search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jawahirullah MLA"

    • ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., கடந்த சில நாட்களுக்கு முன்பு சீர்காழியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.
    • போலீசார் அவதூறு பரப்பும் வகையில் புகைப்படத்தை பதிவிட்ட திப்பு நகரை சேர்ந்த முகமது ஹாரீஸ் என்பவரை கைது செய்தனர்.

    குனியமுத்தூர்:

    கோவை கரும்புக்கடை அருகே உள்ள அன்பு நகரை சேர்ந்தவர் ஜூபேர் அகமது (வயது 24). இவர் கரும்புக்கடை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தில் தொழில்நுட்ப பிரிவு கோவை மாவட்ட செயலாளராக உள்ளேன். எங்களது தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., கடந்த சில நாட்களுக்கு முன்பு சீர்காழியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது அவர் புகைப்படம் எடுத்து உள்ளார்.

    அந்த புகைப்படத்தை கரும்புக்கடை திப்பு நகரை சேர்ந்த முகமது ஹாரீஸ் என்பவர் தவறாக சித்தரித்து பேஸ்புக்கில் அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டு உள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அளித்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு போலீசார் அவதூறு பரப்பும் வகையில் புகைப்படத்தை பதிவிட்ட திப்பு நகரை சேர்ந்த முகமது ஹாரீஸ் என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • தமிழ்நாடுமுஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட மனிதநேய மக்கள் கட்சி கவுன்சிலரான16 -வது வார்டை பார்வையிட்டார்.
    • கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகருக்கு வழங்கினார்.

    உடன்குடி:

    தமிழ்நாடுமுஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட மனிதநேய மக்கள் கட்சி கவுன்சிலரான16 -வது வார்டை பார்வையிட்டார்.

    தொடர்ந்து மக்களிடம் நேரில் சென்று கவுன்சிலரின் செயல்பாடைபற்றி கேட்டறிந்தார்.

    புதுமனை மேலத்தெரு வில் உள்ள அங்கன்வாடியை விரைவில் புதுப்பித்து கட்டுவதற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதை பற்றிகூறினர்.

    அப்போது அவர் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று உடனுக்குடன் பார்வையிட்டு விரைவில் நடவடிக்கை எடுப்பது மக்கள் பிரதிநிதியின் கடமை யாகும், நம்மை தேர்வு செய்துள்ள மக்களுக்கு நாம் என்றும் உறுதுணையாக இருந்து அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்என்று ஜவாஹிருல்லா கூறினார்,

    மேலும், உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி மன்ற தலைவர் ஹுமைரா அஸ்ஸாப் கல்லாசி சிறப்பான முறையில் உடன்குடி பேரூராட்சி மன்றத்தை செயல்படுத்தி வருவதாகவும் கூறினார்.

    தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி பல்வேறு ஆலோசனை களை நிர்வாகிகருக்கு வழங்கினார்.

    அப்போது, மாநில தலைமை பிரதிநிதி ஜோசப் நொலாஸ்கோ, தூத்துக்குடி மாவட்ட த.மு.மு.க. தலைவர் ஆஸாத், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா கல்லாசி, 16-வது வார்டு கவுன்சிலர் முகம்மது ஆபித், மாவட்ட பொருளாளர் சர்தார், மாவட்ட இளைஞர் அணி செயலாளர்பரகத்துல்லா, உடன்குடி நகரத் தலைவர் அஜீஸ், ம.ம.க. நகர செயலாளர் ஹமீது, த.மு.மு.க. நகர செயலாளர்சாதிக், செய்யாது, புஹாரி, ஆசிக் ரகுமான், அத்தாது, சுஹைல், யாசர், நவாஸ், ஹாலித், தி.மு.க. கிளை செயலாளர்கள் சுபியானசம்சுதீன் மற்றும் மீராசாகிப், ஹரிஷ், அஸர், ஜகுபர், ரியாஸ் ஜாபர், இப்ராஹிம், ஜமாத்தார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கணவரை இழந்த ஜெயா தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் உதவி கேட்டு மனு கொடுத்தார்.
    • தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. ஜெயாவுக்கு காசோலை வழங்கினார்.

    உடன்குடி:

    திருச்செந்தூர் அருகே உள்ள கீழ நாலு மூலை கிணறு பகுதியை சேர்ந்த ஜெயா என்பவருக்கு மூன்று பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். இவருடைய கணவர்கடந்த 2021-ல் இறந்துவிட்டார். கணவரை இழந்த ஜெயா தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் உதவி கேட்டு விண்ணப்பம் மனு கொடுத்தார். தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஆசாத் கோரிக்கையை ஏற்று ஆவண உதவி செய்வதாக உறுதியளித்தார்.

    அதன் அடிப்படையில் ஜெயா குடும்பத்திற்கு ரூ. 1.50 லட்சம் உடன்குடி வங்கியில் வரைவோலையாக காசோலை எடுக்கப்பட்டு ஜெயாவின் மகன் 8-ம் வகுப்புபடித்து வரும் ரூபனுக்கு (வயது12) ரூபன் பெயரில் டெபாசிட் செய்து அதன் நகலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. ஜெயாவுக்கு வழங்கினார்.

    உடன்குடியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜோசப் நோலாஸ்கோ, மாவட்ட தலைவர் ஆசாத், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் ஐப்ரோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உடன்குடி நகர பொருளாளர் அமித்அரசுமீரான், காயல் நகரச் செயலாளர் ஹசன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொன்டனர்.

    • மீனவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
    • மீனவர் குடும்பத்திற்கு எந்த நிவாரணமும் அறிவிக்காமல் இருப்பதாக மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மனித நேய மக்கள் கட்சி தலைவருமான ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மண்டபம் மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரமான கடல் அட்டை மீதான தடையை நீக்க கோரி ராமநாதபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பிய போது வாகன விபத்தில் சிக்கி 4 பேர் பலியானார்கள். 14 பேர் காயமடைந்தனர். சம்பவம் நடந்து 2 நாட்கள் ஆகியும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் பலியான மீனவர் குடும்பத்திற்கு எந்த நிவாரணமும் அறிவிக்காமல் இருப்பதாக மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    முதல்-அமைச்சர் இதில் தலையிட்டு காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், பலியானவர்களின் குடும்பத்திற்கு அதிகபட்ச நிவாரணத்தையும் உடனடியாக அறிவிக்க வேண்டும். மேலும் கடல் அட்டை மீதான தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×