என் மலர்
உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி அறநிலையத்துறை இணைஆணையர் அன்புமணி முதல் விற்பனையை தொடங்கி வைத்த காட்சி.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆன்மிக புத்தக விற்பனை நிலையம் திறப்பு
- தூத்துக்குடி இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி தலைமை தாங்கி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
- நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
உடன்குடி:
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆன்மிக புத்தக விற்பனை நிலையம் தொடக்க விழா கோவில் வளாகத்தில் நடந்தது. தூத்துக்குடி இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி தலைமை தாங்கி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். உதவி ஆணையர் கவிதா முன்னிலை வகித்தார்.
இதில், ஆன்மிக புத்தக விற்பனை நிலைய உபயதார் ஜெயராமன், பத்மாவதி அம்மாள் மற்றும் சாகுபுரம் சீனிவாசன், உடன்குடி சண்முகசுந்தரம், திருச்செந்தூர் காஞ்சி பள்ளி முதல்வர் செல்வ வைஷ்ணவி, கோவில் உள்துறை செயல் அலுவலர் வெங்கடேஸ்வரி, கோவில் ஆய்வாளர் பகவதி, குலசை சிதம்பரநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.






