search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "culture"

    • வீடியோ WOKE கலாச்சாரத்தை ஊக்குவிப்பதால் மஸ்க் கொதிப்படைந்துள்ளார்.
    • உங்கள் மார்க்கெட்டிங் டீமை வேலையில் இருந்து முதலில் தூக்குங்கள் என்று தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது ஏகபோக ஆதரவை பெற்ற டொனல்டு டிரம்ப் வெற்றி பெற்றதில் இருந்தே எலான் மஸ்க் பயங்கர குஷியில் உள்ளார். அவருக்கு டிரம்ப் அமைச்சரவையில் Department of Government Efficiency or DOGE துறை பொறுப்பு விவேக் ராமசாமியுடன் பகிர்தளிக்கப்பட்டுள்ளது.

    தனக்கு சொந்தமான எக்ஸ் தளத்தில் படு ஆக்டிவாக போஸ்டர்களை போட்டு வரும் எலான் மஸ்க் தற்போது ஜாகுவார் கார் நிறுவனத்தை வம்புக்கு இழுத்துள்ளார். சுமார் 101 ஆண்டுகளாக கார் தயாரிப்பு தொழிலில் இருக்கும் ஜாகுவார் நிறுவனம் தனக்கென ஒரு பிராண்ட் வேல்யூவை உருவாக்கி வைத்துள்ளது. இந்நிலையில் தனது நிறுவன லோகவை புதுப்பிக்க ஜாகுவார் முடிவெடுத்துள்ளது.

    ஜாகுவார் பாய்வது போன்ற வடிவமைப்பை கொண்ட அந்நிறுவனத்தின் லோகோ பிரசித்தமாக இருந்துவரும் நிலையில் அதை புதுப்பிதுள்ளதாக வீடியோ வெளியிட்டு அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த வீடியோ பன்மைத்துவம் மற்றும் பாலின சமத்துவம், சமூக முன்முடிவுகளை உடைக்கும் தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றை அடியொற்றி அமெரிக்காவில் உருவான WOKE culture கலாச்சார தோரணையில் உள்ளது பழமைவாதியான எலான் மஸ்க்கை கொதிப்படைய செய்து இது குறித்து பேச வைத்திருக்கிறது.

    ஜாகுவாரின் முடிவு குறித்து பேசியுள்ள அவர், நீங்கள் கார்களை தான் தயாரிக்கிறீர்களா, நீங்கள் உண்மையில் விற்பது கார்களை தானா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அவர்கள் கார்களை தயாரிக்க வில்லை, தவறுகளை தயாரிக்கிறார்கள் என்றும், உங்கள் மார்க்கெட்டிங் டீமை வேலையில் இருந்து முதலில் தூக்குங்கள் என்று தெரிவித்துள்ளார்.

    பழமைவாதியான எலான் மஸ்க் தன்னை ஒத்த பழமைவாத சிந்தனை உடையதாலேயே டிரம்புக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வருகிறார் என்பது ஜனநாயகவாதிகளின் வாதம். அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சியில் மக்கள் மீதான அரசின் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கும் என்பதே லிபரல்களின் அச்சமாக உள்ளது.

    முன்னதாக எலான் மஸ்க்கின் மகள் விவியன் வில்சன் மூன்றாம் பாலினத்தைச் சேர்த்தவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இதனால் உயிரோடிருக்கும் தனது மகன் சேவியர் இறந்துவிட்டாள் என்று மஸ்க் போட்டுவெளியில் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. 

     

    • உலகளவில்100 வயதை கடந்தவர்கள் அதிகம் பேர் வசிக்கும் நாடு.
    • ‘ஐகிகாய்’ என்பது ஜப்பானிய பாரம்பரிய தத்துவமாகும்.

    ஜப்பானியர்களின் வாழ்க்கை முறையும், கலாசாரமும், அவர்கள் பின்பற்றும் பழக்கவழக்கங்களும் உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

    உலகளவில்100 வயதை கடந்தவர்கள் அதிகம் பேர் வசிக்கும் நாடாக அது விளங்குவதுதான் அதற்கு காரணம். மகிழ்ச்சியான மற்றும் மன அழுத்தமில்லாத வாழ்க்கையை வாழ விரும்புபவர்கள் ஜப்பானியர்கள் பின்பற்றும் பழக்கவழக்கங்களை தெரிந்து கொள்வதும், அதனை கடைப்பிடிப்பதும் அவசியமானது.

