என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jaguar"

    • ஒட்டுமொத்த தீம்களுக்கு ஏற்றவாரு இந்த காரின் மையத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு மேனுவல் ஷிஃப்டர் ஆகும்.
    • ரெஸ்டோமோட்டின் தொழில்நுட்ப அம்சங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

    பெரும்பாலும் ரெஸ்டோமோட் செய்யப்பட்ட மாடல்கள் அதிகப்படியான விமர்சனங்களை பெறும் நிலையில், ஜாகுவார் நிறுவனம் இ-டைப் ரெஸ்டோமோட் பலரால் விரும்பப்படுகிறது. இது என்ஸோ ஃபெராரியால் "இதுவரை தயாரிக்கப்பட்ட மிக அழகான கார்" என்று அழைக்கப்படும் மாடலை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், தற்போது வெளியாகி உள்ள புகைப்படங்கள் இன்னும் சிறப்பாக்கியுள்ளன. 1999 மற்றும் 2019-க்கு இடையில் ஜாகுவார் வடிவமைப்புத் துறையின் தலைமையில் இருந்த இயன் கால்லம், ஜாகுவார் எஃப்-டைப், ஆஸ்டன் மார்ட்டின் DB9 மற்றும் பல மாடல்களை தனது காலத்தில் கொண்டு வந்திருந்தார்.

    கால்லம் டிசைன்ஸின் படைப்பான ஜாகுவார் இ-டைப் ரெஸ்டோமோட் இன்னும் ஒரு ஓவியமாகவே உள்ளது. இருப்பினும், 3D ரெண்டர் விரைவில் நிஜ உலகிற்குள் நுழைய வாய்ப்புள்ளது. கால்லமின் "போர்ட்ஃபோலியோ திட்டத்தின்" ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட இந்த டிசைன், கிராம்பியன் எனப்படும் ஆஃப்-ரோடு SUV-யை போன்று காட்சியளிக்கிறது. இந்தத் திட்டங்களின் வரிசையில் விரைவில் அதிக மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

    பலரால் பாராட்டப்படும் கால்லம், இ-வகையின் சில பகுதிகளைத் தொடாமல் விட்டுவிட்டார். புதிய மாடலில், அனைத்து குரோம் கூறுகளையும் நீக்குவது, பம்பர் மற்றும் கதவு கைப்பிடிகள் மாற்றப்பட்டு, ஃப்ளஷ் செய்யப்பட்டுள்ளதை கவனிக்க முடியும். ஹெட்லைட்டின் வடிவம் அதிக மாற்றங்கள் இன்றி முந்தைய வடிவமத்தையே தக்க வைத்துக் கொள்கிறது. ஆனால் LED விளக்குடன் பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பின்புற விளக்குகள் இப்போது சற்று குறைவாக உள்ளன. மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றங்களின் பட்டியலில் முன் இருக்கையை எடுத்துக்கொள்வது பெரிய ஏரோ-டிஸ்க் வடிவமைப்புடன் கூடிய சக்கரங்கள் ஆகும்.

     


    உள்புறம், ஜாகுவார் இ-டைப் ரெஸ்டோமோட் கான்செப்ட் அதன் ரெட்ரோ வசீகரத்துடன் கூடிய போட்டியை கொண்டுவருகிறது. இது ஒரு அனலாக் டயலுடன் கூடிய மர ஸ்டீயரிங் வீலைக் கொண்டுள்ளது. இது டாஷ்போர்டின் மையத்தின் இடத்தைப் பிடித்து, காரின் நவீன தொழில்நுட்ப செயல்பாட்டிற்கும் இடையே பாலத்தை உருவாக்குகிறது. ஒட்டுமொத்த தீம்களுக்கு ஏற்றவாரு இந்த காரின் மையத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு மேனுவல் ஷிஃப்டர் ஆகும்.

