என் மலர்

  நீங்கள் தேடியது "Randeep Surjewala"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஓட்டு எண்ணிக்கை நாளான மே 23-ந் தேதி மாலை முதல் லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை விலையை உயர்த்த ஏற்பாடு நடந்து வருவதாக ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். #PMModi #HikeFuelPrice #Congress #RandeepSurjewala
  புதுடெல்லி:

  காங்கிரஸ் கட்சியின் ஊடக பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

  கச்சா எண்ணெய் விலை, கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்து விட்டது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்து விட்டது. ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது.

  எல்லாவற்றுக்கும் துணிச்சலாக பேசும் பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன்? மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவதற்காக, ஓட்டு எண்ணிக்கை நாளான மே 23-ந் தேதிவரை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டாம் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

  அதே சமயத்தில், மே 23-ந் தேதி மாலையில், லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை விலையை உயர்த்த ஏற்பாடு நடந்து வருகிறது. ஆனால், மக்களை ஏமாற்ற முடியாது.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #PMModi #HikeFuelPrice #Congress #RandeepSurjewala 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, பிரதமர் மோடி ஆவண படப்பிடிப்பில் இருந்ததாக காங்கிரஸ் கட்சி புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. #Congress #RandeepSurjewala #PulwamaAttack
  புதுடெல்லி:

  காஷ்மீரில் புலவாமா மாவட்டத்தில் கடந்த 14-ந்தேதி, துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்க வைத்தனர்.

  இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டது, நாடு முழுவதும் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியது.

  இந்த தாக்குதல் நடந்தபோது பிரதமர் மோடி என்ன செய்து கொண்டிருந்தார் என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:-

  காஷ்மீரில் புலவாமா தாக்குதல் நடைபெற்றபோது நேரம் பிற்பகல் 3.10 மணி. இதையொட்டி காங்கிரஸ் கட்சி 5.15 மணிக்கு தனது கருத்தை தெரிவித்தது. இதுபற்றி பிரதமருக்கும் தெரியும்.

  தன்னை தேசியவாதி என்று கூறிக்கொள்கிற பிரதமர், டிஸ்கவரி சேனலில் சுய விளம்பரம் செய்துகொள்வதற்காக ராம்நகர் கார்பெட் தேசிய பூங்காவில் ஆவண படப்பிடிப்பில் தொடர்ந்து இருந்தார்.

  படப்பிடிப்புக்கு வந்த கேமரா குழுவினருடன் அவர் உல்லாசமாக படகு சவாரியை தொடர்ந்து இருக்கிறார். அங்கு பாரதீய ஜனதா கட்சியினர் தனக்கு ஆதரவாக கோஷங்கள் போடுகின்றனரா என்பதை உறுதி செய்திருக்கிறார்.

  ஒவ்வொரு இந்திய குடும்பமும் உணவு பெற்றிராதபோது, மாலை 7 மணிக்கு பிரதமர் பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் டீயும், சமோசாவும் சாப்பிட்டுள்ளார்.

  ஒரு பக்கம், தாக்குதலில் பலியான வீரர்களின் உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு கொண்டிருந்தன. இன்னொரு பக்கம் பிரதமர் தனது கொள்கை பிரசார விளம்பர படப்பிடிப்பில் இருந்தார். இத்தகைய நடத்தையை நாட்டின் பிரதமரிடம் இருந்து எதிர்பார்க்க முடியுமா?

  படப்பிடிப்பில் இருந்ததற்கு பதிலாக, உடனடியாக பிரதமர் ராணுவ துறைக்கான மத்திய மந்திரிசபை கூட்டத்தை கூட்டி, நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார். #Congress #RandeepSurjewala #PulwamaAttack 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியதிற்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா வரவேற்பு அளித்துள்ளார். #SupremeCourt #Congress #SabarimalaVerdict #RandeepSurjewala
  புதுடெல்லி:

  சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10-50 வயது வரையுள்ள பெண்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியும், அனைத்து வயது பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்கவேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டு நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்று உள்ளது.

  இதுபற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பதிவில், “சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு முற்போக்கான மற்றும் பரவலாக வரவேற்பை பெறக்கூடியது ஆகும். இதை காங்கிரஸ் முழு மனதுடன் வரவேற்கிறது. பாலினத்தின் அடிப்படையிலோ அல்லது வேறுவிதமாகவோ பெண்களுக்கு பாகுபாடு காட்டக் கூடாது என்பது தீர்ப்பில் மிகத் தெளிவாக கூறப்பட்டு இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.  “சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு பெண்களின் உரிமைகள் மீதான புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. பெண்களை மதச்சம்பிரதாயத்தின் கீழ் கட்டுப்படுத்தக் கூடாது என்பதையும் வெளிப்படுத்துகிறது. ஒரு சமுதாயம் பரிணாம வளர்ச்சி காணும்போது அதற்கேற்ப மத நம்பிக்கைகளும், சட்டங்களும் அதே போன்ற வளர்ச்சியை காண வேண்டும்” என்றும் அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.  #SupremeCourt #Congress #SabarimalaVerdict #RandeepSurjewala
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் ஒரு மாத காலம் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக காங்கிரஸ் அறிவித்து உள்ளது. #RandeepSurjewala #Congress
  புதுடெல்லி:

  காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தலைமையில் கட்சியின் மாநில தலைவர்கள், மாநில பொறுப்பு வகிக்கும் பொதுச்செயலாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.