    மகிழ்ச்சி :

    'ஐகிகாய்' என்பது ஜப்பானிய பாரம்பரிய தத்துவமாகும். எந்தவொரு சூழலிலும் அமைதியை கடைப்பிடிப்பது, எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டிருப்பது, சின்ன சின்ன விஷயங்களிலும் மகிழ்ச்சியை அனுபவிப்பது போன்ற பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் வாழ்க்கையில் நிலையான மகிழ்ச்சி மற்றும் மன நிறைவை கண்டறியலாம் என்பதை நோக்கமான கொண்டது. இந்த தத்துவத்தை ஜப்பானியர்கள் பின்பற்றி மகிழ்ச்சியான வாழ்க்கை சூழலை தக்கவைத்துக்கொள்கிறார்கள்.

    சாப்பாடு:

    உடலை கோவில் போல வழி நடத்த வேண்டும் என்பது ஜப்பானிய உணவுக்கட்டுப்பாட்டின் முக்கிய அங்கம். மது, புகையிலை போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை விலக்கி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். அதனை பெரும்பாலானோர் கடைப்பிடிக்கவும் செய்கிறார்கள்.

    உணவில் குறைந்த கலோரி கொண்ட பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், சர்க்கரை வள்ளிக்கிழங்கு உள்ளிட்டவற்றை சேர்த்துக்கொள்கிறார்கள். சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் கலோரிகள் குறைவாக இருப்பதை உறுதி செய்கிறார்கள். அதனால் திருப்தியாக சாப்பிடுகிறார்கள். உடற்பயிற்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

    கிரீன் டீ :

    கிரீன் டீயில் ஆன்டி ஆக்சிடெண்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்ட பாலிபீனால்கள் அதிகம் இருக்கிறது. அதனால் ஜப்பானியர்கள் கிரீன் டீயை தங்கள் பாரம்பரிய பானமாக ருசிக்கிறார்கள்.

    இது குடல் நலனை பாதுகாக்கும், செல் சிதைவை தடுக்கும், நாள்பட்ட நோய்களில் இருந்து விலக்கி வைக்கும் பானமாக விளங்குகிறது. ஜப்பானிய பாரம்பரிய பானமான கிரீன் டீ உலக அளவில் பிரபலமடைந்தும் வருகிறது.

    சமூக ஈடுபாடுகள்:

    குழுவாக ஒருங்கிணைந்து செயல்பட்டு அடிக்கடி சமூக செயல்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள். அதன் மூலம் சமூக தொடர்புகளை வலுப்படுத்திக்கொள்கிறார்கள். அப்படி இயங்குவது சமூகத்திற்கு பயன்படும்படியாக அமைவதுடன் அவர்களின் உடல் செயல்பாடும் மேம்படுகிறது. அது அவர்களின் ஆரோக் கியத்திற்கும் நன்மை தருவதாகவும் அமைந்துவிடுகிறது.

    மெதுவாக சாப்பிடுதல்:

    ஜப்பானியர்கள் குடும்பமாக ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். உணவை நன்றாக மென்று சாப்பிடவும் செய்கிறார்கள். அது செரிமானம் சிறப்பாக நடைபெறுவதற்கு வித்திடுகிறது. அவசரமாக சாப்பிட்டு முடித்துவிட்டு எழுவதற்கு குடும்பத்தினரை அனுமதிப்பதில்லை. அப்படி ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதன் மூலம் உறவு பந்தத்தையும் வலுப்படுத்திக்கொள்கிறார்கள்.

    • புழுதி பறந்த நிலத்தில் நடந்த பண்பாட்டு நிகழ்வை, சுமார் 3 லட்சம் பேர் பார்வையிட்டனர்.
    • வெற்றி பெற்ற காளைகளும் - வீரர்களும் பரிசுகள் பெற்றார்கள்.

    கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை வரும் 24ம் தேதி நிறந்து வைத்து போட்டிகளைக் காண மதுரை அலங்காநல்லூர் கீழக்கரைக்கு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

    தமிழரின் வீரவிளையாட்டான ஏறுதழுவுதல், ஜல்லிக்கட்டு 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று, அதில் திமில் பெருத்த 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளையர்கள் களத்தில் சந்தித்துள்ளனர்.

    புழுதி பறந்த நிலத்தில் நடந்த பண்பாட்டு நிகழ்வை, சுமார் 3 இலட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர்.

    வெற்றி பெற்ற காளைகளும் - வீரர்களும் பரிசுகள் பெற்றார்கள்.

    திராவிட மாடல் ஆட்சியில் பண்பாட்டின் அடையாளமாய் விளங்கும் ஏறுதழுவதலுக்கென மதுரையில் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை" வரும் 24-ஆம் நாள் திறந்து வைத்து போட்டிகளைக் காண மதுரை, அலங்காநல்லூர் - கீழக்கரைக்கு வருகிறேன்.

    தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம்! எக்காலத்திலும் பண்பாட்டைப் காப்போம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • விருதுநகரில் பண்பாட்டின் அடையாளங்கள் பரவிக்கிடக்கின்றன.
    • இந்த இடங்களுக்கு சென்று நமது பண்பாட்டின் தொன்மை அடையாளங்கள் குறித்து அறிந்து கொள்வது அவசியம்.



