுத்து வருதல், பெண்கள் முளைப்பாரி எடுத்து வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

    இரவில் சாம பூஜையை தொடர்ந்து அம்மனின் சிம்ம வாகனத்தில் சப்பர பவனி நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    • முத்தாரம்மன் கோவில் திருவிழா நேற்று காலை 7 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பல்வேறு யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
    • இன்று மாலை 6 மணிக்கு 2008 பெண்கள் கலந்துகொள்ளும் சிறப்பு மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு வருடம் தோறும் சித்திரை மாத வசந்த விழா சிறப்பாக கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டு திருவிழா நேற்று காலை 7 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பல்வேறு யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. காலை 10 மணிக்கு குபேர வேள்வி செல்வ வழிபாடு, காலை 11 மணிக்கு 1008 கலச பூஜை, சிறப்பு அலங்கார தீபாராதனை, மாலை 6 மணிக்கு 2008 பெண்கள் கலந்து கொண்ட சிறப்பு சுமங்கலி பூஜையில் பாடல்கள் பாடி மந்திரங்கள் ஓதி வழிபாடு நடந்தது.

    பின்பு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் சிவசுப்பி ரமணியன், திருச்செந்தூர் ராமகிருஷ்ணன், ஜெய மோகன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இன்று காலை 6 மணிக்கு 108 சங்கு பூஜை, 504 பால்குட ஊர்வலம் குலசேகரன்பட்டினம் கடற்கரையில் இருந்து கொண்டு வரப்படுகிறது. தொடர்ந்து நண்பகல் 1 மணி அளவில் 1008 சங்காபிஷேகம் ,அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 504 பால்குட அபிஷேகம், சிறப்பு அலங்கார தீப ஆராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    இன்று மாலை 6 மணிக்கு 2008 பெண்கள் கலந்து கொள்ளும் சிறப்பு மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு சுவாமிக்கு மலர் அலங்கார பூஜையும், சிறப்பு அலங்கார தீப ஆராதனையுடன் பிரசாதம் வழங்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை முத்தாரம்மன் தசரா குழு மற்றும் தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை ஆகியவற்றின் நிர்வாகிகள் செய்து உள்ளனர்.

    • தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது.
    • நேற்று மதியம் 39-வட்ட அ.தி.மு.க. செயலாளரும், பகுதி இளைஞரணி செயலாளருமான திருச்சிற்றம்பலம், துணைச்செயலாளர் டைகர் சிவா ஏற்பாட்டில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு விசேஷ பூஜைகள், அபிஷேக, தீபாராதனை நடைபெற்று வருகிறது.

    பால்குட ஊர்வலம்

    விழாவையொட்டி நேற்று காலை கும்பபூஜை, பால்குடம் எடுத்தல், அம்மனுக்கு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, படையல் கஞ்சி வாருத்தல் நிகழ்ச்சி, மாலை மாவிளக்கு பூஜை, பொங்கல் இடுதல் நடைபெற்றது. இரவு 12 மணிக்கு படைப்பு தீபாராதனை நடைபெற்றது.

    முன்னதாக நேற்று மதியம் 39-வட்ட அ.தி.மு.க. செயலாளரும், பகுதி இளைஞரணி செயலா ளருமான திருச்சிற்றம்பலம், துணைச் செயலாளர் டைகர் சிவா ஏற்பாட்டில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமை ச்சரும், தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான சண்முக நாதன் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் தொழில திபர் தெய்வநாயகம், அமைப்பு செயலாளர் சின்னத்துரை, கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், அவைத்தலைவர் திருப்பா ற்கடல், சிறுபான்மை அணி செயலாளர் பிரபாகர், மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், தொழிற்சங்க செயலாளர் டாக் ராஜா, பகுதி செயலா ளர்கள் முருகன், ஜெய்கணேஷ், சேவியர், வக்கீல்கள் மந்திரமூர்த்தி, சரவண பெருமாள், முனிய சாமி, வட்ட செயலாளர்கள் முருகன் மற்றும் நிர்வாகிகள் ரமேஷ் கிருஷ்ணன், சாம்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.வுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
    • ராகுல்காந்தி பிரதமராக வேண்டி அவரது பெயரில் அர்ச்சனை நடைபெற்றது.

