search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Udankudi"

    • மெஞ்ஞானபுரத்தில் தி.மு.க. 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
    • தலைமைக்கழக பேச்சாளர் பரணி சேகர், மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகப்பெருமாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரசின் சாதனைகள் குறித்து பேசினார்.

    உடன்குடி:

    உடன்குடி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மெஞ்ஞானபுரத்தில் தி.மு.க. 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு யூனியன் சேர்மனும், மேற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளருமான பாலசிங் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதி ராஜாபிரபு வரவேற்றார். உடன்குடி நகரசெயலாளர் சந்தையடியூர் மால்ராஜேஷ், யூனியன் துணை சேர்மன் மீராசிராசூதீன், மாவட்ட பிரதிநிதிகள் மகேஸ்ரவன், தனராஜ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், ஒன்றிய துணை செயலாளர்கள் விஜயா, சுடலைக்கண், இசக்கிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக்கழக பேச்சாளர் பரணி சேகர், மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகப்பெருமாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரசின் சாதனைகள் குறித்து பேசினார்.

    இதில் ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாய்ஸ், திருச்செந்துர் நகர அவைத்தலைவர் சித்திரைகுமார், மாவட்ட பிரதிநிதி முபாரக், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் சலீம், திருச்செந்துர் ஒன்றிய அவைத்தலைவர் குழந்தைவேல், தலைமை பேச்சாளர் செந்தூர் பால கிருஷ்ணன், மாவட்ட மீனவரணிதுணை அமைப்பாளர் மெராஜ், மாவட்ட விவசாயஅணிதுணை அமைப்பாளர்கள் சக்திவேல், பெத்தாமுருகன், மாவட்ட கலைஇலக்கிய அணி துணைஅமைப்பாளர் ரஞ்சன், பேரூராட்சி கவுன்சிலர் ஜான்ஸ்பாஸ்கர், வக்கீல் சாத்ராக், தி.மு.க. நிர்வாகிகள் ஐசக், அல்பர்ட், பாலமுருகன், தினகர், ஜெயக்குமார், சம்பத், ஜெயசீலன், சார்லஸ், ஜோசப், பசுங்கிளி, டேவிட்ராஜ், ஜெரால்டு, மோசஸ்ராஜதுரை, அகஸ்டின், மகளிரணி நிர்வாகிகள் ஜெயராணி பாப்பா, ஜெபக்கனி, நல்லம்மாள், செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தி.மு.க. -காங்கிரஸ் கொண்டாட்டம்

    கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து உடன்குடி பஜாரில் தி.மு.க. -காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.உடன்குடி வட்டார காங்கிரஸ் தலைவர் துரைராஜ் ஜோசப் தலைமை தாங்கினார். உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் உடன்குடி பேரூராட்சி உறுப்பினர் ஜான்பாஸ்கர், பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் சலீம், தி.மு.க. மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரவிராஜா, கணேசன், முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெயராமன், நகர செயலர் பிரபாகர், திருச்செந்தூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் வக்கீல் தனீஷ், நிர்வாகிகள் சுப்பிரமணியன், லிங்கம், ராஜன், இஸ்ரேல்ஜான், ராமநாதன், அந்தோணி, செல்வன், பாஸ்கர், கோபால் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அய்யனார் கோவில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
    • ஏற்பாடுகளை கல்லால் அய்யனார் கோவில் அறக்கட்டளை தலைவர் ராம்குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், விழாக் கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள கூழையன்குண்டு கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான அல்லி ஊத்து கல்லால் அய்யனார் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கால்நடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பங்குனி உத்திர திருவிழா வருகிற 4-ந்தேதி தொடங்கு கிறது. இதையொட்டி அன்று மாலை 3மணிக்கு அல்லி ஊத்தில் இருந்து மேள தாளத்துடன் தீர்த்த குடம் கோவிலுக்கு எடுத்து வருதல், மாலை 4 மணிக்கு குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கோவில் கடற்கரையில் இருந்து கோவில் அறக்கட்டளை தலைவர் ராம்குமார் தலைமையில் தீர்த்தம் எடுத்து வருதல், இரவு 9 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜை நடக்கிறது.