    விருதுநகர்

    நமது மரபு சின்னங்கள் பற்றி அடுத்த தலைமுறையினர் அறிந்து, அவற்றை பாதுகாக்கும் மனப்பான்மையை உருவாக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 முதல் 25 வரை உலக மரபு வாரமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் வரலாற்றுக்கு ஆதாரமான கல்வெட்டுகள், சிற்பங்கள், கட்டிடக்கலை சிறப்புகள் கொண்ட கோவில்கள் உள்ளிட்ட பண்பாட்டின் அடையாளங்கள் விருதுநகர் மாவட்டத்தில் பல இடங்களில் பரவிக்கிடக்கின்றன. இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது:-

    சிவகாசி அருகிலுள்ள பிரபலமான கிராமம் எதிர்கோட்டை. இங்குள்ள கல்வெட்டுகளில் வெண்பைக்குடி நாட்டுக்கூத்தன்குடி என குறிக்கப்பட்டுள்ளது. இங்கு பாற்சுனைக்குடிப் படாரர் என்ற சிவன் கோவிலும், நாராயண விண்ணகரம் என்ற பெருமாள் கோவிலும் உள்ளன. சிவன் கோவிலுக்கு எதிரில் பாறையில் இரு வட்டெழுத்து கல்வெட்டுகள் உள்ளன.

    இதில் கி.பி.10-ம் நூற்றாண்டு சடையமாறன் கல்வெட்டு, இவ்வூரில் பூசலில் இறந்த கூலிச்சேவகன் மாறம்பட்டனுக்காக, மாகாணக்குடி சேவகன் ஒருவன் இந்த கோவில் இறைவனுக்கு பொன் அளித்துள்ளதையும், கி.பி.965-ம் ஆண்டு சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் கல்வெட்டு, சுனைக்குடி படாரருக்கு, அவ்வூர் அறுவை வாணியச்சேரி ஆச்சன் என்பவர், திருநந்தாவிளக்கு ஒன்று எரிப்பதற்காக 55 ஆடுகள் அளித்ததையும் கூறுகிறது.

    பெருமாள் கோவிலில், முதலாம் ராஜராஜசோழனின் கி.பி.1006-ம் ஆண்டு கல்வெட்டில் கூத்தன்குடி நகரத்தார் இறையிலியாகக் கொடுத்த நிலம் பற்றியும், மற்றொரு கல்வெட்டில் சாலியன் கன்றாடைக்காவிதி என்பவர் பெயரும் காணப்படுகிறது. சாலியர் துணி வணிகர்கள் ஆவர். கோவில் உவச்சுப் பணியாளர்களுக்கு தானம் கொடுத்த ராஜராஜனின் இன்னொரு கல்வெட்டில், திசையாயிரத்து என்ற சொல் காணப்படுவதன் மூலம் இவ்வூரில் திசையாயிரத்து ஐந்நூற்றுவர் என்ற வணிகக்குழு தங்கி வணிகம் செய்திருப்பதை அறிய முடிகிறது.

    அருப்புக்கோட்டையில் இருந்து சாயல்குடி செல்லும் வழியில் உள்ள தொப்பலாக்கரை. 1000 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்பு கொண்ட சிவன் கோவில், பெருமாள் கோவில், விற்பொறி வீரப்பெரும்பள்ளி என்ற சமணப்பள்ளி ஆகிய தொல்லியல் சின்னங்கள் இங்கு உள்ளன.இங்கு காணப்படும் கல்வெட்டுகளில் இவ்வூர் அளற்றுநாட்டு குளத்துார் எனப்படுகிறது. பெருமாள் கோவிலில் உள்ள கல்வெட்டுகள் இக்கோவில் இறைவனை திருமேற்கோயில் உய்யவந்த விண்ணகர எம்பெருமான் என்கின்றன. முதலாம் மாறவர்மன் குலசேகரபாண்டியன் காலத்தில் இங்கு விற்பொறி வீரப்பெரும்பள்ளி என்ற சமணப்பள்ளி இருந்ததையும், அதற்கு பள்ளிச்சந்தமாக நிலம் இருந்ததையும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

    இதற்கு ஆதாரமாக இவ்வூரில் உள்ள இரு சமண தீர்த்தங்கரர் சிற்பங்களை கொள்ளலாம். தீர்த்தங்கரர் சிற்பங்கள் உள்ள இடத்தில் பழமையான ஒரு லிங்கமும் உள்ளது. பெருமாள் கோவில் முன்பு உள்ள பலிபீடத்தில் குலசேகர பாண்டியன் கல்வெட்டும், சிம்மவாகனத்தில் முதலாம் குலோத்துங்க சோழனின் பாடல் கல்வெட்டும் உள்ளன.

