search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hema Malini"

    • உத்தர பிரதேசத்தின் மதுரா தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ஹேமமாலினி போட்டியிடுகிறார்.
    • நடத்தை விதிமுறைகளை மீறியதாக தேர்தல் ஆணையம் சுர்ஜிவாலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் உ.பி.யின் மதுரா தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ஹேமமாலினி போட்டியிடுகிறார்.

    இதற்கிடையே, பா.ஜ.க. எம்.பி.யும், மதுரா தொகுதி வேட்பாளருமான ஹேமமாலினி குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், கட்சியின் மூத்த தலைவருமான ரந்தீப் சுர்ஜிவாலா பேசிய கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

    பாஜக எம்பி ஹேமமாலினியைப் பற்றி அவர் கூறிய கருத்துகள் கண்ணியமற்றது, கொச்சையானது மற்றும் நாகரீகமற்றது என்ற தேர்தல் ஆணையம் முதன்மையான நடத்தை விதிகளை மீறியது என அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜிவாலா இன்று மாலை 6 மணி முதல் அடுத்த 48 மணி நேரத்துக்கு தேர்தல் தொடர்பாக பேரணி, பேட்டி அளிக்கக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

    • மதுராவில் பிருந்தாவன் பகுதியில் சொந்த வீடு கட்டி வசித்து வருகிறேன்.
    • நடிகை, பரத நாட்டிய கலைஞர், அரசியல்வாதி என எனக்கு 3 முகங்கள் இருக்கின்றன.

    மதுரா:

    பாலிவுட்டில் 'கனவுக்கன்னி' என்று அழைக்கப்பட்ட நடிகை ஹேமமாலினி, கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக களம் இறங்கினார். அந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.

    மீண்டும் 2019-ம் ஆண்டு தேர்தலிலும் அதே தொகுதியில் வெற்றி பெற்றார். தற்போது, தொடர்ந்து 3-வது முறையாக மதுரா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக களம் காண்கிறார்.

    75 வயது ஆனவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பது இல்லை என்ற எழுதப்படாத விதியை தளர்த்தி, 75 வயதான ஹேமமாலினிக்கு பா.ஜனதா மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளது.

    இந்நிலையில், நடிகை ஹேமமாலினி, ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    நான் முதன்முதலில் மதுரா தொகுதியில் எம்.பி. ஆனபோது, சினிமா நடிகை என்ற முறையில் என் மீது மக்களுக்கு ஈர்ப்பு இருந்தது. முதலில், வெளியூர்காரர் என்ற பிரச்சனை காணப்பட்டது. தொகுதிக்கு அடிக்கடி வரமாட்டார் என்று பேசினார்கள்.

    அதை பொய்யாக்கும் வகையில், மதுராவில் பிருந்தாவன் பகுதியில் சொந்த வீடு கட்டி வசித்து வருகிறேன். இப்போது வெளியூர்காரர் என்ற பிரச்சனை இல்லை.

    எனது முதல் பதவிக்காலத்தில் எனக்கு என்ன வேலை என்றே தெரியவில்லை. பிறகுதான் படிப்படியாக தெரிந்து கொண்டேன்.

    நான் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி அல்ல. ஆனால், எம்.பி.யாக இருந்தால், நான் விரும்பிய பணிகளை செய்ய முடியும்.

    நான் அரசியலில் குதிக்க விரும்பியது இல்லை. தெய்வ அனுக்கிரகத்தால் அது நடந்தது. நான் கிருஷ்ணர் பக்தை. நான் சில சேவைகள் செய்ய வேண்டும் என்று கிருஷ்ணர் விரும்புவதால் இங்கு நிற்கிறேன். மதுரா இல்லாவிட்டால், நான் நின்றிருக்க மாட்டேன்.

    மதுரா தொகுதிக்கான எனது கனவு இன்னும் பாக்கி இருக்கிறது. அந்த முடிவடையாத பணிகளை முடிக்க மீண்டும் போட்டியிட விரும்பினேன். கட்சி வாய்ப்பு கொடுத்துள்ளது. அதற்காக பா.ஜனதாவுக்கு நன்றி.