    வருகிற 5-ந்தேதி அதிகாலை 5 மணி முதல் மங்கள இசை, மகா கணபதி ஹோமம், கல்லால் அய்யனார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் மூலமந்திர ஹோமம், மஹா பூர்ணாகுதி காலை 7 மணிக்கு பால்குடம் பவனி, 8 மணிக்கு வைத்தி யலிங்க சுவாமி, கல்லால் அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா அபிஷேகம், காலை 9 மணிக்கு சுவாமிகளுக்கு அலங்கார பூஜை, 10 மணிக்கு வில்லிசை, பிற்பகல் 12 மணிக்கு விஷேச தீபாராதனை, மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 7 மணிக்கு நகைச்சுவை இசைப்பட்டி மன்றம், இரவு 8.30 மணிக்கு வைத்தியலிங்க சுவாமி குடியிருப்பில் இருந்து முளைப்பாரி எடுத்து வருதல், இரவு 9 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு விசேஷ தீபாராதனை சுவாமி, அம்பாள் அனுக்கிரக பூஜை நடக்கிறது.

    வருகிற 6-ந்தேதி காலை 10 மணிக்கு வில்லிசை, நண்பகல் 12 மணிக்கு பத்திரகாளி அம்மன் மஞ்சள் நீராடுதல், பகல் 12.30 மணிக்கு மேள தாளம் முழங்க பத்திரகாளி அம்மன் பரிவார தேவதை களுடன் அல்லி ஊத்தில் நீராடுதல், மாலை 5.30 மணிக்கு சுடலைமாடன் சுவாமிக்கு அபிஷேகம் தொடக்கம், இரவு 7 மணிக்கு திரைப்பட கச்சேரி நடக்கிறது.

    இரவு 8.30 மணிக்கு வில்லிசை, இரவு 10மணிக்கு கனியான் கூத்து, நள்ளிரவு 12 மணிக்கு சுடலைமாட சுவாமிக்கு ஜாம பூஜை, சுவாமி பரிவாரங்களுடன் தில்லைவனம் சென்று வருதல், வருகிற 7-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு காலம்மை நாடாச்சி அம்மனுக்கு சிறப்பு பொங்க லிட்டு விசேஷ படைப்பு களுடன் அலங்கார பூஜை, அதிகாலை 5 மணிக்கு சுடலைமாடன் சுவாமி மற்றும் பரிவார தெய்வங் களுக்கு நிறைவு பூஜையுடன் திருவிழா நிறைவுபெறு கிறது.

    பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    ஏற்பாடுகளை கல்லால் அய்யனார் கோவில் அறக் கட்டளை தலைவர் ராம் குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், விழாக் கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    • உடன்குடி யூனியனுக்கு உட்பட்டசெட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன் ஏற்பாட்டில் தாங்கையூர்மியா வாக்கியா காட்டில் சமத்துவ பொங்கல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • பஞ்சாயத்து சேர்மன் பிரம்ம சக்தி தலைமை தாங்கி சமத்துவ பொங்கலிட்டு 500 பேருக்கு வேட்டி, சேலை, அரிசி ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்கு உட்பட்டசெட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன் ஏற்பாட்டில் தாங்கையூர்மியா வாக்கியா காட்டில் சமத்துவ பொங்கல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் பிரம்ம சக்தி தலைமை தாங்கி சமத்துவ பொங்கலிட்டு 500 பேருக்கு வேட்டி, சேலை, அரிசி ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன்குடி யூனியன் கவுன்சிலர் முருங்கை மகாராஜா, உடன்குடி பேரூராட்சி தலைவர் ஹீமைரா அஸ்ஸாப், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் இளங்கோ, செட்டியாபத்து ஊராட்சி துணைத் தலைவர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தொழிலதிபர்கள் ஞானராஜ் கோயில் பிள்ளை, ராம்பிரசாத் ராம்குமார், உடன்குடி பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆயிஷா கல்லாசி, உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் சதீஷ், உடன்குடி வணிகர்கள் சங்க தலைவர் அம்புரோஸ், மாவட்ட தி.மு.க., பிரதிநிதி ஜெயபிரகாஷ், குலசேகரன் ஊராட்சிபட்டினம் தலைவர் கணேசன், செட்டியா பத்து ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ரா. மஞ்சுளா, உஷாராணி, சிவபாலன், சக்தி கனி, ஜெயக்குமார், கலா, மு.மஞ்சுளா உட்பட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சக்கரை பொங்கல், கரும்பு வழங்கப்பட்டது

    • பொங்கல் பண்டிகை வருகின்ற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடுவதையொட்டி, தற்போது வீட்டுக்கு முன்பு வண்ண, வண்ண கோலங்கள் இட்டு தைப்பொங்கலை முன்னதாகவே வரவேற்று வருகின்றனர்.
    • ஒரு சின்ன பாக்கெட் ரூ.10 என கிராமப்புறங்களில் நகர்ப்புறங்களிலும் விற்கப்படுகிறது.