    சமூகத்தில் உயர் நிலையில் இருந்து இறந்த அரசர்களுக்கு அமைக்கப்படும் கோவில்கள் பள்ளிப்படை கோவில்கள் என அழைக்கப்படுகி ன்றன. இதன் கருவறையில் லிங்க அமைப்பு காணப்படும். அத்தகைய பள்ளிப்படைக் கோவில்கள் சோழநாட்டில் பல உள்ளன. எனினும் பாண்டிய நாட்டில் திருச்சுழி அருகிலுள்ள பள்ளிமடத்தில் மட்டுமே பள்ளிப்படை கோவில் காணவப்படுகிறது.

    குண்டாற்றின் கரையில் உள்ள பள்ளிமடத்தில் இறந்த தன் அண்ணன் சுந்தரபாண்டியனுக்கு ஒரு பள்ளிப்படை கோவிலை சோழன் தலை கொண்ட வீரபாண்டியன் உருவாக்கியதை அறிய முடிகிறது. இவர்கள் இருவரும் 3ம் ராஜசிம்ம பாண்டியனின் மகன்கள். கி.பி.10-ம் நூற்றாண்டில் பாண்டியருக்கும், சோழர்களுக்கும் இடையில் பல போர்கள் நடந்தன. அந்த சமயம் இந்த ஊரில் சுந்தரபாண்டியன் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

    கல்வெட்டுகளில் பருத்திக்குடி நாட்டு திருச்சுழியல் பள்ளிபடை சுந்தரபாண்டீஸ்வரம் என இந்த கோவில் குறிப்பிடப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இன்றைய இளைய தலைமுறையினர் இந்த இடங்களுக்கு சென்று நமது பண்பாட்டின் தொன்மை அடையாளங்கள் குறித்தும், அவற்றின் பின்புல வரலாறு குறித்தும் அறிந்து கொள்வது அவசியம்.

    • கும்மி என்பது கொம்மை கொட்டுதல் என இலக்கியம் கூறுகிறது.
    • கொம்மைதான் கும்மியாக திரிந்திருக்கலாம்.

    கொங்கு நாட்டின் மிகவும் தனித்தன்மையாக காணப்படுவது வள்ளிக்கும்மி. கும்மி என்பது கொம்மை கொட்டுதல் என இலக்கியம் கூறுகிறது. கொம்மைதான் கும்மியாக திரிந்திருக்கலாம்.

    வள்ளிக்கும்மி ஆண்கள் தான் ஆடுவார்கள். பெண்கள் ஆடு்ம் கும்மியில் சலங்கை மற்றும் இசைக்கருவி இல்லை. இப்போது பெண்கள் மிகுதியாக கலந்துகொள்ளும் கலையாக கொங்கு நாட்டின் வள்ளிக்கும்மி திகழ்கிறது. கும்மிப்பாடலை ஒருவரே பலமணி நேரம் பாடுவார். ஆண்கள் மட்டுமே வள்ளி கும்மியை ஆடினார்கள் என்று சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம்.

    வள்ளிக்கும்மி என்பது முருகன், வள்ளி, பிறப்பு முதல் திருமணம் வரை உள்ள செய்திகளை பாடுவதாக வள்ளிக் கும்மி அமைகிறது. கொங்கு நாட்டின் நாகரிகம், பண்பாட்டை எடுத்துச்சொல்லும் வகையில் வள்ளி கும்மி உள்ளது.

    ஆயற்கலை 64 கலைகளில் முதன்மையானது வள்ளிக் கும்மி. முறையாக பயிற்சி பெற்றே இதனை அரங்கேற்றம் செய்கிறார்கள். 40 நாட்கள் அல்லது 30 நாட்கள் முறையாக பயிற்சி பெற்று அதற்கு முறையாக பூஜை செய்து சலங்கை அணிந்து அரங்கேற்றம் செய்வார்கள். அரங்கேற் றம் என்பது தனக்கு கற்று தந்த ஆசிரியர்களை கவுரவிக் கும் வகையில் அமையும்.

    வள்ளி கும்மி ஆடுவதற்கு முன்னர் முதலில் காப்பு பாடல்களை பாடி துவங்குவார் கள். தண்டபானி, பரிவார தெய்வங்கள், அம்மனை அழைத்து, மன்னர்களை போற்றி என்ன செய்வோம் கன்னிமாரே என்று கிழங்கு எடுக்க போய் அங்கு குழந்தை கிடைக்கும் மகாதேவன் தன்னருளால் வள்ளி குழியிலே கிடக்க நீராட்டி 12 வரிகளிலேயே பெரிய பெண்ணாகி விடுவாள் என்று பாடல்கள் தொடங்கும்.