    பிரதமர் மோடி-ஹேமமாலினி கூட்டணிக்கு மக்கள் ஓட்டு போடுவார்கள். பிரதமர் மோடி நாடு முழுவதும் செய்த பணிகள் ஓட்டு பெற்றுத்தரும். நான் செய்த பணிகள் தெரிய வேண்டுமானால், தொகுதியை சுற்றி பாருங்கள்.

    நான் பிராமண பெண். ஜாட் இன மருமகள். அதனால், ஜாட் சமூகத்தினர் நிறைந்த இத்தொகுதியில் ஆதரவு இருக்கிறது.

    நடிகை, பரத நாட்டிய கலைஞர், அரசியல்வாதி என எனக்கு 3 முகங்கள் இருக்கின்றன. இப்போதும், பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறேன். மக்களுக்கும் பிடித்து இருக்கிறது. சினிமாவில் நல்ல வேடங்கள் வரும்போது நடிப்பேன். 3 முகங்களும் எனது மனதுக்கு நெருக்கமானவை.

    இத்தேர்தலில் ராமர் கோவில், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். கிருஷ்ண ஜென்மபூமி பிரச்சனை, கோர்ட்டில் இருப்பதால் அதுபற்றி பேச விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் நடிகை ஹேமமாலினியை ஆதரித்து அவரது கணவர் தர்மேந்திரா தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். #LokSabhaElections2019 #Dharmendracampaigns #HemaMalini #Mathuracampaign
    லக்னோ:

    பாலிவுட் சினிமாக்களில் 1970 மற்றும் 1980-களில் பிரபல முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த நடிகை ஹேமமாலினி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா பாராளுமன்ற தொகுதியின் பா.ஜ.க. எம்.பி.யாக உள்ளார்.

    முன்னர் இந்திப்பட ரசிகர்களால் ‘கனவுக் கன்னி’ (டிரீம் கேர்ள்) என்றழைக்கப்பட்ட ஹேமமாலினி(70) இந்த தேர்தலிலும் மதுரா தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.

    இந்த தொகுதி மக்களுக்கு நான் ஆற்றியுள்ள பணிகள் மற்றும் பிரதமர் மோடியின் மக்கள் நலத்திட்டங்களை முன்வைத்து பிரசாரம் செய்து வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ள ஹேமமாலினியின் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.



    இந்நிலையில், சமீபகாலமாக பொது நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா சார்ந்த விழாக்களில் அதிகம் பங்கேற்பதை தவிர்த்துவந்த பிரபல முன்னாள் அதிரடி பாலிவுட் கதாநாயகனும் ஹேமமாலினியின் கணவருமான தர்மேந்திரா(83) இன்று அவரை ஆதரித்து மதுரா தொகுதிக்கு உட்பட்ட சில பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். #Dharmendracampaigns #HemaMalini #Mathuracampaign #LSpolls 
    மதுராவுக்கும், எனக்கும் தெய்வீக உறவு உள்ளது என்று பா.ஜனதா கட்சியின் தற்போதைய எம்.பி.யும், நடிகையுமான ஹேமமாலினி கூறினார். #LokSabhaElections2019 #HemaMalini
    பா.ஜனதா கட்சியின் தற்போதைய எம்.பி.யும், நடிகையுமான ஹேமமாலினி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். ஹேமமாலினி மும்பையில் வசிப்பதால் அவரை வெளியூர்வாசி என சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்கள் பிரசாரத்தில் கூறி வருகின்றன.