    உடன்குடி:

    பொங்கல் பண்டிகை வருகின்ற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடுவதையொட்டி, தற்போது வீட்டுக்கு முன்பு வண்ண, வண்ண கோலங்கள் இட்டு தைப்பொங்கலை முன்னதாகவே வரவேற்று வருகின்றனர்.

    இதையொட்டி உடன்குடி வட்டார பகுதியில் பஜார் வீதிகள், பரமன்குறிச்சி, தண்டுபத்து, செட்டியாபத்து, சீர்காட்சி, பிச்சிவிளை, லட்சுமிபுரம், அம்மன்புரம், கொட்டங்காடு சோமநாதபுரம், தாண்டவன் காடு, பெரியபுரம், குலசேகரன்பட்டினம், மாதவன்குறிச்சி, சிறுநாடார்குடியிருப்பு, தாங்கையூர் மற்றும் சுற்றுபுறகிராமங்களிலும், தெருக்களிலும் கலர்கோலப்பொடி விற்பனை தீவிரமடைந்துள்ளது.

    ஒரு சின்ன பாக்கெட் ரூ.10 என கிராமப்புறங்களில் நகர்ப்புறங்களிலும் விற்கப்படுகிறது. அனைத்துதரப்பு மக்களும் பொங்கல் பண்டிகைக்காக கோலப் பொடிகளை வாங்கி தினந்தோறும் வீட்டில் வாசல்களில் வண்ண வண்ண கோலங்கள் இட்டு அசத்தி வருகின்றனர்.

    • தமிழ்நாடுமுஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட மனிதநேய மக்கள் கட்சி கவுன்சிலரான16 -வது வார்டை பார்வையிட்டார்.
    • கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகருக்கு வழங்கினார்.

    உடன்குடி:

    தமிழ்நாடுமுஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட மனிதநேய மக்கள் கட்சி கவுன்சிலரான16 -வது வார்டை பார்வையிட்டார்.

    தொடர்ந்து மக்களிடம் நேரில் சென்று கவுன்சிலரின் செயல்பாடைபற்றி கேட்டறிந்தார்.

    புதுமனை மேலத்தெரு வில் உள்ள அங்கன்வாடியை விரைவில் புதுப்பித்து கட்டுவதற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதை பற்றிகூறினர்.

    அப்போது அவர் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று உடனுக்குடன் பார்வையிட்டு விரைவில் நடவடிக்கை எடுப்பது மக்கள் பிரதிநிதியின் கடமை யாகும், நம்மை தேர்வு செய்துள்ள மக்களுக்கு நாம் என்றும் உறுதுணையாக இருந்து அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்என்று ஜவாஹிருல்லா கூறினார்,

    மேலும், உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி மன்ற தலைவர் ஹுமைரா அஸ்ஸாப் கல்லாசி சிறப்பான முறையில் உடன்குடி பேரூராட்சி மன்றத்தை செயல்படுத்தி வருவதாகவும் கூறினார்.

    தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி பல்வேறு ஆலோசனை களை நிர்வாகிகருக்கு வழங்கினார்.

