search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், 16 துணை கலெக்டர்களுக்கு பயிற்சி முகாம்
    X

    தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் துணை கலெக்டர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

    தஞ்சையில், 16 துணை கலெக்டர்களுக்கு பயிற்சி முகாம்

    • தஞ்சை தமிழ் பல்கலைக்கழக வளாகத்தையும், பெரிய கோவிலையும் அலுவலர்கள் பார்வையிட்டனர்.
    • சோழர் கால நீர் மேலாண்மை விளக்கம் பெற்றனர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் இந்திய ஆட்சிப் பணியில் 2019-2020 ஆண்டில் நியமனம் பெற்ற துணை கலெக்டர்கள் (பயிற்சி) பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

    இதனையடுத்து வெவ்வேறு மாவட்டங்களில் பணியில் உள்ள 16 இந்திய ஆட்சிப் பணி (பயிற்சி) அலுவலர்கள் தமிழ்நாடு தர்ஷன் எனும் பயிற்சியில் கடந்த 13 -ந் தேதி முதல் வரும் 25-ந் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, தமிழ்நாட்டின் கலை, பண்பாடு, வளம், புவியியல் பாகுபாடுகள் குறித்துப் பயிற்சி பெற்று வருகின்றனர்.

    அதன் தொடர்ச்சியாக தஞ்சாவூரில் உலகப் புகழ் வாய்ந்த தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு வந்திருந்து பயிற்சி பெற்றனர்.

    தஞ்சாவூர் கோயில் கலைகள், சோழர் கால நீர் மேலாண்மை, தமிழ்நாட்டின் நீர்வளமும், நீர் மேலாண்மையும் என்பன குறித்த அரிய கருத்துக்களை அறிஞர்கள், பேராசிரியர்களின் உரைவழிக் கேட்டறிந்து பயிற்சி பெற்று தங்களது சந்தேகங்களை கேட்டறிந்து விளக்கம் பெற்றனர்.

    மேலும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தையும், தஞ்சைப் பெரிய கோயிலையும் அலுவ லர்கள் பார்வையிட்டனர்.

    இந்த பயிற்சி வகுப்பில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திருவள்ளு வன் தலைமையில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

    இதில் ஆன்மீக திருக்கயிலை மாமணி இராமநாதன், மற்றும் தஞ்சை சரஸ்வதி மகால் தமிழ்ப் பண்டிதர் மணிமாறன், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொழில் மற்றும் நில அறிவியல் துறைப் பேராசிரியர் நீலகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு காட்சி படத்துடன் விளக்க உரை வழங்கினர்.

    இந்த பயிற்சி முகாமிற்கான கூட்டம் மற்றும் பயிற்சியினை அதன் ஒருங்கிணைப்பாளர், மொழிப்புல முதன்மையர் முனைவர் கவிதா ஏற்பாடு செய்திருந்தார்.

    இதுகுறித்து கடலூர் மாவட்டத்தில் துணை கலெக்டராக (பயிற்சி) பணிபுரியும் அபிநயா கூறும்போது, தமிழ்நாடு தர்ஷன் எனும் பயிற்சி மூலம் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்து தமிழின் பெருமை, தஞ்சை பெரிய கோயிலின் கட்டிட அமைப்பு, வரலாறு, கலைநயம், சிற்பக் கலை ஆகியவற்றை தெரிந்து கொண்டோம்.

    சோழர் கால மன்னர்கள், நாயக்கர் கால மன்னர்கள் மற்றும் மராட்டிய மன்னர்கள் ஆகியோர் தமிழ் உலகிற்கு எந்தளவிற்கு தொண்டு செய்திருக்கி றார்கள் என்பதை அறிந்து கொண்டுள்ளோம்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நீர் மேலாண்மை பற்றியும் குறிப்பாக அதில் ஏரிகளில் குமிழி தூண் பற்றிய விளக்க உரையில் தூர்வாரும்போது சேர் இல்லாமல் சுத்தமான தண்ணீர் எவ்வாறு கொண்டு செல்வது என்பது பற்றி தெரிந்து கொண்டு தாங்கள் பணிபுரியும் இடத்தில் குமிழி தூண் அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட வாய்ப்பாக இருக்கும். குமிழி தூண் முக்கியத்துவத்தையும், நீரின்றி அமையாது உலகு என்ற வார்த்தைக்கு ஏற்ப நீர் மேலாண்மை பற்றியும் தெரிந்து விளக்கம் பெற்றுள்ளோம் என்றார்.

    Next Story
    ×