    குறவர் இனங்களில் பெண்கள் தான் காவல் செய்ய வேண்டும். கிளி விரட்டி விடும் வள்ளி முருகனுக்கு ஏற்ற பெண் என்று வரைந்து கொடுக்கிறார். விநாயகர் பெருமானை அனுப்பி சம்மதம் கேட்டு வள்ளி முருகன் திருமணம் நடக்கிறது. இவ்வாறு கதையில் அமையும். திருமணத்திற்கு மேல் உள்ள கதைகளை பாடிச் செல்ல 2 மாதங்கள் ஆகும் என்று வள்ளி கும்மி ஆடுபவர் கள் மற்றும் பாடுபவர்கள் சொல்கிறார்கள்.

    வள்ளி கும்மி என்பது தமிழர்கள் பண்பாட்டிற்கு பெருமை சேர்ப்பது மட்டுமில் லாமல் உடல் நலமும் நன்றாக இருக்கிறது. மூச்சிப்பயிற்சி போன்றும் இது அமையும். வள்ளி கும்மி ஆடுவதன் மூலம் உடலும் உள்ளமும் சேர்ந்தே பயணிக்கிறது. பாடல், நடனம் என்று இருப்பதால் மனதும் சுத்தமாகிறது. கர்ப்பிணி பெண்களும் இதனை கற்று ஆடுகிறார்கள். அவர்கள் உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.

    இந்த வள்ளி கும்மியை ஆடுவதால் உச்சி முதல் உள்ளாங்கால் வரை ஆரோக்கியமாக இருப்பதாக கூறி வருகிறார் கள். வள்ளி கும்மியாட்டம் பாரம்பரியமான கலைகளில் ஒன்றாகும். 2 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பே போற்றப்பட் டது. 2 மணி நேரம் சளைக்காமல் ஆண்களும், பெண்களும் வளைந்து நெளிந்து குனிந்து கைகளை உயர்த்தி தாழ்த்தி ஆடுகிறார்கள்.

    இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அழிவின் விழிம்பு வரை பெற்ற இந்த கலை என்றும் போற்றத்தக்கதாக விளங்கி வருகிறது.

    • தஞ்சை தமிழ் பல்கலைக்கழக வளாகத்தையும், பெரிய கோவிலையும் அலுவலர்கள் பார்வையிட்டனர்.
    • சோழர் கால நீர் மேலாண்மை விளக்கம் பெற்றனர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் இந்திய ஆட்சிப் பணியில் 2019-2020 ஆண்டில் நியமனம் பெற்ற துணை கலெக்டர்கள் (பயிற்சி) பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

    இதனையடுத்து வெவ்வேறு மாவட்டங்களில் பணியில் உள்ள 16 இந்திய ஆட்சிப் பணி (பயிற்சி) அலுவலர்கள் தமிழ்நாடு தர்ஷன் எனும் பயிற்சியில் கடந்த 13 -ந் தேதி முதல் வரும் 25-ந் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, தமிழ்நாட்டின் கலை, பண்பாடு, வளம், புவியியல் பாகுபாடுகள் குறித்துப் பயிற்சி பெற்று வருகின்றனர்.

    அதன் தொடர்ச்சியாக தஞ்சாவூரில் உலகப் புகழ் வாய்ந்த தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு வந்திருந்து பயிற்சி பெற்றனர்.

    தஞ்சாவூர் கோயில் கலைகள், சோழர் கால நீர் மேலாண்மை, தமிழ்நாட்டின் நீர்வளமும், நீர் மேலாண்மையும் என்பன குறித்த அரிய கருத்துக்களை அறிஞர்கள், பேராசிரியர்களின் உரைவழிக் கேட்டறிந்து பயிற்சி பெற்று தங்களது சந்தேகங்களை கேட்டறிந்து விளக்கம் பெற்றனர்.

    மேலும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தையும், தஞ்சைப் பெரிய கோயிலையும் அலுவ லர்கள் பார்வையிட்டனர்.

    இந்த பயிற்சி வகுப்பில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திருவள்ளு வன் தலைமையில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

    இதில் ஆன்மீக திருக்கயிலை மாமணி இராமநாதன், மற்றும் தஞ்சை சரஸ்வதி மகால் தமிழ்ப் பண்டிதர் மணிமாறன், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொழில் மற்றும் நில அறிவியல் துறைப் பேராசிரியர் நீலகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு காட்சி படத்துடன் விளக்க உரை வழங்கினர்.

    இந்த பயிற்சி முகாமிற்கான கூட்டம் மற்றும் பயிற்சியினை அதன் ஒருங்கிணைப்பாளர், மொழிப்புல முதன்மையர் முனைவர் கவிதா ஏற்பாடு செய்திருந்தார்.