    அப்போது, மாநில தலைமை பிரதிநிதி ஜோசப் நொலாஸ்கோ, தூத்துக்குடி மாவட்ட த.மு.மு.க. தலைவர் ஆஸாத், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா கல்லாசி, 16-வது வார்டு கவுன்சிலர் முகம்மது ஆபித், மாவட்ட பொருளாளர் சர்தார், மாவட்ட இளைஞர் அணி செயலாளர்பரகத்துல்லா, உடன்குடி நகரத் தலைவர் அஜீஸ், ம.ம.க. நகர செயலாளர் ஹமீது, த.மு.மு.க. நகர செயலாளர்சாதிக், செய்யாது, புஹாரி, ஆசிக் ரகுமான், அத்தாது, சுஹைல், யாசர், நவாஸ், ஹாலித், தி.மு.க. கிளை செயலாளர்கள் சுபியானசம்சுதீன் மற்றும் மீராசாகிப், ஹரிஷ், அஸர், ஜகுபர், ரியாஸ் ஜாபர், இப்ராஹிம், ஜமாத்தார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொங்கல் திருநாள் வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படு கிறது. வீட்டுக்கு முன்பு அடுப்பு வைத்து பொங்கலிடுவார்கள்.
    • பொங்கல் பொங்கி வரும்வேளையில் காய்ந்த பனை ஓலைகளை வைத்து பொங்கலோ பொங்கல் என்று மங்கல குரல் எழுப்புவார்கள். பொங்கல் வைப்பதற்கு மிகவும் உறுதுணையாக இருப்பது காய்ந்தபனை ஓலைகள்ஆகும்.

    உடன்குடி:

    பொங்கல் திருநாள் வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படு கிறது. வீட்டுக்கு முன்பு அடுப்பு வைத்து பொங்கலிடு வார்கள். பொங்கல் பொங்கி வரும்வேளையில் காய்ந்த பனை ஓலைகளை வைத்து பொங்கலோ பொங்கல் என்று மங்கல குரல் எழுப்புவார்கள். பொங்கல் வைப்பதற்கு மிகவும் உறுதுணையாக இருப்பது காய்ந்தபனை ஓலைகள்ஆகும்.

    இதனால் உடன்குடி வட்டாரபகுதிக்கு உட்பட்ட குலசேகரன்பட்டினம், பரமன் குறிச்சி, மெஞ்ஞான புரம், கொட்டங்காடு, லட்சுமி புரம், மெய்யூர். தண்டுபத்து செட்டியாபத்து, சீர் காட்சி, பிச்சுவிளைமற்றும் சுற்றுப்புற கிராமங்கள் ஏராளமான இடங்களில் பனை ஓலைகள் குவியல் குவியலாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. சிலர் சைக்கிள் மற்றும் தலை சுமையிலும் பனை ஓலைகளை வைத்துக் கொண்டு தெருத்தெருவாக சென்று விற்பனை செய்து வரும் காட்சியை காண முடிகிறது. ஒரு ஒலை ரூ. 20 வரை விற்பனை செய்யப்படுகிறது, மட்டை யுடன் இருக்கும் பனை ஓலைகளுக்கு கிராக்கி அதிகமாக உள்ளது.

    • உடன்குடி யூனியனுக்குட்பட்ட குதிரைமொழி கிராமத்தில் உள்ள சுந்தரநாச்சிஅம்மன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற பிப்ரவரி 12-ந்தேதி நடைபெற உள்ளது.
    • நேற்று மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பாலாலயம் வழிபாடு செய்யப்பட்டது. கோவிலை புதுப்பித்துகட்டவும், சுவாமி சிலைகளை புதுபிக்கும் பணியும் தொடங்கியது.

