என் மலர்
நீங்கள் தேடியது "gender equality"
- வீடியோ WOKE கலாச்சாரத்தை ஊக்குவிப்பதால் மஸ்க் கொதிப்படைந்துள்ளார்.
- உங்கள் மார்க்கெட்டிங் டீமை வேலையில் இருந்து முதலில் தூக்குங்கள் என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது ஏகபோக ஆதரவை பெற்ற டொனல்டு டிரம்ப் வெற்றி பெற்றதில் இருந்தே எலான் மஸ்க் பயங்கர குஷியில் உள்ளார். அவருக்கு டிரம்ப் அமைச்சரவையில் Department of Government Efficiency or DOGE துறை பொறுப்பு விவேக் ராமசாமியுடன் பகிர்தளிக்கப்பட்டுள்ளது.
தனக்கு சொந்தமான எக்ஸ் தளத்தில் படு ஆக்டிவாக போஸ்டர்களை போட்டு வரும் எலான் மஸ்க் தற்போது ஜாகுவார் கார் நிறுவனத்தை வம்புக்கு இழுத்துள்ளார். சுமார் 101 ஆண்டுகளாக கார் தயாரிப்பு தொழிலில் இருக்கும் ஜாகுவார் நிறுவனம் தனக்கென ஒரு பிராண்ட் வேல்யூவை உருவாக்கி வைத்துள்ளது. இந்நிலையில் தனது நிறுவன லோகவை புதுப்பிக்க ஜாகுவார் முடிவெடுத்துள்ளது.
A new era for @Jaguar begins, with the reveal of a completely reimagined brand, new logo & monograms. How's it??Jaguar to reveal their new Vision concept at Miami Art Week on 2 Dec 2024, stay tuned! pic.twitter.com/y3MVlWl0sM
— Hani Musthafa (@hanmust) November 20, 2024
ஜாகுவார் பாய்வது போன்ற வடிவமைப்பை கொண்ட அந்நிறுவனத்தின் லோகோ பிரசித்தமாக இருந்துவரும் நிலையில் அதை புதுப்பிதுள்ளதாக வீடியோ வெளியிட்டு அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த வீடியோ பன்மைத்துவம் மற்றும் பாலின சமத்துவம், சமூக முன்முடிவுகளை உடைக்கும் தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றை அடியொற்றி அமெரிக்காவில் உருவான WOKE culture கலாச்சார தோரணையில் உள்ளது பழமைவாதியான எலான் மஸ்க்கை கொதிப்படைய செய்து இது குறித்து பேச வைத்திருக்கிறது.
Car manufacturer Jaguar has ditched its iconic cat logo for this modern BS filled with woke nonsense to 'launch' it.Do they even know their own customer?This ain't it. pic.twitter.com/clBoo33oec
— Darren Grimes (@darrengrimes_) November 19, 2024
ஜாகுவாரின் முடிவு குறித்து பேசியுள்ள அவர், நீங்கள் கார்களை தான் தயாரிக்கிறீர்களா, நீங்கள் உண்மையில் விற்பது கார்களை தானா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அவர்கள் கார்களை தயாரிக்க வில்லை, தவறுகளை தயாரிக்கிறார்கள் என்றும், உங்கள் மார்க்கெட்டிங் டீமை வேலையில் இருந்து முதலில் தூக்குங்கள் என்று தெரிவித்துள்ளார்.
பழமைவாதியான எலான் மஸ்க் தன்னை ஒத்த பழமைவாத சிந்தனை உடையதாலேயே டிரம்புக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வருகிறார் என்பது ஜனநாயகவாதிகளின் வாதம். அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சியில் மக்கள் மீதான அரசின் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கும் என்பதே லிபரல்களின் அச்சமாக உள்ளது.
முன்னதாக எலான் மஸ்க்கின் மகள் விவியன் வில்சன் மூன்றாம் பாலினத்தைச் சேர்த்தவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இதனால் உயிரோடிருக்கும் தனது மகன் சேவியர் இறந்துவிட்டாள் என்று மஸ்க் போட்டுவெளியில் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

