என் மலர்

  நீங்கள் தேடியது "Jaguar F Pace SVR Edition"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஜாகுவார் நிறுவனம் சில தினங்களுக்கு முன் தனது F பேஸ் SVR எடிஷன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
  • இது ஜாகுவார் நிறுவனத்தின் முதல் லிமிடெட் எடிஷன் மாடல் ஆகும்.

  ஜாகுவார் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த F பேஸ் SVR எடிஷன் 1998 மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. இது ஜாகுவார் ஹை பெர்பார்மன்ஸ் எஸ்.யு.வி.-யின் முதல் லிமிடெட் எடிஷன் மாடல் ஆகும். இந்த மாடலை எஸ்.வி. பிஸ்போக் வல்லுனர்கள் உருவாக்கினர் மொத்தத்தில் 394 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளன.

  இவை அனைத்தும் ஜாகுவார் ரேசிங் பாரம்பரியத்தை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றன. 1998 ஆம் ஆண்டு சர்வதேச ஸ்போர்ட்ஸ் ப்ரோடோடைப் சாம்பியன்ஷிப் பட்டத்தை XJR-9 மாடல் வென்றதற்கு பெருமை சேர்க்கும் வகையில், புதிய லிமிடெட் எடிஷன் மாடல் இவ்வாறு அழைக்கப்படுகிறது.


  லிமிடெட் எடிஷன் மாடலில் விசேஷமான பார்முலேட் செய்யப்பட்ட மிட்நைட் அம்திஸ்ட் கிளாஸ் பெயிண்ட் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இதில் ஆப்ஷனல் ஷேம்பெயின் கோல்டு சாட்டின் ஃபோர்ஜ்டு அலாய் வீல்கள் உள்ளன.மேலும் சன்செட் கோல்டு சாட்டின் எக்ஸ்டீரியர், இண்டீரியர் டீடெயிலிங் 'One of 394' எஸ்.வி. பிஸ்போக் கமிஷனிங் கிராபிக் இடம்பெற்று இருக்கிறது.

  மேலும் சன்செட் கோல்டு சாட்டின் ஜாகுவார் லீப்பர், டெயில்கேட்டில் ஸ்க்ரிப்ட், முன்புற விங் பேனல் மீது லேசர் இட்ச் செய்யப்பட்ட எடிஷன் 1998 லோகோ இடம்பெற்று இருக்கிறது. இந்த மாடலில் ஜாகுவார் நிறுவனத்தின் 5.0 லிட்டர் வி8 சூப்பர் சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த கார் மணிக்கு 100 கி.மீ. வேகத்தை நான்கு நொடிகளில் எட்டி விடும்.

  ×