    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்குட்பட்ட குதிரைமொழி கிராமத்தில் உள்ள சுந்தரநாச்சிஅம்மன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற பிப்ரவரி 12-ந்தேதி நடைபெற உள்ளது. முன்னதாக நேற்று மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பாலாலயம் வழிபாடு செய்யப்பட்டது. கோவிலை புதுப்பித்துகட்டவும், சுவாமி சிலைகளை புதுபிக்கும் பணியும் தொடங்கியது. நிகழ்ச்சியில் உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர்,நகை சரி பார்ப்பு அதிகாரி வெங்கடேஷ், ஆய்வாளர்பகவதி, கோவில் செயல் அலுவலர் காந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேலும் பழமையான சுவாமி சிலைகள் சிற்பங்களை ஆய்வு செய்து கும்பாபிஷேகம் தொடர்பான ஆலோசனைகளை பக்தர்களுடன் கலந்து மேற்கொண்டனர். பாலாயம்நிகழ்ச்சி, சிறப்பு பூஜைகள் மற்றும் யாகசாலை வழிபாட்டைகுலசை முத்தாரம்மன் கோவில் அர்ச்சகர் குமார் பட்டர் நடத்தினார். சுந்தரநாச்சி அம்மன் கோவில் அர்ச்சகர் லட்சுமணன் உடனிருந்தார். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • தூத்துக்குடி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான நீச்சல் போட்டி தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடந்தது.
    • இதில் கிறிஸ்டியா நகரம் டி.டி.டி.ஏ மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்று மாநில அளவிலான நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான நீச்சல் போட்டி தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடந்தது. இதில் கிறிஸ்டியா நகரம் டி.டி.டி.ஏ மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்று மாநில அளவிலான நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவன் முத்துக்குமார்19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 50 மீட்டர் பேக்ஸ்டோக் போட்டியில் முதலிடமும், 100 மீட்டர் பரிஸ்டைல்போட்டியில் 2-ம் இடமும் பிடித்தனர். மாணவன் மைக்கேல் சுரேன் 17 வயதுக்கு உட்பட்டோர் போட்டியில் 200 மீட்டர் பிரிஸ்டைல் போட்டியில் முதலிடமும், 200 மீட்டர் பேக்ஸ்டோக் போட்டியில் 2-ம் இடமும் , மாணவன் டினோ 100 மீட்டர் பிரிஸ்டைல் போட்டியில் 3-ம் இடமும், 100 மீட்டர் பிளேபாட்டியில் 2-ம் இடமும், மாணவன் ரோபின் 50 மீட்டர் பேக்ஸ் போக் போட்டியில் 3-ம் இடமும் பெற்றான். 4 x 100 மிஸ்டர் தொடர் போட்டியில் மாணவர்கள் ரோபின், மைக்கேல் சுரேன், ஜெ ரிக்சன், டினோ ஆகியோர் சாதனை படைத்தனர். மாநில மாநில அளவிலான நீச்சல் போட்டிக்கு தேர்வு பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் ஆரோன்ராஜ், தலைமை ஆசிரியர் லிவிங்ஸ்டன், உடற்கல்வி ஆசிரியர்கள் ரவிக்குமார், ஐசக்கிருபாகரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் பாராட்டினார்கள்.

    • உடன்குடி 4 பஜார் சந்திப்பில் போலீசார் இல்லை என்றால் உடனேஒரு வழிப்பாதை மீறப்படுகிறது.
    • போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

    உடன்குடி:

    உடன்குடி மெயின் பஜார் சந்திப்பில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் ரோடு ஒரு வழிப்பாதையாக பயன்படுத்தபடுகிறது.இந்த சாலையில் எதிரே எதிரே வாகனங்கள் வந்தால் ஒன்றைஒன்று கடந்து செல்வது மிக மிக கடினம். அதனால் உடன்குடிகீழபஜார் ரோடு மட்டும் ஒரு வழிப்பாதையாக பயன்படுத்தப்படுகிறது. உடன்குடி 4 பஜார் சந்திப்பில் போலீசார் இல்லை என்றால் உடனேஒரு வழிப்பாதை மீறப்படுகிறது.

    ஏராளமான வாகனங்கள் கிழக்கு நோக்கி செல்வதால் அடிக்கடி கீழபஜாரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.இதனால்பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே ஒரு வழிப்பாதையை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று வியாபாரிகளும், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    உடன்குடி வட்டார பகுதியில் தற்போது கருப்பட்டி உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் கருப்பட்டி விலை கிடுகிடு என உயர்வடைந்துள்ளது.
    உடன்குடி:

     உடன்குடி வட்டார பகுதியில் தற்போது கருப்பட்டி உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. செட்டியாபத்து, மாதவன்குறிச்சி, ஆதியாகுறிச்சி, லட்சுமிபுரம், நங்கை மொழி, குதிரைமொழி, பரமன்குறிச்சி வெள்ளாளன்விளை, மாநாடு தண்டுபத்து, நயினார்பத்து, குலசேகரன்பட்டினம் ஆகிய ஊராட்சி மன்ற பகுதியில் உள்ள சுமார் 50 கிராமங்களில் சுமார் 500 குடும்பத்தினர் பனைமரத்தில் பதனீர் எடுத்து அதை பக்குவப்படுத்தி காய்ச்சி கருப்பட்டியும், பனங் கற்கண்டும் உற்பத்தி செய்து வருகின்றனர்.