    இதுகுறித்து கடலூர் மாவட்டத்தில் துணை கலெக்டராக (பயிற்சி) பணிபுரியும் அபிநயா கூறும்போது, தமிழ்நாடு தர்ஷன் எனும் பயிற்சி மூலம் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்து தமிழின் பெருமை, தஞ்சை பெரிய கோயிலின் கட்டிட அமைப்பு, வரலாறு, கலைநயம், சிற்பக் கலை ஆகியவற்றை தெரிந்து கொண்டோம்.

    சோழர் கால மன்னர்கள், நாயக்கர் கால மன்னர்கள் மற்றும் மராட்டிய மன்னர்கள் ஆகியோர் தமிழ் உலகிற்கு எந்தளவிற்கு தொண்டு செய்திருக்கி றார்கள் என்பதை அறிந்து கொண்டுள்ளோம்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நீர் மேலாண்மை பற்றியும் குறிப்பாக அதில் ஏரிகளில் குமிழி தூண் பற்றிய விளக்க உரையில் தூர்வாரும்போது சேர் இல்லாமல் சுத்தமான தண்ணீர் எவ்வாறு கொண்டு செல்வது என்பது பற்றி தெரிந்து கொண்டு தாங்கள் பணிபுரியும் இடத்தில் குமிழி தூண் அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட வாய்ப்பாக இருக்கும். குமிழி தூண் முக்கியத்துவத்தையும், நீரின்றி அமையாது உலகு என்ற வார்த்தைக்கு ஏற்ப நீர் மேலாண்மை பற்றியும் தெரிந்து விளக்கம் பெற்றுள்ளோம் என்றார்.

    • தமிழர்களாக பிறந்த நாம் பண்பாடுகளை மறந்து விடக்கூடாது.
    • மாணவ-மாணவிகள் ஆசிரியர் தின கவிதை மற்றும் உரைநிகழ்த்தினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மருதுபாண்டி யர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் மருதுபாண்டியன் தலைமை தாங்கினார். மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் விஜயா முன்னிலை வகித்தார். மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன், துணை முதல்வர் தங்கராஜ் மற்றும் புலத்தலைவர் ஆராய்ச்சி அர்சுனன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    விழாவில் சிறப்பு விருந்தி னராக கடலூர் மற்றும் சென்னை மாவட்ட கலெக்டர் (ஓய்வு) அன்புச்செல்வன் கலந்து கொண்டு பேசுகை யில்:-

    தமிழர்களாக பிறந்த நாம் பண்பாடுகளை மறந்து விடக்கூடாது, என்றும் நல்ல வாழ்வியல் சூழலையும், முன்னேற்றத்தையும் தொடர்ந்து முயற்சி செய்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும் என்றார். முன்னதாக இளநிலை 2-ம் ஆண்டு உயிர் தொழில் நுட்பவியல் மாணவி செல்வரஞ்சனி அனைவ ரையும் வரவேற்றார். முடிவில் கல்வியியல் கல்லூரி 2-ம் ஆண்டு மாணவி ஸ்ரீமதி நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியை தமிழ்த்துறை உதவி பேராசிரியர் உஷா தொகுத்து வழங்கினார். தொடர்ந்து, மாணவ-மாணவிகள் ஆசிரியர் தின கவிதை மற்றும் உரைநிகழ்த்தினர். இதில் பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பா டுகளை பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மேலாளர் கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் நடப்பு மாத இறுதியில் திறக்கப்பட உள்ளது.
    • ராணி மங்கம்மாள், கரிகால் சோழன் மற்றும் ராஜ ராஜா சோழன் உட்பட நாட்டை ஆண்ட முன்னாள் மன்னர்களின் சிலைகளும் இதில் இடம்பெறுகிறது.

    திருச்சி:

    திருச்சியின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை பிரதி பலிக்கும் வகையில் மலை க்கோட்டை அருகே பட்டர்வொர்ட் சாலையில் பாரம்பரிய பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் நடப்பு மாத இறுதியில் திறக்கப்பட உள்ளது.

    ஒரு காலத்தில் குதிரை லாயமாக பயன்படுத்தப்பட்ட 1.27 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டு வரும் இந்த பூங்கா, ஸ்மார்ட் சிட்டிஸ் திட்டத்தின் கீழ் 6 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது. தற்போதும் அந்த தொழுவத்தின் வளைவு இடிக்கப்படாமல் அப்படியே வைக்கப்பட்டுள்ளது. இது பூங்கவின் முக்கிய நுழை வாயிலாக பயன்படுத்தப்படுகிறது.