    இந்நிலையில் ஹேமமாலினி அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    நான் மும்பையில் தான் வசிக்கிறேன். அதனால் எதிர்க்கட்சிகளுக்கு என்ன பிரச்சினை?. எனக்கு மதுராவிலும் வீடு இருக்கிறது. மதுராவுக்கும் எனக்கும் தெய்வீக உறவு உள்ளது. நான் எம்.பியாக அறிவிக்கப்பட்டபோது கோவிலில் தான் இருந்தேன். கடந்த 5 ஆண்டுகளில் எம்.பி.யாக இருந்த போது இங்கு 250 முறை வந்துள்ளேன். இந்த தொகுதிக்கு நான் என்ன செய்தேன் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். முதல் 2 ஆண்டுகள் எனக்கும், இந்த தொகுதி மக்களுக்கும் சரியான தகவல் தொடர்பு இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் கடைசி 2 ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் இந்த தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். இதை வரும் தேர்தலில் வெற்றி பெற்றும் தொடருவேன். எனக்கு மந்திரி ஆகும் ஆசை கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #HemaMalini
    உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் மீண்டும் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் ஹேமமாலினியின் சொத்து மதிப்பு ரூ.101 கோடி என தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #HemaMalini
    மதுரா:

    உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் மீண்டும் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் ஹேமமாலினி தனது வேட்பு மனுவில் சொத்து மதிப்பு மொத்தம் ரூ.101 கோடி என தெரிவித்துள்ளார். இதில் பங்களாக்கள், நகைகள், பணம், பங்குகள், வைப்புத்தொகை என அனைத்தும் அடங்கும். 2014 தேர்தலின்போது அவர் தனது சொத்து மதிப்பு சுமார் ரூ.66 கோடி என தெரிவித்து இருந்தார். அவர் தாக்கல் செய்த விவரப்படி 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ.34.46 கோடி அதிகரித்துள்ளது.



    அவரது கணவர் தர்மேந்திராவின் சொத்து மதிப்பையும் சேர்த்து மொத்தம் ரூ.123.85 கோடி என கூறப்பட்டுள்ளது. 2013-14ல் ஹேமமாலினியின் வருமானம் ரூ.15.93 லட்சம் என குறிப்பிட்டுள்ளார். 2017-18ல் வருமானம் ரூ.1.19 கோடி என தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #HemaMalini

    பாராளுமன்ற தேர்தலில் பதேபூர்சிக்ரி தொகுதியில் ஹேமமாலினியை போட்டியிட வைக்க பா.ஜனதா மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். #ParliamentElection #HemaMalini
     ஆக்ரா:

    பிரபல இந்தி நடிகை ஹேமமாலினி கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது பா.ஜனதா சார்பில் மதுரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அந்த தொகுதி பா.ஜனதாவின் செல்வாக்கு மிக்க தொகுதிகளில் ஒன்றாகும்.

    ஹேமமாலினி மீண்டும் இந்த தடவையும் பா.ஜனதா சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார். அவர் மதுரா தொகுதியிலேயே மீண்டும் போட்டியிட விரும்புகிறார்.

    கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ராஷ்டீரிய லோக்தள வேட்பாளர் ஜெயந்த் சவுத்திரியை 3 லட்சத்து 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த தடவையும் அதே போன்று அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடியும் என்று ஹேமமாலினி நம்புகிறார்.

    ஆனால் உத்தரபிரதேசத்தில் உள்ள பா.ஜனதா மூத்த தலைவர்கள் ஹேமமாலினியை வேறு ஒரு தொகுதியில் நிறுத்த ஆலோசனை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக பதேபூர்சிக்ரி தொகுதியில் ஹேமமாலினியை போட்டியிட வைக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    பதேபூர்சிக்ரி தொகுதியில் பா.ஜனதா எம்.பி.யாக இருக்கும் பாபுலால் சவுத்திரி மீது அந்த தொகுதி மக்களிடம் அதிருப்தி நிலவுகிறது. அந்த தொகுதியில் உள்ள பா.ஜனதா நிர்வாகிகளிடமும் பாபுலால் சவுத்திரி மீது நல்ல அபிப்பிராயம் இல்லை.

