கடலூர் அருகே வீடு புகுந்து பொருட்களை சேதப்படுத்தி பெண் மானபங்கம்: 6 பேர் மீது வழக்கு

ராசாத்தி தனது தாயார் வீட்டுக்கு கோபித்துக் கொண்டு சென்றார். அசோக் உள்பட 6 பேர் வீட்டுக்குள் நுழைந்து கனகவள்ளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
கடலூர் அருகே  வீடு புகுந்து  பொருட்களை சேதப்படுத்தி பெண் மானபங்கம்: 6 பேர் மீது வழக்கு
Published on

கடலூர்:

கடலூர் அருகே குறிஞ்சிப்பாடி கல்குணம் சேர்ந்தவர் அசோக். இவரது மனைவி ராசாத்தி‌. இவர்களுக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்டது‌. இதன் காரணமாக ராசாத்தி தனது தாயார் வீட்டுக்கு கோபித்துக் கொண்டு சென்றார். இந்த நிலையில் கணவன், மனைவிக்குள் குடும்பத்தகராறு ஏற்படுவதற்கு அதே பகுதியை சேர்ந்த கனகவல்லி என்பவர் தான் காரணம் என எண்ணிக்கொண்டு அசோக் உள்பட 6 பேர் வீட்டுக்குள் நுழைந்து கனகவள்ளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து மானபங்கப்படுத்தி வீட்டில் இருந்த டிஷ் ஆண்டனாவை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது‌.

இதில் காயமடைந்த கனகவள்ளி கடலூர் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் கனகவள்ளி கொடுத்த புகாரின் பேரில் அசோக், அன்பழகன் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com