  இந்த கூட்டத்தில், மத்தியில் உள்ள மோடி ஆட்சியில் ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதில் நடைபெற்ற முறைகேடு மற்றும் பல்வேறு ஊழல்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவது என்றும், இதற்காக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒரு மாத காலம் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. மாநில தலைநகரங்களிலும், மாவட்ட தலைநகரங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடை பெறும்.

  ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதில் பெருமளவில் ஊழல் நடந்து உள்ளது. இதுபற்றி பாராளுமன்ற கூட்டுக்குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறோம். இதில் இருந்து நாங்கள் பின்வாங்கப் போவது இல்லை.

  கேரளாவில் மழை வெள்ளத்தால் ஏராளமான உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டு உள்ளது. அங்கு ஏற்பட்ட மழை, வெள்ள சேதத்தை தேசிய பேரழிவாக மத்திய அரசு அறிவிக்கவேண்டும். அந்த மாநிலத்துக்கு கூடுதல் நிதி உதவி அளிக்க வேண்டும்.

  இதுபோன்ற பிரச்சினைகளை பிரதமர் மோடி அரசியல் நோக்கத்துடன் பார்க்கக்கூடாது. நிதி உதவி வழங்குவதில் பாரதீய ஜனதா ஆளும் மாநிலங்களுக்கும், பாரதீய ஜனதா அல்லாத கட்சிகளின் ஆட்சி நடைபெறும் மாநிலங்களுக்கும் இடையே அவர் பாகுபாடு காட்டுவதை மோடி நிறுத்திக் கொள்ளவேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு கேரள, கர்நாடக மக்களுக்கு உதவி செய்யவேண்டும்.

  கேரளாவில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் நிவாரண நிதி வழங்கி வருகின்றன. காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை நிவாரண உதவியாக வழங்க வேண்டும்.  #RandeepSurjewala #Congress 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மோடியின் சுதந்திர தின உரை ஏமாற்றம் அளிக்கிறது என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்து உள்ளது. #Modi #RandeepSujewala
  புதுடெல்லி:

  பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தினத்தையொட்டி நேற்று உரையாற்றினார். இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா நிருபர்களிடம் கூறியதாவது:-

  மோடியின் சுதந்திர தின உரை வெற்று முழக்கம் என்பதை நிரூபிப்பதாக உள்ளது. அவர் தனது ஆட்சியின் ஊழல் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து எதையும் கூறவில்லை. அதேபோல் வியாபம் மற்றும் பொது வினியோகத் திட்டத்தில் நடந்த ஊழல் பற்றியும் சொல்லவில்லை.  டோக்லாமில் சீனப் படைகள் ஊடுருவல் முயற்சி குறித்து எதையும் குறிப்பிடவில்லை. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவு பற்றி ஒரு வார்த்தை கூட அவருடைய உரையில் காணப்படவில்லை. நாட்டில் நிலவிவரும் வெறுப்பு அரசியல் பற்றியும் அவர் பேசவில்லை. ஒட்டுமொத்தத்தில் சாதாரண மக்களுக்கு பயன் அளிக்கும் விதமாக அவர் எதையும் கூறவில்லை. அவருடைய உரை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

  நாட்டு மக்கள் நல்ல நாட்களுக்காக காத்திருக்கிறார்கள். மோடி, பிரதமர் பதவியில் இருந்து வெளியேறிவிட்டால் அந்த நல்ல நாட்கள் தானாக வந்துவிடும்.

  2013-ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, சத்தீஷ்காரில் டெல்லி செங்கோட்டை போல் அமைத்த மேடையில் தன்னுடன் விவாதிக்க தயாரா என்று மோடி சவால் விடுத்தார்.

  இன்றோ, வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார வீழ்ச்சி, விவசாயிகளின் துயரம், அரசின் ஊழல் என்று பல்வேறு விவகாரங்கள் குறித்து தன்னுடன் விவாதிக்க தயாரா என்று ராகுல்காந்தி சவால் விடுத்தும் அதுபற்றி மோடி பேச மறுக்கிறார்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூறுகையில், “பிரதமரின் சுதந்திர தின உரை தேர்தல் கால அரசியல் பேச்சு போலவே உள்ளது. நாட்டு மக்களிடையே நிலவும் அச்சத்தை போக்க அவர் தவறிவிட்டார். டெல்லி செங்கோட்டையை சொந்த நலனுக்காக அரசியல் மேடையாக அவர் பயன்படுத்தாமல் இருந்தால் நல்லது” என்றார்.  #Modi #RandeepSujewala  #Tamilnews 
  ×