என் மலர்
நீங்கள் தேடியது "Samapanthi Feast"
- குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சுதந்திர தினத்தையொட்டி சமபந்தி அன்னதானம் நடைபெற்றது.
- இதில் சென்னை ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சுந்தரலிங்கம் மீனாட்சி கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
உடன்குடி:
உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சுதந்திர தினத்தையொட்டி சமபந்தி அன்னதானம் நடைபெற்றது. மதியம் சிறப்பு பூஜையுடன் தொடங்கிய சமபந்தி அன்னதான நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன் தலைமை தாங்கினார். உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் இளங்கோ, உடன்குடி பேரூராட்சி துணை தலைவரும், பேரூர் செயலாருமான மால் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சென்னை ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சுந்தரலிங்கம் மீனாட்சி கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தண்டுபத்து சிவானந்தன், குலசேகரன்பட்டினம் பஞ்சாயத்து துணைத் தலைவர் கணேசன், கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன், கோவில் ஆய்வாளர் பகவதி, கணக்கர் டிமிட்ரோ நுகர்வோர் பேரவை மாநில தலைவர் மோகனசுந்தரம் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோவிலுக்கு உபயமாக வழங்கப்பட்ட வேட்டி சேலைகள் ஏழை, எளியோருக்கு வழங்கப்பட்டது.
- குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் சமபந்தி பொதுவிருந்து, மதியம் அம்மனுக்கு தீபாராதனை சிறப்பு வழிபாடு நடைபெற்றது
- இதில் குரங்கணி ஊராட்சி தலைவர் ஜெயமுருகன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தென்திருப்பேரை:
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி பொதுவிருந்து நடைபெற்றது. ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி, துணைத் தலைவர் சுந்தர்ராஜ் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அஜீத் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர். அதே போன்று குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் சமபந்தி பொதுவிருந்து, மதியம் அம்மனுக்கு தீபாராதனை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. குரங்கணி ஊராட்சி தலைவர் ஜெயமுருகன் மற்றும் பக்தர்கள், ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.