    பூங்காவின் கட்டுமான பணிகள் கடந்த 2019 டிசம்பரில் தொடங்கப்பட்டது. கொரோனா வைரஸ் மற்றும் சிலைகள் வாங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 2020 டிசம்பரில் முடிக்க திட்டமிடப்பட்ட தேதிக்கு அப்பால் இத்தி ட்டம் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. பூங்காவில் ஓவியங்கள், சிலைகள் மற்றும் நகரின் பழமையான வரலாற்றை அறியும் பலகை கள் காட்சிப்படுத்தப்பட்ட உள்ளது. திருச்சியை ஆண்ட ராணி மங்கம்மாள், கரிகால் சோழன் மற்றும் ராஜ ராஜா சோழன் உட்பட நாட்டை ஆண்ட முன்னாள் மன்னர்களின் சிலைகளும் இதில் இடம்பெறுகிறது.

    கல்லால் செதுக்கப்பட்ட வளைவு நுழைவாயில், குழந்தைகள் விளையாடும் இடம், திறந்த உடற்பயிற்சி கூடம், நடைப்பாதை, பல்வேறு வகைகளைக் கொண்ட பெரிய மூலிகைத் தோட்டம் மருத்துவ தாவரங்கள் மற்றும் ரோஜாக்கள், இயற்கையை ரசித்தல் மற்றும் நீரூற்றுகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை நடத்தக்கூடிய ஒரு ஆம்பிதியேட்டர் ஆகியவை புரதான பூங்காவின் சிறப்பம்சங்களாகும். பூங்காவில் ஓய்வறைகள், குடிநீர் வசதி, இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் இடம், பார்வையாளர்களின் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமராக்களும் இடம் பெறுகிறது.

    இது தொடர்பாக திருச்சி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும் போது, அறிவியல் பூங்காக்களை போன்று இந்த வரலாற்றை சொல்லும் புரதான பூங்கா மாணவர்களின் அறிவுப்பசி போக்க உதவும் என்றார்.

    உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி மற்றும் இந்து அன்னையர் முன்னணி சார்பில் இந்து சமய பண்பாடு வகுப்புகள் நடந்தது.
    உடன்குடி:

    உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி மற்றும் இந்து அன்னையர் முன்னணி ஆகியோர் இணைந்து நடத்தும் 7-ம் ஆண்டு கோடை கால இந்து சமய பண்பாடு வகுப்புகள் உடன்குடி ஒன்றிய கிராமப்புறங்களில் நடந்து வருகிறது. 

    இந்து அன்னையர் முன்னணி ஏற்பாட்டில் நடைபெறும் கோடை கால பயிற்சி முகாமில் ராமாயணம், மகாபாரதம் போன்ற பல்வேறு இந்து சமய புராணங்கள் பற்றிய விளக்கம் கொடுக்கப்படுகிறது.

    மேலும் சுவாமி விவேகானந்தர், சுவாமி திருவள்ளுவர், கர்ணன் ஆகியோர்களின் வாழ்க்கையையும், தியானம், தினசரி இந்து கோவிலுக்கு செல்லும் அவசியம் ஆகியவற்றை சிறுவர்களுக்கு இந்து முன்னணி ஒன்றிய பொதுச் செயலாளர் கேசவன் கிராமம் கிராமமாக சென்று விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்.
    • என்னால் கொண்டு வரப்பட்ட 2017-ம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் செல்லும் என தீர்ப்பளித்து உள்ளது.
    • தமிழ்நாட்டின் கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் கிடைத்த வெற்றி.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து, என்னால் கொண்டு வரப்பட்ட 2017-ம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் செல்லும் என தீர்ப்பளித்து உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி. தமிழ்நாட்டின் கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் கிடைத்த வெற்றி.

    தமிழ்நாடு அரசின் 2017- ம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இடைப்பட்ட காலத்தில் கட்டுப்பாடுகள் என்ற போர்வையில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற விளையாட்டுகளுக்கான குழு உறுப்பினர்கள் மீதும், காளைகளின் உரிமையாளர்கள் மீதும், விளையாட்டு வீரர்கள் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

    ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள காளை உரிமையாளர்களும், ஜல்லிக்கட்டு வீரர்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்பதை ரத்து செய்யவும் தி.மு.க. அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மலேசிய தமிழர்களை பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய நிலை இல்லை.
    • கடந்த 2004-ம் ஆண்டு முதல் கலாச்சார பயணம் மேற்கொண்டு வருகிறோம்.

    சீர்காழி:

    மலேசிய தமிழ்ச் சங்கத்தினர் மற்றும் மலேசியா எழுத்தாளர் சங்கத்தினர் சார்பாக மலேசிய வாழ் தமிழர்கள் 50 க்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பாரம்பரிய மிக்க கலாச்சார சின்னங்களை பார்வையிடுவதற்காக வந்திருந்தனர்.

    அவர்களை சீர்காழி தமிழ்ச் சங்கத்தின் சார்பாக அதன் தலைவர் மார்கோனி தலைமையிலான நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்து வரவேற்றனர்.

