search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kulasekaranpatinam"

    • முத்தாரம்மன் கோவில் திருவிழா நேற்று காலை 7 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பல்வேறு யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
    • இன்று மாலை 6 மணிக்கு 2008 பெண்கள் கலந்துகொள்ளும் சிறப்பு மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு வருடம் தோறும் சித்திரை மாத வசந்த விழா சிறப்பாக கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டு திருவிழா நேற்று காலை 7 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பல்வேறு யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. காலை 10 மணிக்கு குபேர வேள்வி செல்வ வழிபாடு, காலை 11 மணிக்கு 1008 கலச பூஜை, சிறப்பு அலங்கார தீபாராதனை, மாலை 6 மணிக்கு 2008 பெண்கள் கலந்து கொண்ட சிறப்பு சுமங்கலி பூஜையில் பாடல்கள் பாடி மந்திரங்கள் ஓதி வழிபாடு நடந்தது.

    பின்பு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் சிவசுப்பி ரமணியன், திருச்செந்தூர் ராமகிருஷ்ணன், ஜெய மோகன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இன்று காலை 6 மணிக்கு 108 சங்கு பூஜை, 504 பால்குட ஊர்வலம் குலசேகரன்பட்டினம் கடற்கரையில் இருந்து கொண்டு வரப்படுகிறது. தொடர்ந்து நண்பகல் 1 மணி அளவில் 1008 சங்காபிஷேகம் ,அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 504 பால்குட அபிஷேகம், சிறப்பு அலங்கார தீப ஆராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    இன்று மாலை 6 மணிக்கு 2008 பெண்கள் கலந்து கொள்ளும் சிறப்பு மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு சுவாமிக்கு மலர் அலங்கார பூஜையும், சிறப்பு அலங்கார தீப ஆராதனையுடன் பிரசாதம் வழங்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை முத்தாரம்மன் தசரா குழு மற்றும் தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை ஆகியவற்றின் நிர்வாகிகள் செய்து உள்ளனர்.

    • உடன்குடி பகுதியில் உள்ள அனைத்து கிராம ரோடுகளும் விரைவில் மரமாத்து செய்யப்படும்.
    • மறைந்த அப்துல் கலாம் படத்திற்கு யூனியன் சேர்மன் பாலசிங் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    உடன்குடி:

    உடன்குடி யூனியன் கவுன்சிலர்களின் சாதாரண கூட்டம் கூட்ட அரங்கத்தில் நடந்தது.யூனியன் தலைவர்பாலசிங் தலைமை தாங்கினார். துணை சேர்மன் மீராசிராசுதீன், ஆணையாளர்கள் ஜான்சிராணி, சசிகுமார், மேலாளாளர் வாவாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் முருங்கை மகாராஜா, செல்வின், லோ போரின், முருகேஸ்வரி ராஜதுரை, ஜெயகமலா, தங்க லெட்சுமி, மெல்சி ஷாலினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பொது கழிப்பிடம்

    கூட்டத்தில் வட்டார ஊராட்சி வளர்ச்சி திட்டம் 2022- 23-ம் ஆண்டு 15-வது நிதிக்குழு மானியம் திட்டம் மூலம் செட்டியா பத்து ஊராட்சி அருணாச்சலபுரம் - செட்டியாபத்து பெருமாள் கோவில் வரை தார் ரோடு, குதிரை மொழி ஊராட்சி சுந்தராச்சியம்மன் கோவில் அருகேயும், பரமன்குறிச்சி ஊராட்சி வீரப்ப நாடார்குடியிருப்பு அம்மன் கோவில் அருகேயும், செம்மறிகுளம் ஊராட்சி செம்மறிகுளம் அம்மன் கோவில் அருகே என மூன்று இடங்களில் பொது கழிப்பிடம் கட்ட, லெட்சுமிபுரம் ஊராட் பூலோகபாண்டி விளையில் 60 ஆயிரம் சிலிட்டர் ஒஹச்டி அமைத்து பைப் லைன் விஸ்தரிப்பு செய்தல் என மொத்தம் ரூ.57 லட்சத்து 16 ஆயிரத்து 680 நிதியில் பணி தேர்வு செய்யப்பட்டது.