- பொதுவெளியில் ஆண்கள் மேலாடையின்றி செல்லும் போது பெண்களாலும் அப்படி செல்ல முடியும்.
- நான் என்ன செய்கிறேன் என்பதை பெரும்பாலான மக்கள் கவனிக்க மாட்டார்கள்.
அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண்ணான எய்லா ஆடம்ஸ் ஆணும் பெண்ணும் சமம் என்ற கொள்கையை முன்னெடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார். இந்த போராட்டத்தில் மூலம் இந்த பெண் உலக அளவில் டிரெண்டாகி உள்ளார்.
அப்படி என்ன போராட்டம் என்றால், ஆண் பொதுவெளியில் மேலாடையின்றி செல்வது போல, பெண்களும் மேலாடையின்றி செல்லலாம் என்ற வகையில் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். சொல்வது மட்டுமின்றி அவரே மேலாடையின்றி பல இடங்களுக்கு சென்று, அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த விழிப்புணர்வு தொடர்பாக எய்லா ஆடம்ஸ் கூறியதாவது:-
பொதுவெளியில் ஆண்கள் மேலாடையின்றி எந்த பயமும் தயக்கமும் இல்லாமல் செல்லும் போது பெண்களாலும் அப்படி செல்ல முடியும். நிர்வாணமாக இருப்பதைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களை கொண்ட யாரையும் நான் புரிந்து கொள்ள முடியாது.
உனக்கு பிடிக்கவில்லை என்றால் பார்க்காதே. நான் என்ன செய்கிறேன் என்பதை பெரும்பாலான மக்கள் கவனிக்க மாட்டார்கள். ஒருவேளை நான் மாட்டிகொண்டால் அவர்கள் புன்னகைத்து கடந்து செல்வார்கள். இல்லையெனில் வெற்றி குறியை (thumbsup) காண்பிப்பார்கள். சிலர் மனம் விட்டு சிரித்து கடப்பார்கள்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக, நியூயார்க் நகரில் பெண்கள் மேலாடையின்றி செல்வது சட்டப்பூர்வமாக உள்ளது. பல பெண்கள் பாலின சமத்துவத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
ஆடையை சட்டென கழற்றுவது (ஃபிளாஸ்) பொழுதுபோக்கு என்று நான் நினைக்கிறேன். ஆனால் இது மேலாடையின்மையை நடைமுறைக்கு கொண்டு வரும் ஒரு வழியாகும் என கூறினார்.
- மார்ச் 8, பல நாடுகளில் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது
- ஐ.நா. பொதுச்சபை மார்ச் 8 தேதியை சர்வதேச மகளிர் தினமாக பிரகடனப்படுத்தியது
1914 மார்ச் 8 அன்று முதல்முதலாக ஜெர்மனியில் சர்வதேச பெண்கள் தினம் என கொண்டாடப்பட்டது. அந்த சந்திப்பில், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் வாக்குரிமை பெற பல வருடங்களாக நடைபெற்ற போராட்டங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து நடந்த கலந்துரையாடல்களில், மார்ச் 8 எனும் தேதியை சர்வதேச மகளிர் தினமாக கொண்டாட முடிவெடுக்கப்பட்டது.

1975ல் ஐக்கிய நாடுகளின் (UN) சபை, மார்ச் 8 அன்று சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடியது.
1977ல் ஐ.நா. பொதுச்சபை (UN General Assembly) தனது உறுப்பினர் நாடுகளுக்கு மார்ச் 8 தேதியை அதிகாரபூர்வமாக சர்வதேச மகளிர் தினமாக பிரகடனப்படுத்தியது.
2024 சர்வதேச மகளிர் தின கருப்பொருளாக, "பெண் இனத்தில் முதலீடு செய்யுங்கள் – வளர்ச்சியை துரிதப்படுத்துங்கள்" (Invest In Women: Accelerate Progress) என்றும் பிரச்சார கருப்பொருள் (campaign theme) "இணைப்பதை ஊக்குவியுங்கள்" (Inspire Inclusion) என்றும் ஐ.நா. அறிவித்தது.
பெண்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெறாமல் இருப்பதையும், தன்னிறைவு காண்பதில் உள்ள சிக்கல்களையும், சவால்களையும் களையும் விதமாக இந்த கருப்பொருள் உருவாக்கப்பட்டது.
அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் பங்கேற்பதையும், முடிவுகளை எடுப்பதில் சமமான வாய்ப்பளிப்பதை ஊக்குவிப்பதன் மூலமும், ஒரு வலுவான சமுதாய கட்டமைப்பை நாம் உருவாக்க முடியும்.
சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சார்ந்த அனைத்து அம்சங்களிலும் பெண்களின் சாதனைகள் இந்நாளில் பிரசாரம் செய்யப்படும்.

