பரமன்குறிச்சி வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் கொடை விழாவில் இன்று நள்ளிரவு பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி

நள்ளிரவு 3மணிக்கு அக்னி குண்டத்தில் பக்தர்கள் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை கொடை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
சிறப்பு அலங்காரத்தில் சுவாமி
சிறப்பு அலங்காரத்தில் சுவாமி
Published on

உடன்குடி:

உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட பரமன்குறிச்சி வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் சித்திரை கொடை விழா வருடம் தோறும் சிறப்பாக கொண்டா டப்படும்.

வருசாபிஷேகம்

இந்த ஆண்டு திருவிழா கடந்த 30-ந் தேதி காலை 8 மணிக்கு வருசாபி ஷேகத்துடன் தொட ங்கியது. தொடர்ந்து பகல் 11 மணிக்கு புஷ்பா ஞ்சலி,நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜையும், தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு உடன்குடி வட்டாரப்பகுதியில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி, வறட்சி நீங்கி பசுமை வேண்டி பெண்கள் பாடல்கள் பாடி சிறப்பு வழிபாடு செய்யும் திரு விளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் நடந்தது. கடந்த 1-ந் தேதி காலை 8 மணிக்கு மேளதாளம் வாண வேடிக்கையுடன் பால்குடம் எடுத்துபவனி வருதல், நண்பகல் 12 மணிக்கு அலங்கார பூஜை, மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு7 மணிக்கு பரதநாட்டியம், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீப ஆரா தனையுடன் உச்சினிமாகாளி அம்மன் சிங்க வாகனத்தில் பவனி வருதல் நடந்தது.

நேற்று காலை 9 மணி மற்றும் இரவு 7 மணிக்கு வில்லிசை, நண்பகல் 1 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையுடன் அம்மன் வீதி உலா வருதல், இரவு 8 மணிக்கு சுமங்கலி பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு சந்தன மாரியம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் வழங்குதல் நடந்தது.

இன்று நண்பகல் 1 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையுடன் அம்மன் மஞ்சள் நீராடுதல், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் முத்தாரம்மன் சப்பரத்தில் பவனிவருதல். நள்ளிரவு 3மணிக்கு அக்னி குண்டத்தில் பக்தர்கள் பூக்குழி இறங்குதல், நாளை (4-ந் தேதி) இரவு 8 மணிக்கு கேரள புகழ் கலக்கல் கண்ணன் குழுவினரின் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி , 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சங்கடக்கார சுவாமி கோவிலில் காலை 8 மணிக்கு வருசாபிஷேகம், பகல் 12 மணிக்கு அலங்காரம், தீபாராதனை, இரவு12 மணிக்கு சிறப்பு படையல் பூஜை, மறுநாள் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கொடை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com