    குடிநீர் தொட்டி

    மேலும் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் ஒன்றிய பொது நிதியில் இருந்து குதிரை மொழி ஊராட்சி சேலை குடியிருப்பில் 30 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி ரூ.12 லட்சத்து 89 ஆயிரம், மெஞ்ஞானபுரம் ஊராட்சி அஸ்ரியா நகரில் 60 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட ரூ.15 லட்சத்து 21 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    யூனியனில் உள்ள பள்ளிகளின் பழுதான கட்டிடம் கட்ட, கழிப்பறை கட்டுதல் உட்பட 9 பணிகளுக்கு ரூ.3 லட்சத்து 81 ஆயிரம் ஒதுக்கீடு மற்றும் வரவு செலவு கணக்கு வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

    பின்னர் விவாதம் நடந்தது. அப்பேது, முருங்கை மகாராஜா (அ.தி.மு.க., கவுன்சிலர்) பேசுகையில்,

    உடன்குடி யூனியனில் கிராம பகுதிகளில் உள்ள பல ரோடுகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதை உடனடியாக மரமாத்து செய்ய வேண்டும் என்றார்.

    முருகேஸ்வரி ராஜா துரை (அ.தி.மு.க.,) பேசுகையில்,

    இந்தியாவில் தசரா திருவிழாவில் 2- வது இடம் வகிக்கும் குலசேகரன் பட்டினம் தசரா திருவிழாவில் கலந்து கொள்ள சுமார் 30 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவலினால் தசரா திரு விழாவில் பக்தர்கள் அனுமதியில்லை.

    இதனால் குலசை நகரின் உட்கட்டமைப்பு பணிகள் செய்யப்படவில்லை. குறிப்பாக தசரா பக்தர்கள் அதிகம் பயன்படுத்தும் முத்தாரம்மன் கோவில் கீழ தெரு முதல் கடற்கரைக்கு செல்லும் தார் ரோடு, கோவில் கீழ்புறம் தும்பு மில்லில் இருந்து கடற்கரை செல்லும் ரோடு, வடக்கூரில் இருந்து கடற்கரைக்கு செல்லும் தார் ரோடு ஆகிய மூன்று ரோடுகளும் பக்தர்கள் பயன்படுத்தும் மிக முக்கிய ரோடுகள்.

    தற்சமயம் இந்த ரோடுகள் முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் உள்கட்டமைப்பு பணியாக யாதவர் தெரு, கல்லா மொழி வடக்கு தெரு, தெற்கு தெருவில் சிமெண்ட் ரோடும், குலசை அண்ணா சிலை அம்மன் கோயில் அருகில் பேவர் பிளாக் அமைக்க வேண்டும் குறிப்பாக தசரா திருவிழாவிற்கு முன்பாக ரோடு, குடிநீர், பைப் லைன், கழிவறை வசதி, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை இன்று முதல் நிர்வாகம் தொடங்க வேண்டும் என பேசினார்.

    இதற்கு பதிலளித்து பாலசிங் பேசியதாவது:-

    உடன்குடி பகுதியில் உள்ள அனைத்து கிராம ரோடுகளும் விரைவில் மரமாத்து செய்யப்படும். இந்த ஆண்டு தசரா திருவிழாவில் அதிக அளவு பக்தர்கள் வருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. எனவே தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி தற்போது இருந்து விரிவான திட்டம் வகுத்து பணிகள் தொடங்கப்படவுள்ளது என பேசினார்.

    முன்னதாக மறைந்த அப்துல் கலாம் படத்திற்கு யூனியன் சேர்மன் பாலசிங் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    ×