    நெல்லை:

    இட்டமொழி முத்தா ரம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    ராகுல்காந்தி பெயரில் அர்ச்சனை

    முன்னதாக அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப் பட்டது. தொடர்ந்து வருகிற 2024-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரதமராக வேண்டி அவரது பெயரில் அர்ச்சனை நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கோவில் அன்னதானத்தில் கலந்து கொண்ட ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., மக்களோடு மக்களாக அமர்ந்து சாப்பிட்டார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணை தலைவர் செல்ல பாண்டி, மாவட்ட பொதுச் செயலாளர் நம்பிதுரை, முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ்போர்டு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தர், நாங்குநேரி மத்திய வட்டார தலைவர் ராமஜெயம், பாளை மேற்கு வட்டார தலைவர் கணேசன், பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், மூலைக்கரைப்பட்டி நகர தலைவர் முத்து கிருஷ்ணன், நெல்லை பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் முத்துராஜா, முன்னாள் வட்டார தலைவர் ஞான் ராஜ், காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் சித்திரை வேல், வெள்ளைச்சாமி, வடிவேல், சிதம்பரம், தாமோதரன், ராஜன், லிங்க பாண்டி, சுந்தரபாண்டி, கோபால், வெள்ளைதுரை, சுயம்பு, வெற்றிவேல், கணேசன், சுடலை, சந்திரசேகர், முனியாண்டி, சின்னதுரை, இட்டமொழி காங்கிரஸ் கமிட்டி நிர்வா கிகள், கோவில் கமிட்டி நிர்வாகி கள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி தலைமை தாங்கி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

    உடன்குடி:

    தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆன்மிக புத்தக விற்பனை நிலையம் தொடக்க விழா கோவில் வளாகத்தில் நடந்தது. தூத்துக்குடி இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி தலைமை தாங்கி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். உதவி ஆணையர் கவிதா முன்னிலை வகித்தார்.

    இதில், ஆன்மிக புத்தக விற்பனை நிலைய உபயதார் ஜெயராமன், பத்மாவதி அம்மாள் மற்றும் சாகுபுரம் சீனிவாசன், உடன்குடி சண்முகசுந்தரம், திருச்செந்தூர் காஞ்சி பள்ளி முதல்வர் செல்வ வைஷ்ணவி, கோவில் உள்துறை செயல் அலுவலர் வெங்கடேஸ்வரி, கோவில் ஆய்வாளர் பகவதி, குலசை சிதம்பரநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சுதந்திர தினத்தையொட்டி சமபந்தி அன்னதானம் நடைபெற்றது.
    • இதில் சென்னை ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சுந்தரலிங்கம் மீனாட்சி கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சுதந்திர தினத்தையொட்டி சமபந்தி அன்னதானம் நடைபெற்றது. மதியம் சிறப்பு பூஜையுடன் தொடங்கிய சமபந்தி அன்னதான நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன் தலைமை தாங்கினார். உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் இளங்கோ, உடன்குடி பேரூராட்சி துணை தலைவரும், பேரூர் செயலாருமான மால் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சென்னை ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சுந்தரலிங்கம் மீனாட்சி கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தண்டுபத்து சிவானந்தன், குலசேகரன்பட்டினம் பஞ்சாயத்து துணைத் தலைவர் கணேசன், கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன், கோவில் ஆய்வாளர் பகவதி, கணக்கர் டிமிட்ரோ நுகர்வோர் பேரவை மாநில தலைவர் மோகனசுந்தரம் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோவிலுக்கு உபயமாக வழங்கப்பட்ட வேட்டி சேலைகள் ஏழை, எளியோருக்கு வழங்கப்பட்டது.

    • முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் திருவிழாவாகும்.
    • இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற அக்டோபர் மாதம் 15 -ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    உடன்குடி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அதிகாரிகள் ஆகியோருக்கு குலசேகரன்பட்டினம் தசரா பக்தர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் கையொப்பமிட்டு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    முத்தாரம்மன் கோவில்

    திருச்செந்தூர் வட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் மிகவும் புகழ்பெற்ற கோவில்கள் ஒன்று ஆகும். இங்கு ஆண்டுதோறும் நடை பெறும் தசரா பெரும் திருவிழா தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் திருவிழாவாகும். இந்தியாவில் மைசூருக்கு அடுத்து 2-வது இடம் வகிக்கும் இக்கோவிலில், இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற அக்டோபர் மாதம் 15 -ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    24-ந்தேதி மகிஷாசுர சம்ஹாரம் நடக்கிறது. பல லட்சம் பக்தர்கள் குடும்பத்துடன் கூடி பல்வேறு வேடமனிந்து தங்களது வேண்டுதல்களை செலுத்தும் தசரா விழாவாகும். ஆண்டுக்கு ஆண்டு பக்தர்கள் கூட்டம் கூடுவது ஆண்டுக்கு ஆண்டு கோடிக்கணக்கான உண்டியல் வருமானம் வருவது இக்கோவிலின் சிறப்பு ஆகும்.

    அறங்காவலர்கள் நியமனம்

    இக்கோவிலுக்கு பல ஆண்டுகளாக அறங்காவ லர்கள் நியமிக்கப்பட்ட வில்லை. இதனால் தசரா பக்தர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை பணிகள் மற்றும் பல்வேறு திருப்பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே உடனடியாக அறங்காவ லர்களை நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நேற்று காலை 11 மணிக்கு மேள வாத்தியங்களுடன் சாமி ஊர்வலத்துடன் பால்குடம் எடுத்து வருதல் நடைபெற்றது.
    • இரவில் வில்லிசை நிகழ்ச்சி, நாதஸ்வரம், கரகாட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    மாவடிபண்ணை முத்தாரம்மன் கோவிலில் சிவன், சக்தி மற்றும் முத்தாரம்மன் ஆகி யோர் தனித்தனி சன்னதி களில் அமர்ந்து அருள்பா லித்து வருகிறார்கள்.

    ஆண்டுதோறும் ஆவணி மாதம் கடைசி செவ்வாய்க் கிழமை கொடை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஆவணி கொடை விழாவை முன்னிட்டு கடந்த 5-ந்தேதி அம்மனுக்கு சிறப்பு அபி ஷேகம் தீபாராதனையை தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்து கால் நாட்டு விழா நடைபெற்றது.

    அன்று முதல் பக்தர்கள் விரதம் கடைபிடித்து வரு கின்றனர். திங்கட்கிழமை இரவு குடி அழைப்பு மற்றும் அம்மனுக்கு தீபாராதனை பூஜைகள் நடைபெற்றது.

    மேலும் நேற்று காலை 11 மணிக்கு மேள வாத்தியங்க ளுடன் சாமி ஊர்வலத்துடன் பால்குடம் எடுத்து வருதல், மதியம் 1 மணிக்கு சிறப்பு பூஜை அலங்காரத்துடன் மதியக் கொடை, இரவு 8 மணிக்கு முளைப்பாரி எடுத்து வருதல், நேர்த்தி கடன் ஆகியவை நடை பெற்றது. இரவில் வில்லிசை நிகழ்ச்சி, நாதஸ்வரம், கரகாட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    காலை, மதியம் மற்றும் இரவு அன்னதானம் நடை பெற்றது. இரவு 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, தீபாரா தனையும் நடைபெற்றது.

