என் மலர்
உள்ளூர் செய்திகள்

முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்த காட்சி.
தூத்துக்குடி முத்தாரம்மன் கோவில் கொடை விழாவில் அ.தி.மு.க. சார்பில் அன்னதானம்
- தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது.
- நேற்று மதியம் 39-வட்ட அ.தி.மு.க. செயலாளரும், பகுதி இளைஞரணி செயலாளருமான திருச்சிற்றம்பலம், துணைச்செயலாளர் டைகர் சிவா ஏற்பாட்டில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு விசேஷ பூஜைகள், அபிஷேக, தீபாராதனை நடைபெற்று வருகிறது.
பால்குட ஊர்வலம்
விழாவையொட்டி நேற்று காலை கும்பபூஜை, பால்குடம் எடுத்தல், அம்மனுக்கு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, படையல் கஞ்சி வாருத்தல் நிகழ்ச்சி, மாலை மாவிளக்கு பூஜை, பொங்கல் இடுதல் நடைபெற்றது. இரவு 12 மணிக்கு படைப்பு தீபாராதனை நடைபெற்றது.
முன்னதாக நேற்று மதியம் 39-வட்ட அ.தி.மு.க. செயலாளரும், பகுதி இளைஞரணி செயலா ளருமான திருச்சிற்றம்பலம், துணைச் செயலாளர் டைகர் சிவா ஏற்பாட்டில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமை ச்சரும், தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான சண்முக நாதன் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் தொழில திபர் தெய்வநாயகம், அமைப்பு செயலாளர் சின்னத்துரை, கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், அவைத்தலைவர் திருப்பா ற்கடல், சிறுபான்மை அணி செயலாளர் பிரபாகர், மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், தொழிற்சங்க செயலாளர் டாக் ராஜா, பகுதி செயலா ளர்கள் முருகன், ஜெய்கணேஷ், சேவியர், வக்கீல்கள் மந்திரமூர்த்தி, சரவண பெருமாள், முனிய சாமி, வட்ட செயலாளர்கள் முருகன் மற்றும் நிர்வாகிகள் ரமேஷ் கிருஷ்ணன், சாம்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