    ரெஸ்டோமோட்டின் தொழில்நுட்ப அம்சங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், பின்புறத்தில் எக்சாஸ்ட் பைப்கள் இருப்பது இது ஒரு எலெக்ட்ரிக் வாகனம் அல்ல என்பதைக் குறிக்கிறது. எஃப்-வகைக்கு ஜாகுவார் பயன்படுத்தும் சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட 5.0-லிட்டர் V8 எஞ்சினை இது கொண்டிருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • இந்தியாவில் இந்த காரின் வெளியீடு மும்பையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
    • வெறும் 15 நிமிடங்களில் 321 கிமீ வரை அதிவேக சார்ஜிங் திறன்களை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    கார் பிரியர்களுக்கு எவ்வளவு தான் புதுவித மாடலில் கார்கள் சந்தைக்கு வந்தாலும், ஜாகுவார் மீதான ஈர்ப்பு அளவிடமுடியாதவை. ஜாகுவார் வைத்திருந்தால் பெருமிதம் என கருதுபவர்களும் உள்ளனர். இதனிடையே, கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகமான ஜாகுவார் டைப் 00 EV கான்செப்ட் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இதனை தொடர்ந்து இந்த கார் எப்போது சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில், ஜாகுவார் டைப் 00 EV கான்செப்ட் அடுத்த மாதம் 14-ந்தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. தற்போது மொனாக்கோவில் உள்ள இந்த மாடல் இந்தியா வருவதற்கு முன்பு டோக்கியோவில் சந்தைப்படுத்தப்பட உள்ளது. இந்தியாவில் இந்த காரின் வெளியீடு மும்பையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

    ஜாகுவார் டைப் 00 EV கான்செப்ட் என்றால் என்ன?

    ஜாகுவார் டைப் 00 முற்றிலும் புதிய JEA (ஜாகுவார் எலக்ட்ரிக் ஆர்கிடெக்ச்சர்) அமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இது ஒரு பிரத்யேக எலெக்ட்ரிக் வாகனமாகும். '00' என்பது பூஜ்ஜிய உமிழ்வு மற்றும் பிரிட்டிஷ் வாகன உற்பத்தியாளருக்கு முழுமையான மாற்றத்தைக் குறிக்கிறது. மேலும், இந்த ஆண்டு இறுதியில் ஒரு புதிய உற்பத்திக்கு தயார் நிலையில் எலக்ட்ரிக் கார் வரும் என்று எதிர்பார்க்கலாம். டைப் 00 உடன், ஜாகுவார் முழு எலக்ட்ரிக் பாதையையும் எடுக்கிறது.

    இந்த பிராண்ட் ஏற்கனவே இங்கிலாந்தில் நான்கு கதவுகள் கொண்ட சலூனை சோதித்து வருகிறது. வரவிருக்கும் 4-கதவு GT, டைப் 00 EV கான்செப்ட்டிலிருந்து வடிவமைப்பு உத்வேகங்களை எடுக்கும். உண்மையில், முன்மாதிரியும் ஒரு சூப்பர்-லாங் பானட், பிளாட்-டெக் பூட் கவர், டேப்பர்டு ரூஃப் லைன் மற்றும் பெரிய விளிம்புகளைப் பெறுகிறது. இது 770 கிமீ WLTP வரம்பை வழங்கும் என்றும், வெறும் 15 நிமிடங்களில் 321 கிமீ வரை அதிவேக சார்ஜிங் திறன்களை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    வரவிருக்கும் 4-கதவு GT இந்த ஆண்டு இறுதியில் சந்தைக்கு வரும். இந்த கார் முதலில் பிராண்ட்-இன் வருகையை குறிக்கும் வகையில் அமைகிறது. இதனால், வரிசையில் முதலிடத்தில் அமர்ந்திருக்கும். பின்னர், சிறிய, சற்றே குறைந்த விலை எலக்ட்ரிக் கார்கள் அறிமுகப்படுத்தப்படும். அடுத்த ஆண்டு வாக்கில் இந்த மாடல்கள் இந்தியாவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    • வீடியோ WOKE கலாச்சாரத்தை ஊக்குவிப்பதால் மஸ்க் கொதிப்படைந்துள்ளார்.
    • உங்கள் மார்க்கெட்டிங் டீமை வேலையில் இருந்து முதலில் தூக்குங்கள் என்று தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது ஏகபோக ஆதரவை பெற்ற டொனல்டு டிரம்ப் வெற்றி பெற்றதில் இருந்தே எலான் மஸ்க் பயங்கர குஷியில் உள்ளார். அவருக்கு டிரம்ப் அமைச்சரவையில் Department of Government Efficiency or DOGE துறை பொறுப்பு விவேக் ராமசாமியுடன் பகிர்தளிக்கப்பட்டுள்ளது.

