என் மலர்
செய்திகள்

மதுராவுக்கும், எனக்கும் தெய்வீக உறவு உள்ளது - ஹேமமாலினி
மதுராவுக்கும், எனக்கும் தெய்வீக உறவு உள்ளது என்று பா.ஜனதா கட்சியின் தற்போதைய எம்.பி.யும், நடிகையுமான ஹேமமாலினி கூறினார். #LokSabhaElections2019 #HemaMalini
பா.ஜனதா கட்சியின் தற்போதைய எம்.பி.யும், நடிகையுமான ஹேமமாலினி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். ஹேமமாலினி மும்பையில் வசிப்பதால் அவரை வெளியூர்வாசி என சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்கள் பிரசாரத்தில் கூறி வருகின்றன.

இந்நிலையில் ஹேமமாலினி அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது:-
நான் மும்பையில் தான் வசிக்கிறேன். அதனால் எதிர்க்கட்சிகளுக்கு என்ன பிரச்சினை?. எனக்கு மதுராவிலும் வீடு இருக்கிறது. மதுராவுக்கும் எனக்கும் தெய்வீக உறவு உள்ளது. நான் எம்.பியாக அறிவிக்கப்பட்டபோது கோவிலில் தான் இருந்தேன். கடந்த 5 ஆண்டுகளில் எம்.பி.யாக இருந்த போது இங்கு 250 முறை வந்துள்ளேன். இந்த தொகுதிக்கு நான் என்ன செய்தேன் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். முதல் 2 ஆண்டுகள் எனக்கும், இந்த தொகுதி மக்களுக்கும் சரியான தகவல் தொடர்பு இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் கடைசி 2 ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் இந்த தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். இதை வரும் தேர்தலில் வெற்றி பெற்றும் தொடருவேன். எனக்கு மந்திரி ஆகும் ஆசை கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #HemaMalini
Next Story