    இந்த நிலையில் பதேபூர்சிக்ரியில் மீண்டும் பாபுலாலை நிறுத்தினால் சிக்கல் ஏற்பட்டு விடும் என்று உத்தரபிரதேச பா.ஜனதா தலைவர்கள் கருதுகிறார்கள். எனவே பதேபூர்சிக்ரி தொகுதியில் பா.ஜனதா வெற்றியை உறுதி செய்ய ஹேமமாலினியை களம் இறக்க நினைக்கிறார்கள்.

    ஆனால் ஹேமமாலினிக்கு பதேபூர் சிக்ரி தொகுதியில் போட்டியிட விருப்பம் இல்லை. அவர் மதுரா தொகுதியிலேயே போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

    மதுரா தொகுதி மக்களிடம் அவருக்கு நல்ல ஆதரவு இருக்கிறது. எனவே அவர் அந்த தொகுதியில் எளிதாக வெற்றி பெற முடியும் என்று பா.ஜனதா மூத்த தலைவர்களிடம் தெரிவித்து இருக்கிறார். #ParliamentElection #HemaMalini
    பசு பாதுகாப்பு பிரசார தூதராக நடிகையும், மதுரா தொகுதி எம்.பி.யுமான ஹேமமாலினியை உத்தரபிரதேச அரசு நியமனம் செய்துள்ளது. #HemaMalini #CowSevaAyog
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநில அரசு பசுக்களை பாதுகாப்பதற்காக ‘கவ் சேவா ஆயோக்’ என்ற பசு பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தனி அதிகாரம் கொண்ட அமைப்பாகும். பசுக்களை பாதுகாப்பது தொடர்பான ஆலோசனைகளை அரசுக்கு வழங்கும்.

    இந்த அமைப்பு செயல்பட ரூ.647 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது இதன் பிரசார தூதராக நடிகையும், மதுரா தொகுதி எம்.பி.யுமான ஹேமமாலினியை மாநில அரசு நியமனம் செய்துள்ளது.

    பசுவை பாதுகாப்பது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரத்தில் ஹேமமாலினி ஈடுபடுவார். இந்த நியமனத்தை ஏற்றுக்கொண்ட ஹேமமாலினி பசுபாதுகாப்பு தொடர்பாகவும், விழிப்புணர்வு தொடர்பாகவும் தனது திட்டங்களை பசு பாதுகாப்பு அமைப்பின் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளனர். #HemaMalini
    நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் மதுரா தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளதாக நடிகை ஹெமமாலினி தெரிவித்துள்ளார். #HemaMalini #Mathura #BJP
    மதுரா:

    உத்தரபிரதேச மாநிலம் மதுரா ரெயில் நிலையத்தில் தானியங்கி படிக்கட்டு, மின்தூக்கி, நவீன நடைமேம்பாலம், சூரிய மின்சக்தி திட்டம், மேம்படுத்தப்பட்ட பயணிகள் காத்திருப்பு அறை, பிரமாண்ட நுழைவு வாயில் ஆகியவை தொடக்கவிழா நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் அந்த தொகுதி எம்.பி.யும், நடிகையுமான ஹேமமாலினி கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-



    மதுரா ரெயில் நிலையம் நவீன மயமாக்கப்படும் என்று தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளேன். இந்த பணியில் ரெயில்வே அதிகாரிகள் சிறப்பாக ஒத்துழைப்பு அளித்தார்கள்.

    ஆன்மீக தளமான மதுராவுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வந்து செல்ல வசதியாக மேலும் பல ரெயில்களை இயக்க வேண்டும் என்று ரெயில்வே மந்திரியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

    விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் மதுரா தொகுதியில் மீண்டும் போட்டியிட இருக்கிறேன். இதற்கு பா.ஜனதா தலைமை ஒப்புதல் அளித்து விட்டது. கடந்த தேர்தலில் பெற்றதை விட சிறப்பான வெற்றியை மக்கள் அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஒரு எம்.பி.யாக இந்த தொகுதியில் சிறப்பாக பணியாற்றியுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #HemaMalini #Mathura #BJP
    ×