குலசேகரன்பட்டினத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி தேரியூர் அணி முதலிடம்

குலசேகரன்பட்டினம் ஹசனியா பவுன்சர்ஸ் மற்றும் ஊர்பொதுமக்கள் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான கிரிக்கெட்போட்டி 3 நாட்கள் நடந்தது.விழாவில் 3-வது வார்டு உறுப்பினர் ராமலிங்கம் துரை கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
முதலிடம் பிடித்த தேரியூர் அணியினர் கோப்பை, காசோலையுடன் போஸ் கொடுத்த காட்சி
முதலிடம் பிடித்த தேரியூர் அணியினர் கோப்பை, காசோலையுடன் போஸ் கொடுத்த காட்சி
Published on

உடன்குடி:

குலசேகரன்பட்டினம் ஹசனியா பவுன்சர்ஸ் மற்றும் ஊர்பொதுமக்கள் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான கிரிக்கெட்போட்டி 3 நாட்கள் நடந்தது. இதில் 30-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டது.

இதில் முதலிடம் பிடித்த தேரியூர் அணிக்கு ரூ.15ஆயிரத்தை குலசை ஊராட்சி தலைவர் சொர்ணபிரியாதுரையும், 2-வது இடம் பிடித்த குலசை ஹசனியா பவுன்சர் அணிக்கு ரூ.10ஆயிரத்தை தாண்டவன்காடு எஸ்.ஜி டிரேடர்ஸ், 3-வது இடம் பிடித்த ஆர்.எஸ்.புரம் அணிக்கு ரூ.6ஆயிரத்தை ஜெயா மல்டி ஸ்பெஷாலிட்டிகிளினிக், 4-வது இடம் பிடித்த குலசை ஹசனியா அணியிணருக்கு ரூ.4ஆயிரத்தை கிராமநிர்வாக அலுவலர் வைரமுத்து ஆகியோர் வழங்கினர். தொடர்நாயகன் விருதினை தேரியூர் சதீஷ்க்கு ஹாஜி வழங்கினார்.

சிறந்த பேட்ஸ்மேனாக தேரியூர் ரவி, சிறந்த பவுலராக முகமது யூசுப், கவுதம், சிறந்த பீல்டராக சபீர், சிறந்த அணியாக விண்ணவரம் அணியினரும் பரிசுகளை பெற்றனர். கிரிக்கெட் போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவிற்கு ஹாஜா, 11-வது வார்டு கவுன்சிலர் முகமது அபுல்ஹசன் ஆகியோர் தலைமை தாங்கினார். விழாவில் 3-வது வார்டு உறுப்பினர் ராமலிங்கம் துரை கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com