சர்வதேச அளவில் அரசியலில் சிரிமாவோ பண்டாரநாயகே (இலங்கை), இந்திரா காந்தி (இந்தியா), பெனாசிர் பூட்டோ (பாகிஸ்தான்), ஷேக் ஹசினா (வங்காளம் தேசம்), மார்கரெட் தாட்சர் (இங்கிலாந்து) போன்ற பெரும் தலைவர்கள் பல போராட்டங்களை கடந்து வெற்றி பெற்றனர்.
முதல்முதலாக ரசாயன துறையில் மேரி கியூரி, உலக புகழ் பெற்ற நோபல் பரிசு (Nobel Prize) வென்றதற்கு பிறகு 60க்கும் மேற்பட்ட பெண்கள் நோபல் பரிசு வென்றுள்ளனர்.

முழுக்க முழுக்க அறிவு சார்ந்த போட்டி என கருதப்படும் சதுரங்க (Chess) விளையாட்டில் நோனா கப்ரின்டாஷ்வில்லி எனும் ஜார்ஜியா நாட்டை சேர்ந்தவர் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றதை தொடர்ந்து 41 பெண்கள் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றுள்ளனர்.
மருத்துவ துறையில் 1960ல் டாக்டர் நினா ப்ரான்வால்ட் முதல் முதலாக இருதய அறுவை சிகிச்சை செய்து புகழ் பெற்றார். அவரை தொடர்ந்து தற்போது வரை பல பெண்கள் மருத்துவ துறையின் பல பிரிவுகளிலும் வியத்தகு சாதனை புரிந்து வருகின்றனர்.
ஆண்களுக்கு எந்த வகையிலும் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என நாளுக்கு நாள் பெண்கள் நிரூபித்து வரும் நிலையில், சர்வதேச மகளிர் தினமான இன்று, பெண்களின் ஆற்றலை மதிக்கும் சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.
- நாடு முழுவதும் பாலின பேதங்கள் இன்றி பெண் குழந்தைகள் வளர்க்கப்படுகின்றனர்
- பெண் குழந்தைகள்தான் மாற்றத்தை உருவாக்குபவர்கள் என்றார் பிரதமர் மோடி
நாடு முழுவதும் சில தசாப்தங்களுக்கு முன் வரை குழந்தை பிறந்ததும், ஆணா அல்லது பெண்ணா என கேட்பதும், ஆண் குழந்தை என்றால் உயர்வாக கருதுவதும் ஒரு வழக்கமாக இருந்து வந்தது.
இன்றைய காலகட்டத்தில் அந்த நிலைமை பெருமளவு மாறி விட்டது.
இன்று பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளுக்கு நிகராக, கல்வி, விளையாட்டு, கலைகள், கணிதம், விஞ்ஞானம், நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறு வயதிலிருந்தே தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர்.
மூட நம்பிக்கைகளால் பெண் குழந்தைகளுக்கு பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்த நிலைமை தற்காலத்தில் அறவே மாறி, பாலின பேதம் இல்லாமல் கிராமங்களிலும், நகரங்களிலும் பெண் குழந்தைகள் வளர்க்கப்படுகின்றனர்.
2008ல் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை எடுத்த முயற்சியால், ஆண்டுதோறும் ஜனவரி 24 அன்று, "தேசிய பெண் குழந்தைகள் தினம்" (National Girl Child Day) கொண்டாடப்படுகிறது.