    தனக்கு சொந்தமான எக்ஸ் தளத்தில் படு ஆக்டிவாக போஸ்டர்களை போட்டு வரும் எலான் மஸ்க் தற்போது ஜாகுவார் கார் நிறுவனத்தை வம்புக்கு இழுத்துள்ளார். சுமார் 101 ஆண்டுகளாக கார் தயாரிப்பு தொழிலில் இருக்கும் ஜாகுவார் நிறுவனம் தனக்கென ஒரு பிராண்ட் வேல்யூவை உருவாக்கி வைத்துள்ளது. இந்நிலையில் தனது நிறுவன லோகவை புதுப்பிக்க ஜாகுவார் முடிவெடுத்துள்ளது.

    ஜாகுவார் பாய்வது போன்ற வடிவமைப்பை கொண்ட அந்நிறுவனத்தின் லோகோ பிரசித்தமாக இருந்துவரும் நிலையில் அதை புதுப்பிதுள்ளதாக வீடியோ வெளியிட்டு அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த வீடியோ பன்மைத்துவம் மற்றும் பாலின சமத்துவம், சமூக முன்முடிவுகளை உடைக்கும் தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றை அடியொற்றி அமெரிக்காவில் உருவான WOKE culture கலாச்சார தோரணையில் உள்ளது பழமைவாதியான எலான் மஸ்க்கை கொதிப்படைய செய்து இது குறித்து பேச வைத்திருக்கிறது.

    ஜாகுவாரின் முடிவு குறித்து பேசியுள்ள அவர், நீங்கள் கார்களை தான் தயாரிக்கிறீர்களா, நீங்கள் உண்மையில் விற்பது கார்களை தானா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அவர்கள் கார்களை தயாரிக்க வில்லை, தவறுகளை தயாரிக்கிறார்கள் என்றும், உங்கள் மார்க்கெட்டிங் டீமை வேலையில் இருந்து முதலில் தூக்குங்கள் என்று தெரிவித்துள்ளார்.

    பழமைவாதியான எலான் மஸ்க் தன்னை ஒத்த பழமைவாத சிந்தனை உடையதாலேயே டிரம்புக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வருகிறார் என்பது ஜனநாயகவாதிகளின் வாதம். அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சியில் மக்கள் மீதான அரசின் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கும் என்பதே லிபரல்களின் அச்சமாக உள்ளது.

    முன்னதாக எலான் மஸ்க்கின் மகள் விவியன் வில்சன் மூன்றாம் பாலினத்தைச் சேர்த்தவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இதனால் உயிரோடிருக்கும் தனது மகன் சேவியர் இறந்துவிட்டாள் என்று மஸ்க் போட்டுவெளியில் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. 

     

    • ஜாகுவார் நிறுவனம் சில தினங்களுக்கு முன் தனது F பேஸ் SVR எடிஷன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
    • இது ஜாகுவார் நிறுவனத்தின் முதல் லிமிடெட் எடிஷன் மாடல் ஆகும்.

    ஜாகுவார் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த F பேஸ் SVR எடிஷன் 1998 மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. இது ஜாகுவார் ஹை பெர்பார்மன்ஸ் எஸ்.யு.வி.-யின் முதல் லிமிடெட் எடிஷன் மாடல் ஆகும். இந்த மாடலை எஸ்.வி. பிஸ்போக் வல்லுனர்கள் உருவாக்கினர் மொத்தத்தில் 394 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளன.

