search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sumankali Pooja"

    • முத்தாரம்மன் கோவில் திருவிழா நேற்று காலை 7 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பல்வேறு யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
    • இன்று மாலை 6 மணிக்கு 2008 பெண்கள் கலந்துகொள்ளும் சிறப்பு மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு வருடம் தோறும் சித்திரை மாத வசந்த விழா சிறப்பாக கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டு திருவிழா நேற்று காலை 7 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பல்வேறு யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. காலை 10 மணிக்கு குபேர வேள்வி செல்வ வழிபாடு, காலை 11 மணிக்கு 1008 கலச பூஜை, சிறப்பு அலங்கார தீபாராதனை, மாலை 6 மணிக்கு 2008 பெண்கள் கலந்து கொண்ட சிறப்பு சுமங்கலி பூஜையில் பாடல்கள் பாடி மந்திரங்கள் ஓதி வழிபாடு நடந்தது.

    பின்பு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் சிவசுப்பி ரமணியன், திருச்செந்தூர் ராமகிருஷ்ணன், ஜெய மோகன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இன்று காலை 6 மணிக்கு 108 சங்கு பூஜை, 504 பால்குட ஊர்வலம் குலசேகரன்பட்டினம் கடற்கரையில் இருந்து கொண்டு வரப்படுகிறது. தொடர்ந்து நண்பகல் 1 மணி அளவில் 1008 சங்காபிஷேகம் ,அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 504 பால்குட அபிஷேகம், சிறப்பு அலங்கார தீப ஆராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    இன்று மாலை 6 மணிக்கு 2008 பெண்கள் கலந்து கொள்ளும் சிறப்பு மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு சுவாமிக்கு மலர் அலங்கார பூஜையும், சிறப்பு அலங்கார தீப ஆராதனையுடன் பிரசாதம் வழங்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை முத்தாரம்மன் தசரா குழு மற்றும் தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை ஆகியவற்றின் நிர்வாகிகள் செய்து உள்ளனர்.

    ×