என் மலர்
உள்ளூர் செய்திகள்

மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பாலாலயம் வழிபாடு செய்யப்பட்டது.
உடன்குடி குதிரைமொழி சுந்தர நாச்சி அம்மன் கோவிலில் பாலாலயம்
- உடன்குடி யூனியனுக்குட்பட்ட குதிரைமொழி கிராமத்தில் உள்ள சுந்தரநாச்சிஅம்மன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற பிப்ரவரி 12-ந்தேதி நடைபெற உள்ளது.
- நேற்று மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பாலாலயம் வழிபாடு செய்யப்பட்டது. கோவிலை புதுப்பித்துகட்டவும், சுவாமி சிலைகளை புதுபிக்கும் பணியும் தொடங்கியது.
உடன்குடி:
உடன்குடி யூனியனுக்குட்பட்ட குதிரைமொழி கிராமத்தில் உள்ள சுந்தரநாச்சிஅம்மன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற பிப்ரவரி 12-ந்தேதி நடைபெற உள்ளது. முன்னதாக நேற்று மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பாலாலயம் வழிபாடு செய்யப்பட்டது. கோவிலை புதுப்பித்துகட்டவும், சுவாமி சிலைகளை புதுபிக்கும் பணியும் தொடங்கியது. நிகழ்ச்சியில் உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர்,நகை சரி பார்ப்பு அதிகாரி வெங்கடேஷ், ஆய்வாளர்பகவதி, கோவில் செயல் அலுவலர் காந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் பழமையான சுவாமி சிலைகள் சிற்பங்களை ஆய்வு செய்து கும்பாபிஷேகம் தொடர்பான ஆலோசனைகளை பக்தர்களுடன் கலந்து மேற்கொண்டனர். பாலாயம்நிகழ்ச்சி, சிறப்பு பூஜைகள் மற்றும் யாகசாலை வழிபாட்டைகுலசை முத்தாரம்மன் கோவில் அர்ச்சகர் குமார் பட்டர் நடத்தினார். சுந்தரநாச்சி அம்மன் கோவில் அர்ச்சகர் லட்சுமணன் உடனிருந்தார். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.