    இங்கு உற்பத்தியாகும் கருப்பட்டி தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் உடன்குடி கருப்பட்டி என்று ஊர் பெயரோடு செல்கிறது. வெளியூர்களில் உடன்குடி கருப்பட்டி இங்கு கிடைக்கும் என்று ஊர் பெயரோடு எழுதி வைத்து விற்பனை செய்வது வழக்கம்.

    ஏராளமான வியாபாரிகள் உடன்குடிக்கு வந்து தங்கியிருந்து எந்த கலப்படமும் இல்லாத ஒரிஜினல் புது கருப்பட்டியை வாங்குவதற்கு உற்பத்தியாகும் இடத்திற்குச் சென்று கொள்முதல் செய்கின்றனர்.

    முன்பு ரூ.200-க்கு கொள்முதல் செய்த கருப்பட்டி தற்போது  உயர்ந்து ஒரு கிலோ ரூ.240 வரையில் கொள்முதல் செய்கின்றனர். இதுபற்றி உடன்குடியில் முகாமிட்டவியாபாரி ஒருவர் கூறுகையில்,   புகழ்பெற்ற உடன்குடி கருப்பட்டி மருத்துவ குணமும், நோய் எதிர்ப்பு சக்தியும் கொண்டதாகும், இவைகளை எந்த கலப்படமும் இல்லாமல் ஒரிஜினலாக வாங்குவதற்காகவே நாங்கள் இங்கு முகாமிட்டு உள்ளோம். அதனால் கூடுதல் விலை கொடுத்து வாங்கி அனுப்புகிறோம் என்றார்.

    அதனால் தற்போது எந்த கலப்படமும் இல்லாத உடன்குடி புதுகருப்பட்டி திடீர் என விலை உயர்ந்து, ஒரு கிலோ கருப்பட்டி ரூ.280 வரை சில்லரைக்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்பு பழைய கருப்பட்டி ரூ.300-க்கு விற்பனை செய்தனர். தற்போது ஒரு கிலோ ரூ.380-க்கு விற்பனை செய்யபடுகிறது.
    இந்தியாவில் அனைத்து மாநிலத்திற்கும் வழிகாட்டியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.
    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட உதிரமாடன்குடியிருப்பில் புதியதாக அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு அரசு ரூ. 11.55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

    இத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உடன்குடியூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றதலைவர் பாலசரஸ்வதி, துணைத் தலைவர் ராஜகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு அடிக்கல் நட்டி குத்துவிளக்கேற்றி பணியை தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் பேசியதாவது:-

    தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனையை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் உள்ள முதல்வர்களும் திரும்பி பார்க்கின்றனர்.தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலமாக உள்ளது. 

    இதனால்மற்ற மாநில முதல்வர்கள் தமிழகத்தை பின்பற்றி இங்கு உள்ள திட்டங்களை செயல்படுத்த முனைப்புடன் செயல்படுகின்றனர். அனைத்து மாநிலத்திற்கும் வழிகாட்டியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை உள்ளது. இப்படிப்பட்ட முதல்வருக்கு நாம் எப்போதும் ஆதரவாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் பேசினார். 

    இதில் தி.மு.க., காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
    உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி மற்றும் இந்து அன்னையர் முன்னணி சார்பில் இந்து சமய பண்பாடு வகுப்புகள் நடந்தது.
    உடன்குடி:

    உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி மற்றும் இந்து அன்னையர் முன்னணி ஆகியோர் இணைந்து நடத்தும் 7-ம் ஆண்டு கோடை கால இந்து சமய பண்பாடு வகுப்புகள் உடன்குடி ஒன்றிய கிராமப்புறங்களில் நடந்து வருகிறது. 

    இந்து அன்னையர் முன்னணி ஏற்பாட்டில் நடைபெறும் கோடை கால பயிற்சி முகாமில் ராமாயணம், மகாபாரதம் போன்ற பல்வேறு இந்து சமய புராணங்கள் பற்றிய விளக்கம் கொடுக்கப்படுகிறது.

    மேலும் சுவாமி விவேகானந்தர், சுவாமி திருவள்ளுவர், கர்ணன் ஆகியோர்களின் வாழ்க்கையையும், தியானம், தினசரி இந்து கோவிலுக்கு செல்லும் அவசியம் ஆகியவற்றை சிறுவர்களுக்கு இந்து முன்னணி ஒன்றிய பொதுச் செயலாளர் கேசவன் கிராமம் கிராமமாக சென்று விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்.
    ×