பாலின சமத்துவம், கல்வி, உடலாரோக்கியம், பணி மற்றும் ஊதியம் உள்ளிட்ட அம்சங்களில் சமநிலையை ஊக்குவிக்கவும், பெண் குழந்தைகள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் பெண்கள் மேம்பாட்டிற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் திட்டங்கள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் "பெண் குழந்தைகள் தினம்" கொண்டாடப்படுகிறது.

குழந்தைகள் திருமணம், பாலின பாகுபாடு மற்றும் பெண்களுக்கான வன்முறை ஆகியவற்றை சமூகத்திலிருந்து களைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக இந்த நாளை நாடு முழுவதும் கொண்டாடுகின்றனர்.

இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, "பெண் குழந்தைகள்தான் மாற்றத்தை உருவாக்குபவர்கள்.பெண் குழந்தைகள் கல்வி கற்று, வளர்ந்து சமூகத்தில் கண்ணியத்துடன் வாழ தேவையான அனைத்து முயற்சிகளையும் தனது அரசு செய்து வருகிறது" என குறிப்பிட்டார்.
On National Girl Child Day, we salute the indomitable spirit and accomplishments of the Girl Child. We also recognise the rich potential of every girl child in all sectors. They are change-makers who make our nation and society better. Over the last decade, our government has…
— Narendra Modi (@narendramodi) January 24, 2024
2015ல் பிரதமர் நரேந்திர மோடி இதே தினத்தன்று, "பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள்; பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள்" ("பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ") என முன்னெடுத்த பிரசார திட்டங்கள் குறித்தும் இன்று விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்படுகிறது.
- ராசாத்தி தனது தாயார் வீட்டுக்கு கோபித்துக் கொண்டு சென்றார்.
- அசோக் உள்பட 6 பேர் வீட்டுக்குள் நுழைந்து கனகவள்ளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
கடலூர்:
கடலூர் அருகே குறிஞ்சிப்பாடி கல்குணம் சேர்ந்தவர் அசோக். இவரது மனைவி ராசாத்தி. இவர்களுக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக ராசாத்தி தனது தாயார் வீட்டுக்கு கோபித்துக் கொண்டு சென்றார். இந்த நிலையில் கணவன், மனைவிக்குள் குடும்பத்தகராறு ஏற்படுவதற்கு அதே பகுதியை சேர்ந்த கனகவல்லி என்பவர் தான் காரணம் என எண்ணிக்கொண்டு அசோக் உள்பட 6 பேர் வீட்டுக்குள் நுழைந்து கனகவள்ளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து மானபங்கப்படுத்தி வீட்டில் இருந்த டிஷ் ஆண்டனாவை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த கனகவள்ளி கடலூர் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் கனகவள்ளி கொடுத்த புகாரின் பேரில் அசோக், அன்பழகன் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10-50 வயது வரையுள்ள பெண்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியும், அனைத்து வயது பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்கவேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டு நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்று உள்ளது.
இதுபற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பதிவில், “சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு முற்போக்கான மற்றும் பரவலாக வரவேற்பை பெறக்கூடியது ஆகும். இதை காங்கிரஸ் முழு மனதுடன் வரவேற்கிறது. பாலினத்தின் அடிப்படையிலோ அல்லது வேறுவிதமாகவோ பெண்களுக்கு பாகுபாடு காட்டக் கூடாது என்பது தீர்ப்பில் மிகத் தெளிவாக கூறப்பட்டு இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

“சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு பெண்களின் உரிமைகள் மீதான புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. பெண்களை மதச்சம்பிரதாயத்தின் கீழ் கட்டுப்படுத்தக் கூடாது என்பதையும் வெளிப்படுத்துகிறது. ஒரு சமுதாயம் பரிணாம வளர்ச்சி காணும்போது அதற்கேற்ப மத நம்பிக்கைகளும், சட்டங்களும் அதே போன்ற வளர்ச்சியை காண வேண்டும்” என்றும் அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். #SupremeCourt #Congress #SabarimalaVerdict #RandeepSurjewala