    அதைதொடர்ந்து முத்தாரம்மன் பொன் சப்பரத்தில் எழுந்தருளி வாணவேடிக்கையுடன் வீதி உலா சென்று பக்தர்கள், பொதுமக்கள் தேங்காய் பழம் உடைத்து அம்மனை வழிபட்டனர்.

    இன்று மதியம் பொங்க லிடுதல் மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. ஏரா ளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    • முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா அடுத்த மாதம் 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • தற்காலிக ஓய்வு கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா அடுத்த மாதம் 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 24-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு மகிஷா சூரசம்கார விழா நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    பக்தர்களுக்கு ஓய்வுகூடம்

    இந்த தசரா திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு ஓய்வுகூடம் அமைப்பதற்காக குலசேகரபட்டினம் சிதம்பரேஸ்வரர் கோவில் அருகே ரூ. 58 லட்சம் மதிப்பில் பக்தர்கள் தங்குவதற்கான தற்காலிக ஓய்வு மற்றும் தற்காலிக கழிப்பறை, குடிநீர் வசதி ஆகிய அடிப்படை வசதிகள் செய்வது குறித்து தூத்துக்குடி மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அன்புமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

    தசரா திருவிழாவில் இந்த தற்காலிக ஓய்வு கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    தூய்மைப்படுத்தும் பணி

    இந்த ஆய்வின்போது கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், கோவில் சூப்பிரண்டு வெங்கடேஸ்வரி, ஆய்வாளர் பகவதி மற்றும் கோவில் கணக்கர் டிமிட்ரோ மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர். மேலும் கடற்கரை வளாகப் பகுதிகளில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் தூய்மைப்படுத்தும் பணியினையும் நேரில் ஆய்வு செய்தார். தசரா திருவிழாவிற்கு முன்பு அடிப்படை பணிகள் அனைத்தையும் முடித்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரி உத்தரவிட்டார்.

    • இடையர்காடு கிராமத்தில் முத்தாரம்மன் கோவில் கொடை விழா கடந்த 19-ந்தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது.
    • நேற்று இரவு சாமகொடையில் முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    ஏரல் அருகே உள்ள இடையர்காடு கிராமத்தில் முத்தாரம்மன் கோவில் கொடை விழா கடந்த 19-ந்தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை திரு விளக்கு பூஜையும், திங்கட் கிழமை சுமங்கலி பூஜையும், அதைத்தொடர்ந்து நவீன வில்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    நேற்று காலை தாமிரபரணி ஆற்றிலிருந்து பக்தர்கள் மேளதாளத்துடன் புனித நீர் தீர்த்தம் எடுத்து வந்தனர். கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம், யாக பூஜைகள் செய்யப்பட்டு புனிதநீர் அம்மன் மற்றும் கோவில் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு தீபாராதனை, வருஷாபிஷேக சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள், பொதுமக்களுக்கு காலை, மதியம், இரவு அன்னதானம் வழங்கப் பட்டது.

    இரவு பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து கும்மியடித்து அம்மனை வழிபட்டனர். அதைத் தொடர்ந்து வில்லிசை நிகழ்ச்சியும், கரகாட்டம், நையாண்டி மேளம், செண்டை மேளம் நிகழ்ச்சி யும் நடைபெற்றது.

    கொடைவிழா

    இரவு சாமகொடையில் முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்கா ரத்தில் தீபாரா தனை மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இன்று அதிகாலையில் உற்சவர் முத்தாரம்மன் சப்பரத்தில் எழுந்தருளி வானவேடிக்கை, கர காட்டம், மேளதாளத்துடன் வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சி யளித்து அருள்பாலித்தார்.

    பொதுமக்கள் தேங்காய் பழம் படைத்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் மதியம் 12 மணியளவில் மதிய கொடைவிழா நிறைவு பெற்றது. இன்று இரவு ஆடல்- பாடல் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவி ற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    ×