    அப்போது பேசிய மலேசிய தமிழ்ச்சங்க நிர்வாகிகள் சீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபம், சட்டநாதர் கோவில் மற்றும் தமிழரின் வாழ்வியல் கலாச்சாரத்தை போற்றும் பூம்புகார் கலைக்கூடம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு தமிழர்களின் தொன்மையான வாழ்வியல் கலாச்சாரத்தை அறிந்து கொள்வதற்காக தாங்கள் வந்துள்ளதாக தெரிவித்தனர்.

    மேலும் இலங்கையில் ஏற்பட்டது போல் மலேசிய தமிழர்களுக்கும் நெருக்கடி ஏற்படலாம் என்ற தகவல் பரவி வருவதை மறுத்த தமிழ் சங்கத்தினர் எக்காலத்திலும் மலேசியத் தமிழர்களுக்கு அந்த நிலை ஏற்படாது எனவும் தெரிவித்தனர்.

    மற்ற நாடுகளில் உள்ள தமிழர்கள் தங்கள் அடையாளத்தை இழந்து தமிழர் என்ற பெயரை மட்டுமே கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

    ஆனால் மலேசிய தமிழர்கள் மட்டுமே தமிழர்களின், பாரம்பரியம் இசை, கல்வி கலாச்சாரம் பண்பாடு, உணவு என அனைத்தையும் இன்றளவும் பாதுகாத்து வருகின்றோம்.

    இன்னும் நூறு ஆண்டுகள் கடந்தாலும் தமிழ் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் நாங்கள் கடைபிடிப்போம் என்ற நிலையை எங்கள் முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளனர்.ஆகவே மலேசிய தமிழர்களைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய நிலை இல்லை.

    அதே நேரம் உலகத் தமிழர்கள் அனைவரும் மலேசிய தமிழர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதனை முன்னெடுக்கும் விதமாகத்தான் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இந்த கலாச்சார பயணத்தை மேற்கொண்டு வருகிறோம் இதன் மூலம் மலேசிய தமிழ் சொந்தங்கள் தமிழ கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றை முழுமையாக தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது.

    எங்களை தங்களது தொப்புள் கொடி உறவாக நினைத்து வரவேற்று மரியாதை செய்த சீர்காழி தமிழ்ச் சங்கத்தினருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.

    அப்போது சீர்காழி தமிழ் சங்கத்தை சேர்ந்த கோவி.நடராஜன, சுப்பு. சொர்ணபால் உடனிருந்தனர்.

    • தமிழ் மீது எங்களுக்கு மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும் உண்டு.
    • ஆன்மிக வழிபாடுகளை மேற்கொள்ள நாங்கள் இந்தியா வந்தோம்.

    கும்பகோணம்:

    .இந்திய கலாசாரம் மீது ஈடுபாடு புதுச்சேரியை பூர்விகமாக கொண்டு ஜப்பான் நாட்டில் வசித்து வருபவர் சுப்பிரமணியன்.

    இவர் ஜப்பான் நாட்டில் தமிழ் மொழி, கலாசாரம் மற்றும் ஆன்மிகத்தை பரப்பும் நோக்கில் ஆன்மிக வகுப்புகள் நடத்தி வருகிறார்.

    இவருடன், ஜப்பானில் குருஜியாக விளங்கும் தக்கா யுக்கா ஜோசி மற்றும் இந்திய கலாசாரம், தமிழ் மொழி மீது ஆர்வம் கொண்ட ஜப்பான் நாட்டை சேர்ந்த 15 பேரை கொண்ட குழுவினர் ஜப்பான் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்தனர். யாகத்தில் பங்கேற்றனர்

    இவர்கள் கும்பகோணம் அருகே கீழகொற்கை கிராமத்தில் உள்ள புஷ்பவல்லி உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நடந்த ருத்ர யாகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த கோவில், அவிட்ட நட்சத்திர பரிகார தலமாக விளங்குகிறது. இதுகுறித்து ஜப்பான் நாட்டை சேர்ந்த தக்கா யுக்கா ஜோசி கூறுகையில், 'பழமையான பாரம்பரியமிக்க இந்திய கலாசாரம் குறிப்பாக தமிழ் கலாசாரம் மற்றும் பண்பாடு, தமிழ் மொழி மீது எங்களுக்கு மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும் உண்டு.

    தமிழ் கலாசாரத்தை கற்றுக் கொள்ளவும், ஆன்மிக வழிபாடுகளை மேற்கொள்ளவும் நாங்கள் இந்தியா வந்தோம்.

    புராதன நகரமான கும்பகோணம் நகரில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு நேரில் சென்று அங்குள்ள சாமிகளை தரிசனம் செய்தோம்.

    இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், பரவசத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    தமிழக கலாசாரத்தையும், பண்பாட்டையும், இறை வழிபாட்டையும் ஜப்பான் நாட்டில் பரப்புவதே எங்களது நோக்கம்' என்றார்.

    ×