    இவை அனைத்தும் ஜாகுவார் ரேசிங் பாரம்பரியத்தை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றன. 1998 ஆம் ஆண்டு சர்வதேச ஸ்போர்ட்ஸ் ப்ரோடோடைப் சாம்பியன்ஷிப் பட்டத்தை XJR-9 மாடல் வென்றதற்கு பெருமை சேர்க்கும் வகையில், புதிய லிமிடெட் எடிஷன் மாடல் இவ்வாறு அழைக்கப்படுகிறது.


    லிமிடெட் எடிஷன் மாடலில் விசேஷமான பார்முலேட் செய்யப்பட்ட மிட்நைட் அம்திஸ்ட் கிளாஸ் பெயிண்ட் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இதில் ஆப்ஷனல் ஷேம்பெயின் கோல்டு சாட்டின் ஃபோர்ஜ்டு அலாய் வீல்கள் உள்ளன.மேலும் சன்செட் கோல்டு சாட்டின் எக்ஸ்டீரியர், இண்டீரியர் டீடெயிலிங் 'One of 394' எஸ்.வி. பிஸ்போக் கமிஷனிங் கிராபிக் இடம்பெற்று இருக்கிறது.

    மேலும் சன்செட் கோல்டு சாட்டின் ஜாகுவார் லீப்பர், டெயில்கேட்டில் ஸ்க்ரிப்ட், முன்புற விங் பேனல் மீது லேசர் இட்ச் செய்யப்பட்ட எடிஷன் 1998 லோகோ இடம்பெற்று இருக்கிறது. இந்த மாடலில் ஜாகுவார் நிறுவனத்தின் 5.0 லிட்டர் வி8 சூப்பர் சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த கார் மணிக்கு 100 கி.மீ. வேகத்தை நான்கு நொடிகளில் எட்டி விடும்.

    ஜாகுவார் நிறுவனத்தின் XJ50 இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய XJ50 அந்நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் XJ L மாடலைத் தழுவி உருவாகியுள்ளது. #Jaguar



    ஜாகுவார் நிறுவனத்தின் XJ50 இந்தியாவில் வெளியானது. புது ஸ்பெஷல் எடிஷன் கார் ஜாகுவார் நிறுவனத்தின் XJ L மாடலைத் தழுவி உருவாகி இருக்கிறது. ஜாகுவார் XJ50 முன்னதாக நடைபெற்ற பீஜிங் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ஜாகுவார் XJ50 விலை ரூ.1.11 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புது ஜாகுவார் XJ50 மாடல் பல்வேறு புது அம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. ஜாகுவார் தனது ஆடம்பர செடான் மாடலின் ஐம்பது ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் புது காரினை அறிமுகம் செய்துள்ளது. 

    அந்த வகையில் புது காரில் ஆட்டோபயோகிராஃபி-ஸ்டைல் முன்புற மற்றும் பின்புற பம்ப்பர்கள், 19-இன்ச் அலாய் வீல்கள், இலுமினேட் செய்யப்பட்ட டிரெட் பிளேட், பிரைட் மெட்டல் பெடல்கள், டைமன்ட்-குவில்ட் சீட்கள், அனோடைஸ் செய்யப்பட்ட கியர்ஷிஃப்ட் பேடில்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.



    இத்துடன் க்ரோம் ரேடியேட்டர் கிரில் காரின் பக்கவாட்டு மற்றும் பின்புற பகுதிகளில் ஸ்பெஷல் பேட்ஜிங் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர ஸ்பெஷல் எடிஷன் மாடலை சுற்றி XJ50 பேட்ஜிங் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு சீட் ஹெட்ரெஸ்ட்கள், சென்ட்ரல் ஆரம்-ரெஸ்ட்கள் மற்றும் இலுமினேட் செய்யப்பட்ட டிரெட்பிளேட் உள்ளிட்டவற்றில் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

    ஜாகுவார் XJ50 ஸ்பெஷல் எடிஷன் கார்: ஃபுஜி வைட், சேனிடோரினி பிளாக், லியோர் புளு மற்றும் ரோசெலோ ரெட்ஸ் என நான்கு புதிய நிறங்களில் கிடைக்கிறது. ஜாகுவார் XJ50 மாடலில் 3.0-லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 

