search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Poojai"

    • கோலம் போடும் போதும், சந்தனம்,குங்குமம் வைக்கும் போதும் கீழ்க்கண்ட ஸ்லோகம் சொல்லவும்.
    • இவ்வாறு ஸ்ரீ மகாலட்சுமியை மனம் ஒன்றி பூஜித்தால் செல்வ வளம் பெருகும் என சாஸ்திரம் கூறுகிறது.

    பூஜை அறையில் 21 தாமரைப் பூக்கள் வடிவத்தை அரிசி மாவால் கோலம் போட்டு அதன் மேல் சந்தன,

    குங்கும பொட்டு வைத்து ஸ்ரீ கனகதார ஸ்லோகம் ஒவ்வொன்றுக்கும் ஒரு காசு வைத்து பூஜிக்கவும்.

    கோலம் போடும் போதும், சந்தனம்,குங்குமம் வைக்கும் போதும் கீழ்க்கண்ட ஸ்லோகம் சொல்லவும்.

    ஓம்ஸ்ரீம் ஹீரீம் தனநாயிகாயை!

    ஸர்வா கர்ஷண தேவ்யாயை!

    ஸர்வ தாரித்ர்ய நிவாரண்யை!

    ஓம் ஸ்ரீம் ஹீரீம் ஸ்வாஹா!

    இவ்வாறு ஸ்ரீ மகாலட்சுமியை மனம் ஒன்றி தினமும் பூஜித்தால் செல்வ வளம் பெருகும் என சாஸ்திரம் கூறுகிறது.

    • 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக வந்திருந்து அம்மனை வழிபட்டனர்.
    • மதிய நேரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டத்தில் ஆனி மாத அமாவாசையையொட்டி அங்கு உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    கோத்தகிரி கடைவீதியில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனி மாத அமாவாசை நாளான நேற்று கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது.

    அப்போது 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக வந்திருந்து அம்மனை வழிபட்டனர். மதிய நேரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல கோத்தகிரி கடைவீதியில் உள்ள சவுடேஸ்வரி அம்மன், பண்ணாரி மாரியம்மன், டானிங்டன் கருமாரியம்மன் கோவில்களில் ஆனி அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடத்தப்பட்டன.

    • குலசேகரன்பட்டினம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா 10 நாட்கள் நடந்தது.
    • திருவிழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    உடன்குடி:

    உடன்குடி அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா 10 நாட்கள் நடந்தது. இக்கோவிலில் மாசி மற்றும் மகா சிவராத்திரி திருவிழாவையொட்டி முதல் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சிவராத்திரி அன்று இரவு 8 மணிக்கு மூன்று முகம் கொண்ட படலம் வீதி உலா வருதல், மறுநாள்மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும், திருமஞ்சனக் குடம் எடுத்து சக்தி நிறுத்துதல் நடந்தது.

    10-ம் திருநாள் மாலை 6 மணிக்கு அங்காள பரமேஸ்வரி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருதலும், இரவு 12 மணிக்கு மேல் கொடி இறக்கி கொடிமர பூஜை, பைரவர் பூஜை நடந்தது. பேச்சியம்மன் பிரம்மராட்சதை அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அமுதுபடைத்து சிறப்பு தீபாராதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    திருவிழா நாட்களில் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு காலை மற்றும் மாலையில் அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை திருவிழா குழுவினர் ராமன் பிள்ளை, ஜோதி முருகன் பிள்ளை மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    • கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடந்தது.
    • 16 வகையான பொருட்களால் அபிஷேகம்

    அரியலூர்:

    உடையார்பாளையம் சித்தேரிக்கரையில் உள்ள சசீதளாதேவி என்ற மகா மாரியம்மன் கோவிலில் ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து மகா மாரியம்மனுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ஸ்ரீ அண்ணாமலை ஈஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் பூஜையில் 16வகையான திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது.
    • மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் தாராபுரம் சாலை கே.செட்டிபாளையத்தில் உள்ள ஸ்ரீ அண்ணாமலை ஈஸ்வரர் கோவிலில் உள்ள சிவகாமியம்மன் சமேத ஸ்ரீ நடராஜபெருமானுக்கு ஆனி திருமஞ்சனம் பூஜை நடைபெற்றது. இதில் 16வகையான திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்பு மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    இதில் சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

    ×