    இந்த என்ஜின் 300 பி.ஹெச்.பி. பவர், 700 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. 3.0 லிட்டர் டீசல் என்ஜின் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. #Jaguar
    ஜெய்ப்பூரை சேர்ந்த வியாபார தனது ஜாகுவார் காருக்கென ஃபேன்ஸி நம்பரை பெற பல லட்சங்களை செலவிட்டிருக்கிறார்.
    ஜெய்ப்பூர்:

    ஜெய்ப்பூரை சேர்ந்த வியாபாரியான ராகுல் தனேஜா தான் விரும்பிய ஃபேன்ஸி நம்பரை பெற ரூ.16 லட்சம் கொடுத்திருக்கிறார்.

    வியாபாரியான இவர் தனது புத்தம் புதிய ஜாகுவார் XJ L காருக்கான ஃபேன்ஸி நம்பரை வாங்க ரூ.16 லட்சம் செலவிட்டிருக்கிறார். இந்தியாவில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள ஜாகுவார் காருக்கான ஃபேன்ஸி நம்பரை வாங்க இவர் 1.5 மாதங்கள் காத்திருந்ததாக தெரிவித்தார்.

    மார்ச் 25-ம் தேதி புதிய ஜாகுவார் காரை வாங்கிய ராகுல் ராஜஸ்தானில் ஃபேன்ஸி நம்பருக்காக அதிகம் செலவிட்டவர்களில் முதலிடத்தில் இருக்கிறார். 37 வயதான ராகுல் தனேஜா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யும் வியாபாரம் செய்து வருகிறார். புதிய ஜாகுவார் காருக்கு 1 என்ற எண் பெற முடிவு செய்த ராகுல் தான் எல்லாவற்றிலும் முதலிடத்தில் இருக்க வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தார்.

    1996-ம் ஆண்டு ராகுல் வாங்கிய முதல் ஸ்கூட்டர் ‘RJ 14 23M 2323' என்ற பதிவு எண் கொண்டிருந்தது. அன்று முதல் இன்று வரை இவர் பயன்படுத்தும் அனைத்து வாகனங்களின் எண் 1 ஆக இருக்க வேண்டும் என முடிவு செய்தார். "நான் செய்யும் அனைத்திலும் முதலிடத்தில் இருக்க விரும்புகிறேன். எனது நிறுவனமும் இந்தியாவில் முதலிடத்திற்கு கொண்டு வருவேன்." என அவர் தெரிவித்தார்.



    புத்தம் புதிய ஜாகுவார் தவிர தனேஜாவிடம் பிஎம்டபுள்யூ 5-சீரிஸ் கார் ஒன்றும் இருந்தது. இந்த காரின் எண் RJ 14 CP 0001 பதிவு எண் கொண்டுள்ளது. இதற்கும் தனேஜா ரூ.10.31 லட்சம் செலவிட்டிருக்கிறார். இதன்பின் தனேஜா பிஎம்டபுள்யூ 7-சீரிஸ் மாடலுக்கு அப்டேட் செய்து கொண்டு பழைய நம்பரை பெற்று கொண்டார். 

    இத்துடன் RJ 20 CB 0001 என்ற பதிவு கொண்ட ஒற்றை காரணத்திற்காக ஸ்கோடா லாரா மாடலை இவர் வாங்கியதாக தெரிவித்துள்ளார். தனது 18 வயது வரை பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வந்த நிலையில், பின் மாடலிங் செய்ய துவங்கி அத்துறையில் வெற்றி பெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டிருக்கிறார். 

    இது குறித்து அவர் கூறும் போது "என் வாழ்க்கையில் நான் பல கஷ்டங்களை சந்தித்துள்ளேன் - இன்று என்னிடம் பணம் இருக்கிறது, இதை கொண்டாட விரும்புகிறேன்." என தெரிவித்துள்ளார்.
    ×